மேஷம், ரிஷபம், மிதுனம்; வார ராசிபலன்கள்; ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம்
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்)

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - ரண ருண ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் குரு (வ) என கிரகநிலை உள்ளது.

மேஷ ராசி அன்பர்களே!

இந்த வாரம் எந்த விஷயத்திலும் இருந்த தடைகள் நீங்கி நிலைமை மாறும். சொன்னால் சொன்ன நேரத்தில் உங்களால் இனி செல்ல முடியும். குடும்பத்தில் நல்ல நல்ல விஷயங்கள், விஷேசங்கள் நடக்கும்.

உங்கள் தைரியத்திற்கு இறைவனை வேண்டுங்கள். பிள்ளைகளின் மேல் கவனம் வைக்க வேண்டும். முன்னோர்களை அமாவாசை தோறும் வழிபடவும்.
தொழில் செய்பவர்கள் புதிய முதலீடுகள் செய்யும்போது கவனம் தேவை. அனுபவமிக்கவர்களுடன் கலந்து ஆலோசித்து முதலீடு செய்வது நலம். உங்கள் முயற்சி வீண் போகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு உங்களுக்கு பணியிடத்தினில் அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம்.

பெண்களுக்கு உடல்நிலையில் கவனம் தேவை. மருத்துவத்திற்கு என சேமிக்க பழகுங்கள். திடீர் செலவுகள் வந்து கடுப்பேற்றலாம். கவனம் தேவை. வாழ்க்கைத்துணையுடன் அமைதியை கடைபிடியுங்கள்.

மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. நேரத்தை வீணாக்காமல் எச்சரிக்கையுடன் படிக்கவும். வெற்றி நிச்சயம். குறுக்கு வழிகளை நாடக்கூடாது. அவமானம் ஏற்படலாம்.

பரிகாரம்: தினம்தோறும் நவக்கிரக செவ்வாயை வழிபட நன்று.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி
************************************************************************

ரிஷபம்

(கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

கிரகநிலை:
ராசியில் ராகு - சுக ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் குரு (வ) என கிரகநிலை உள்ளது.

ரிஷப ராசி அன்பர்களே!

இந்த வாரம் எதிர்பார்த்திருந்த தனலாபம், தேக ஆரோக்கியத்தில் நன்மை, தாயார் தாய் வழி உறவினர்களுடன் இருந்த சுமூக நிலைமை என அனைத்து நல்ல பலன்களும் அப்படியே நடக்கும். குடும்பத்தில் அமைதி எற்படும்.

கணவர், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

தொழில் செய்பவர்கள் லாபகரமான தொழில்களில் முதலீடு செய்யுங்கள். எதிர்காலத்திற்கு சேமித்து வைக்கும் நேரமிது. வீண் ஆடம்பர செலவுகள், தேவையற்ற வீண் பேச்சுகள் ஆகியவற்றை குறையுங்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலை செய்யும் இடத்தினில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு பொன்னான காலமிது.

பெண்களுக்கு வீடு, மனை வாகனம் வாங்கும் யோகம் அமையும். தாயார், தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்பட்டு மறையும். முன்னோர்கள் வழிபாடு மிகவும் முக்கியமானது என்பதை உணர்ந்து அதை செய்ய மறவாதீர்கள்.

மாணவர்கள் கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிறிது முயற்சி தேவை.

பரிகாரம்: அம்பாளை தீபம் ஏற்றி வழிபடுங்கள். வயதான தம்பதிகளிடம் ஆசீர்வாதம் பெறுங்கள். எல்லா காரியங்களிலும் நன்மை உண்டாகும். செய்தொழில் சிறக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

*******************************

மிதுனம்
(மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

தைரிய ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - சுகஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ) - அயனசயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது.

மிதுன ராசி அன்பர்களே!

இந்த வாரம் இனியாவது வாக்கு கொடுப்பதற்கு முன் யோசித்து கொடுக்கவும். தைரியம் பிரகாசிக்கும். எனவே எந்த முடிவையும் சட்டென்று முடிவெடுங்கள். நல்ல விஷயங்களை தள்ளிப் போட வேண்டாம்.

வீடு, மனை, ஆடை, ஆபரணங்கள் போன்ற விஷயங்களில் அவசரம் வேண்டாம். குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான துணி போன்றவைகளை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும்.

தொழிலில் லாபகரமான முதலீடுகளில் முதலீடு செய்ய தகுதியானவர்களின் ஆலோசனைகளைப் பெற்று செயல்படவும். தூங்கப்போகும் முன் வீண் கற்பனைகள், சந்தேகங்கள் கூடவே கூடாது.

உத்தியோகஸ்தர்களுக்கு பணி செய்யும் இடத்தினில் எச்சரிக்கை தேவை. சிலருக்கு பணியின் காரணமாக வெளிநாடு அயலூர் செல்ல வேண்டி வரலாம்.

பெண்களுக்கு வாழ்க்கைத்துணையுடன் உறவு சிறக்கும். நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். எதிரிகளை வீழ்த்த வியூகம் அமைப்பீர்கள். வழக்கு வியாஜ்ஜியங்களில் உங்கள் பக்கம் வெற்றி கிடைக்கும். தந்தையாருடன் உறவு பிரகாசிக்கும். பிதுரார்ஜித சொத்துகள் உங்களை வந்து அடையும்.

மாணவர்களுக்கு புத்தம் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். படிப்பில் முன்னேற்றம் இருக்கும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள்.

பரிகாரம்: நவக்கிரகத்தை வழிபட்டு வரவும். எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
************************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்