- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
புனர்பூசம்:
கிரகநிலை:
குரு பகவான் உங்களின் பதினேழாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பலன்கள் :
அமைதியான வாழ்க்கையை விரும்பும் புனர்பூச நட்சத்திர அன்பர்களே!
இந்தக் குருப்பெயர்ச்சி உங்கள் முக்கியத்துவத்தை மற்றவர்களுக்கு காட்டும் விதமாக அமைகிறது. குடும்பத்தில் அனைவரும் உங்களை மதித்து, உங்கள் பேச்சுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்காள். நீண்ட நாட்களாக உடலில் இருந்த நோய் குணமாகும். எந்த தொந்தரவும் இருக்காது .
தொழிலில் இதுவரை இருந்த தடைகள் விலகும். நீங்கள் உங்கள் தொழிலின் உச்சத்தை அடைய வழி கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
உத்தியோகஸ்தர்கள் உங்களின் பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருந்திருப்பீர்கள். அவை இப்போது உங்களுக்கு விரும்பிய படியே கிடைக்கும். கவலை வேண்டாம்.
பெண்களுக்கு நிம்மதியான காலகட்டமாக இருக்கும். சரியான நேரத்தில் உறங்காமல் தவித்து வந்த காலகட்டங்கள் மாறும். பயணம் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் அகலும். சிலர் பாதியில் நிறுத்திய படிப்பைத் தொடரவும் வாய்ப்பு கிடைக்கும்.
அரசியல்துறையினருக்கு பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறையும். வரவேண்டிய பணம் வந்து சேரும். அடிக்கடி வெளியூர் சென்று வரவேண்டியதிருக்கும்.
கலைத்துறையினருக்கு யோகமான காலகட்டம். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அடிக்கடி வெளியூர் சென்று வருவீர்கள். உங்களின் பெயர் அனைவருக்கும் தெரியும் வகையில் சில முக்கிய படங்களில் நடிப்பீர்கள்.
பரிகாரம்:
நவக்கிரக குருவை பிரார்த்தனை செய்தால் மங்கல காரியங்கள் நடக்கும்.
மதிப்பெண்கள்: 65% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
**********************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago