- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
கடகம் (புனர் பூசம் 4ம் பாதம்,பூசம், ஆயில்யம்)
கிரகநிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன்,சந்திரன், செவ்வாய், புதன் - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன், கேது - களத்திர ஸ்தானத்தில் குரு (வ), சனி - லாப ஸ்தானத்தில் ராகு என கிரக நிலவரம் உள்ளது.
பலன்கள்:
எந்த ஒரு செயலையும் முன்கூட்டியே திட்டமிட்டு செய்து எதிரிகளை அசத்தும் கடகராசியினரே!
இந்த வாரம் வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும். செய்யும் காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். சிலருக்கு உங்கள் செல்வாக்கைக் கண்டு பொறாமை உண்டாகலாம் கவனம் தேவை. எதிர்ப்புகள் விலகும். காரிய தடைகள் நீங்கும்.
தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் வேகம் பிடிக்கும். வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் வேலைப் பளு இருந்தாலும் எல்லா பணிகளையும் திறம்பட செய்து முடிப்பார்கள். பணவரத்து திருப்தி தரும்.
குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளால் பெருமை சேரும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
பெண்களுக்கு காரிய தடைகள் நீங்கி எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வாக்குவன்மையால் நன்மை உண்டாகும்.
மாணவர்களுக்கு படிக்காமல் விட்ட பாடங்களை படிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள்.
பரிகாரம்: திருவொற்றியூர் வடிவுடை அம்மனை தரிசித்து அர்ச்சனை செய்து வழிபட மனக்குழப்பம் நீங்கும். எதிலும் வெற்றி உண்டாகும்.
******************************************************
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
கிரகநிலை:
தன ஸ்தானத்தில் சூர்யன்,சந்திரன், செவ்வாய், புதன் - சுக ஸ்தானத்தில் சுக்ரன், கேது - ரண் ருண ரோக ஸ்தானத்தில் குரு (வ), சனி - தொழில் ஸ்தானத்தில் ராகு என கிரக நிலவரம் உள்ளது.
பலன்கள்:
எதிரியின் நிலை அறிந்து அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் திறமை உடைய சிம்மராசியினரே!
இந்த வாரம் எதையும் ஒரு முறைக்கு பலமுறை ஆராய்ந்து முடிவு எடுப்பது நல்லது. காரியங்களில் தடைதாமதம் உண்டாகலாம். முயற்சிகளில் உடனடியாக பலன் காண்பது அரிது. எந்த ஒரு வேலைக்கும் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். வாகனங்களில் செல்லும்போதும் ஆயுதங் களை கையாளும்போதும் கவனம் தேவை. சகோதரர்கள் வழியில் ஏதேனும் பிரச்சினை வரலாம்.
தொழில் வியாபாரம் குறிப்பாக விவசாயம், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் குறைவான லாபம் வரக் காண்பார்கள். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். உத்தி யோகஸ்தர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.
குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் கோபம் தூண்டக்கூடிய வகையில் இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக் கிடையே அனுசரித்துச் செல்வதும் நன்மை தரும்.
பெண்களுக்கு எந்த ஒரு வேலைக்காகவும் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். பயணம் செய்யும் போது கவனம் தேவை.
மாணவர்களுக்கு எதிர்கால கல்வியைப் பற்றி சிந்தனை மேலோங்கும். கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது வெற்றிக்கு உதவும்.
பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வணங்க காரிய வெற்றி உண்டாகும்.
******************************************************
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
கிரகநிலை:
ராசியில் சூர்யன்,சந்திரன், செவ்வாய், புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன், கேது - பஞ்சம ஸ்தானத்தில் குரு (வ), சனி - பாக்கிய ஸ்தானத்தில் ராகு என கிரக நிலவரம் உள்ளது.
பலன்கள்:
மிக எளிதில் எதிலும் உயர்ந்த நிலைக்கு வரக்கூடிய திறமை மிகுந்த கன்னி ராசியினரே!
இந்த வாரம் காரியங்கள் வெற்றியைத் தரும். பண வரத்து வழக்கத்தை விட அதிகரிக்கும். ஆனால் செலவும் அதற்கு ஏற்றார்போல் இருக்கும். மற்றவர்களது உதவியும் கிடைக்கும். சாதுர்யமாக பேசி எதிலும் வெற்றி காண்பீர்கள். அனுபவ பூர்வமான அறிவுதிறன் அதிகரிக்கும்.
தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பேச்சாற்றலால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பீர்கள். பங்கு மார்க்கெட் லாபம் ஓரளவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல்திறன் அதிகரிக்கும். பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
குடும்பத்தில் மனம் மகிழும்படியான நிகழ்ச்சி நடக்கும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். சிலர் அதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
பெண்களுக்கு சாதுர்யமாக பேசி எல்லா காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து கூடும். பொறுப்புகள் அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு கல்விக்கான செலவு கூடும். சகமாணவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும்.
பரிகாரம்: திருப்பதி பெருமாளை வணங்க கடன் சுமை குறையும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
******************************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago