குருப்பெயர்ச்சி பலன்கள் ; மகம் நட்சத்திர அன்பர்களே! வீட்டில் சுபகாரியம்; லாபம் இரட்டிப்பாகும்;சுறுசுறுப்பு; வேலையில் உயர்வு!   

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


மகம்:


கிரகநிலை:
குரு பகவான் உங்களின் பதினான்காம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.


பலன்கள்:


வாழ்க்கையில் வளமான வாழ்வு வாழ ஆசைப்படும் மகம் நட்சத்திர அன்பர்களே!

இந்த குருப்பெயர்ச்சியால் உங்களுக்கு பாக்கியத்திற்கு குறைவிருக்காது. முக்கிய நிகழ்வுகளில் நீங்கள் தான் முக்கியஸ்தர்களாக இருப்பீர்கள். குடும்பத்தில் சுபிட்சத்துக்கு குறைவிருக்காது. திருமண யோகம்,. குழந்தை பாக்கியம், புது மனை வாங்குதல், வாகனம் வாங்குதல் போன்ற சுப காரியங்கள் வரிசையாக நடக்கும். பண வரவும் சீராக இருக்கும் என்பதால் அவற்றை சரியான முறையில் முதலீடு செய்யுங்கள். பிற்காலத்திற்கு உதவியாக இருக்கும்.

தொழிலில் சிறப்பான லாபத்தை அடையப் போகிறீர்கள். சரியான முறையில் முதலீடு செய்வீர்கள், உங்கள் லாபம் இரட்டிப்பாகும். சோம்பல் இன்றி உழைக்கும் எண்ணம் தோன்றும். இதனால் உற்பத்தி அதிகமாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலிடத்துடன் இருந்த வந்த சில சச்சரவுகள் முடிவுக்கு வரும். உங்கள் பக்க நியாயத்தை எடுத்துக் கூற ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
பெண்களுக்கு கணவருடன் இருந்துவந்த சில மனக்குழப்பங்கள் தீரும். மனதில் உற்சாகம் பிறக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவார்கள்.

மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை ஆசிரியரிடம் கேட்டு தெளிவடையுங்கள். மேனேஜ்மெண்ட் சம்பந்தமான படிப்புகளில் சிறந்து விளங்குவீர்கள்.
அரசியல்துறையினருக்கு சில முக்கிய பொறுப்புகள் மேலிடத்திலிருந்து கிடைக்கப்பெறும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையே அமையும்.

கலைத்துறையினர் தற்போது கிடைக்கும் ஊதியத்தை விட அதிக ஊதியத்திற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.

பரிகாரம்:

ஆஞ்சநேயர் வழிபாடு தொழிலை சிறக்க வைக்கும்.

மதிப்பெண்கள்: 72% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
*********************
*

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்