- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்)
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ஸ்தானத்தில் புதன், செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் குரு (வ) என கிரகநிலை உள்ளது.
இந்த வாரம் பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது.
» கடக ராசி அன்பர்களே! உங்கள் மீது பொறாமை; பண வரவு உண்டு; மதிப்பு கூடும்! செப்டம்பர் மாத பலன்கள்
» ஈட்டி, அங்குசம், சொக்கநாத ரகசியம்; உங்கள் நட்சத்திரங்கள்...வரம் அருளும் தெய்வங்கள் – 24
வீண் அலைச்சலுக்குப் பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் நல்ல லாபம் பார்ப்பார்கள். வரவேண்டிய பாக்கிகள் தாமாக வந்து சேரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் எடுத்த வேலையை சரியான நேரத்தில் முடித்து பாராட்டினைப் பெறுவீர்கள். சக பணியாளர்களிடம் வீண் பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது.
குடும்பத்தில் விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கலாம். பெண்களுக்கு எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும் நல்லது.
கலைத்துறையினருக்கு எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்கத் தூண்டும். அரசியல்வாதிகள் வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு வீண் அலைச்சலைத் தவிர்ப்பதும், பாடங்களில் சந்தேகம் நீங்கி படிப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்
பரிகாரம்: தினமும் கந்த சஷ்டி கவசம் சொல்லி வழிபாடு செய்து வாருங்கள். ஆரோக்கியத்தில் மேம்பாடு கிடைக்கும்.
***************************************************************************************
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)
கிரகநிலை:
ராசியில் ராகு - சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம ஸ்தானத்தில் புதன், செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் குரு (வ) என கிரகநிலை உள்ளது.
இந்த வாரம் திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள்.
பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். வேளை தவறி சாப்பிட வேண்டி இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும். உடல் ஆரோக்கியம் அடையும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.
தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடின உழைப்புக்குப் பின் முனனேற்றம் அடைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாகச் செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள்.
குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சகோதரர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும்.
பெண்களுக்கு முக்கியமான வேலைகளில் தாமதம் உண்டாகும். கலைத்துறையினர் வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிச் சென்று விடுவது நல்லது. அரசியல்வாதிகள் மற்றவர்களுக்கு உதவும்போது கவனமாக இருப்பது நல்லது.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
பரிகாரம்: தினமும் கருடாழ்வாரை வழிபட்டு வர நன்மையான பலன்களைப் பெறுவீர்கள்.
***************************************************************************************
மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் சூர்யன் - சுகஸ்தானத்தில் புதன், செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ) - அயனசயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது.
இந்த வாரம் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நன்மை தரும். புதிய ஆர்டர் விஷயமாக தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வெளியூர் செல்ல நேரிடும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.
உறவினர்கள், குடும்ப நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை ஆலோசனை செய்வதையும், அடுத்தவர் பற்றி பேசுவதையும் தவிர்ப்பது நல்லது.
பெண்களுக்கு கூட இருப்பவர்களிடம் எந்த விஷயத்தையும் பகிரும்போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.
அரசியல்வாதிகளுக்கு முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். மாணவர்களுக்கு பாடங்களைப் படிக்கும்போது மனதை ஒரு முகப்படுத்தி படிப்பது நல்லது. கவனம் சிதற விடாமல் இருப்பது வெற்றிக்கு உதவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி
பரிகாரம்: தினமும் ஐயப்பனை வழிபட்டு வர ஆரோக்கியம் மேம்படும்.
***************************************************************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago