- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)
கிரகநிலை:
ராசியில் சனி (வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (வ) - பஞ்சம ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.
23ம் தேதி புதபகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
» துலாம், விருச்சிகம், தனுசு; வார ராசிபலன்கள்; ஆகஸ்ட் 25ம் தேதி வரை
» கடகம், சிம்மம், கன்னி; வார ராசிபலன்கள்; ஆகஸ்ட் 25ம் தேதி வரை
இந்த வாரம் எதையும் யோசித்துச் செய்வது நன்மை தரும்.
கோபமாகப் பேசுவதை தவிர்த்து நிதானமாக பேசி செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாயால் எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
வீடு மனை வாகன ப்ராப்தி ஏற்படும். குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம். அதற்கு இடம் கொடுக்காமல் நடந்து கொள்வது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. குழந்தைகளிடம் இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் நீங்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்கள் செல்லும்போதும் வாகனங்களில் செல்லும்போதும் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மன வருத்தம் நீங்கும்.
பெண்களுக்கு யோசித்து செய்யும் வேலைகள் சாதகமாக முடியும். கலைத்துறையினருக்கு பாராட்டுகள் வரும். உறவுநிலை சிறக்க விட்டுக் கொடுத்தல் அவசியம்.
மாணவர்களுக்கு திட்டமிட்டு பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் அவசரம் காட்டாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
பரிகாரம்: சனீஸ்வர பகவானை வணங்கி வர உடல் ஆரோக்கியம் பெறும்.
*****************************
கும்பம்
(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)
கிரகநிலை:
ராசியில் குரு (வ) - சுக ஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் கேது - அயனசயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலை உள்ளது.
23ம் தேதி புதபகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இந்த வாரம் அறிவுத் திறமை கூடும்.
சில முக்கிய முடிவுகள் என்பதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள்.
வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். வீடு மனை ஆகியவற்றை வாங்குவதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கும். குடும்பத்தில் கணவன்-மனைவிக்கிடையே எதையும் மனம் விட்டுப் பேசி அதன் பிறகு செய்வது நன்மை தரும்.
குடும்பத்தில் அமைதி உண்டாக கோபத்தைக் குறைப்பது நல்லது. தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் தராவிட்டாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது. தொழில் விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தள்ளிப் போடுவது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மற்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது வீண் பிரச்சினை வராமல் தடுக்கும்.
பெண்கள் அறிவுபூர்வமாக செயல்பட்டு சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கலைத்துறையினருக்கு பாதுகாப்பு அவசியம். மாணவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய எண்ணம் உண்டாகும். மேல்படிப்பு பற்றிய சிந்தனையில் ஈடுபடுவீர்கள். சக மாணவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது.
பரிகாரம்: விநாயகரை வணங்குவதால் தடை தாமதம் நீங்கும்.
**********************
மீனம்
(பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் ராகு - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய், புதன் - சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயனசயன போக ஸ்தானத்தில் குரு (வ) என கிரகநிலை உள்ளது.
23ம் தேதி புதபகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இந்த வாரம் பொருள் சேர்க்கை உண்டாகும்.
விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். செவ்வாய் சஞ்சாரம் இட மாற்றத்தை ஏற்படுத்தும். எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை உண்டாகும். இரவில் நீண்ட நேரம் கண் விழிக்க வேண்டி வரலாம்.
குடும்பத்தில் இருப்பவர்களால் இருந்து வந்த மன வருத்தம் நீங்கும். வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் நீடித்து வந்த ஆரோக்கிய குறைபாடு பூர்த்தியாகும்.
வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு கூடும். விருந்தினர் வருகை இருக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்ததை விட குறைவான லாபம் தரும். செலவுகள் கூடும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் விவகாரங்களில் கொடுக்கல் வாங்கலிலும் எச்சரிக்கை தேவை. பொறுப்புகள் கூடும்.
பெண்களுக்கு பயணங்கள் செல்ல நேரிடலாம். எடுத்த வேலையைச் செய்து முடிக்க காலதாமதமாகலாம். கலைத்துறையினருக்கு நண்பர்களால் இருந்து வந்த தொல்லைகள் தானாக விலகும்.
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் நேரம் பாடங்களைப் படிப்பது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும்.
பரிகாரம்: நவக்கிரக குருவை வணங்கி வர முன்னேற்றம் உண்டாகும்.
*************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago