- ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்
சுவாதி நட்சத்திரம் பற்றி கடந்த அத்தியாயத்தில் விரிவாகக் கண்டோம். இந்த வாரம் நாம் விசாகம் நட்சத்திரம் பற்றியும், அதற்கான சுப தாரை வடிவம் பற்றிய தகவல்களையும் தெளிவாகவும் விரிவாகவும் பார்க்கலாம்.
விசாகம்
விசாகம் என்பது வான மண்டலத்தில் துலாம் ராசி மண்டத்திலும் மற்றும் விருச்சிக ராசி மண்டலத்திலும் இருக்கும் நட்சத்திரம். நாம் கண்களில் காணும் போதும் வெற்றி வளைவு போலவும், ஆண்டாள் மலை போலவும், பாயும் புலி போலவும், விசிறி போலவும், தாமரை இலை போலவும் காட்சி தரும். ஆகவே இதன் வடிவமாக முறம், விசிறி, பட்டாம்பூச்சி மற்றும் வெற்றி வளைவு ஆகியவற்றைக் கூறலாம். இதன் அதி தேவதை குரு கிரகம். இது சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் மேல்வானத்தில் பிரகாசமாகக் காணப்படும் நட்சத்திரம்.
» மகரம், கும்பம், மீனம்; வார ராசிபலன்கள்; ஆகஸ்ட் 25ம் தேதி வரை
» துலாம், விருச்சிகம், தனுசு; வார ராசிபலன்கள்; ஆகஸ்ட் 25ம் தேதி வரை
இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கு குரு திசையே முதலில் தொடங்கும். இந்த ராசியில் குரு பலம் பெறுகிறது மற்றும் சூரியன் பலம் இழக்கிறது. ஆகவே இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கு சூரியன் நீச்சம் அல்லது பலம் இழப்பது நன்மையானது அல்ல. எனவே இவர்கள் எந்தமாதிரியான தெய்வங்களை வணங்கவேண்டும் என்று இந்த அத்தியாயத்தில் காணலாம்.
கூலிங் கிளாஸ் - விசாகம் - தாரை ரகசியம்
இரண்டாய் பிரிப்பது என்ற பொருள் கொண்டது விசாக நட்சத்திரம். விசாகம், துலாம் மற்றும் விருச்சகம் என்ற இரண்டு ராசிகளில் அமைத்திருக்கிறது. சூரியன் மற்றும் சந்திரன் ராசிகள் என்பதால், இவை இரண்டும் ஒளியைக் குறைவாகப் பெறுபவை. எனவே நாம் அணியும் கூலிங் கிளாஸ் விசாக வடிவமாகும். விசாகத்தின் வடிவம் விசிறி, பட்டாம்பூச்சி மற்றும் தாமரை இலை அல்லது முறம் என்பதாகும். எனவே இரண்டு முறங்களை இணைத்த அமைப்பு போல இருக்கும் கூலிங் கிளாஸ் விசாக வடிவம் என்பதை அறிந்துகொள்ளலாம்.
விசாகத்தை சம்பத்து தாரையாகக் கொண்டவை சுவாதி, திருவாதிரை, சதயம். எனவே சுவாதி, திருவாதிரை, சதயம் நபர்கள் கூலிங் கிளாஸ் உபயோகிப்பதால், சர்வ சம்பத்துகளையும் பெறலாம்.
விசாகத்தை க்ஷேம தாரையாகக் கொண்டவை ஹஸ்தம், திருவோணம், ரோஹிணி. எனவே ஹஸ்தம், திருவோணம், ரோஹிணி நட்சத்திர நபர்கள் கூலிங் கிளாஸ் பயன்படுத்துவது நல்லது. காரிய ஸித்திகள் அனைத்தையும் பெறலாம்.
விசாகத்தை சாதக தாரையாகக் கொண்டவை பூரம், பரணி, பூராடம். எனவே பூரம், பரணி, பூராட நட்சத்திர நபர்கள் கூலிங் கிளாஸ் உபயோகித்து சாதக சூழல்களைப் பெறலாம்.
விசாகத்தை பரம மித்ர தாரையாகக் கொண்டவை அனுஷம், உத்திரட்டாதி, பூசம். எனவே அனுஷம், உத்திரட்டாதி, பூசம் நட்சத்திர நபர்கள் கூலிங் கிளாஸ் அடிக்கடி பயன்படுத்தி வந்தால், வாழ்வில் நற்பலன்களையெல்லாம் பெறலாம்.
ரேவதி நட்சத்திர எம்.ஜி.ஆர் அவர்கள் தனது மித்ர தாரையாக கூலிங் கிளாஸ் பயன்படுத்தி பலன்களைப் பெற்றார்.
திருவோணத்தின் க்ஷேம தாரை விசாகம். திருவோண நட்சத்திர ரஜினிகாந்த் அடிக்கடி கூலிங் கிளாஸ் உபயோகித்து வந்தார் என்பதும் அவர் எவ்வளவு பெரிய வெற்றிகளை அடைந்திருக்கிறார் என்பதும் நாம் அனைவரும் அறிந்ததுதான்!
சேவற்கொடி
இந்தக் கொடி கொக்கரிக்கும் சேவலின் திறந்த வாயைப் போல இருப்பதால் இதன் பெயர் சேவற்கொடி.
சேவற்கொடி - விசாகம்
விசாகம் என்பது முருகனின் ஜென்ம தாரை ஆகும்.
இந்த சேவற்கொடி உருவத்தை விசாகம், பூரட்டாதி, புனர்பூசம் நட்சத்திர நபர்கள் உபயோகித்து வரலாம். அவர்கள் இதை உபயோகம் செய்யும் பொழுது பாதுகாப்பு உணர்வைப் பெறலாம்.
அதுபோல சுவாதி, திருவாதிரை மற்றும் சதயம் நட்சத்திரக்காரர்கள் இந்த வடிவத்தை உபயோகம் செய்து அல்லது சேவற்கொடி தாங்கிய முருகப் பெருமானை வழிபட்டு செல்வ வளத்தைப் பெறலாம்.
அனுஷம், பூசம், உத்திரட்டாதி நபர்கள் இந்த சேவற்கொடி வடிவத்தைப் பயன்படுத்தி அல்லது சேவற்கொடியோன் என அழைக்கப்படும் முருகப் பெருமானை வழிபட்டு நல்வழி பெறலாம். வாழ்வில் அனைத்து வெற்றிகளையும் அடையலாம்.
சோழர் புலிக்கொடி தாரை ரகசியம்
மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்தது சதயம். இது ராகுவின் நட்சத்திரம். ராகுவின் மற்ற நட்சத்திரங்கள் சுவாதி மற்றும் திருவாதிரை ஆகும். இதன் சம்பத்து நட்சத்திரங்கள் விசாகம், பூரட்டாதி மற்றும் புனர்பூசம் ஆகும்.
விசாகம் என்பது பாயும் புலி வடிவம் கொண்ட நட்சத்திரம். இது மேற்கண்ட ராகுவின் நட்சத்திரங்கள் அனைத்திற்கும் சம்பத்துகளைத் தரும். புலிக்கொடி சோழர்களின் ஆட்சிக்காலத்தில் முதலில் இருந்து பயன்படுத்தி இருந்தாலும், ராஜராஜ சோழனின் காலத்தில் தான் அதிவேகமாக உலகமெங்கிலும் சோழர்களின் புகழ் பரப்பியது. இந்த புலிக்கொடி, ராஜராஜ சோழரின் பல பிரமாண்ட வெற்றிக்கு வித்திட்டது. ராஜராஜனின் நட்சத்திரம் சதயத்தின் சம்பத்து தாரை புலி வடிவம் கொண்ட விசாக நட்சத்திரம்.
அதுபோலவே கடாரம் கொண்டான் என்று அழைக்கப்பட்ட ராஜேந்திர சோழனின் ஜென்ம நட்சத்திரம் "திருவாதிரை". இவரது காலத்திலும் பல சாதனைகள் புரிய புலிக்கொடி உதவியது. புலி என்பது திருவாதிரைக்கும் சம்பத்து நட்சத்திரம் ஆகும்.
ஆகவே பாயும் புலி வடிவத்தை திருவாதிரை, சுவாதி, சதயம், விசாகம், புனர்பூசம், பூரட்டாதி, அனுஷம், பூசம், உத்திரட்டாதி நட்சத்திர நபர்கள் உபயோகம் செய்து நலம் பெறலாம்.
இதுவரை விசாகம் நட்சத்திரம் பற்றி அறிந்தோம். அடுத்த அத்தியாயத்தில், அனுஷம் நட்சத்திரம் பற்றிப் பார்க்கலாம்.
- வளரும்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago