- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
துலாம்
(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம ஸ்தானத்தில் குரு (வ) - அஷ்டம ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய், புதன் - விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகநிலை உள்ளது.
23ம் தேதி புதபகவான் விரய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இந்த வாரம் காரியங்கள் சாதகமாக நடைபெறும்.
» கடகம், சிம்மம், கன்னி; வார ராசிபலன்கள்; ஆகஸ்ட் 25ம் தேதி வரை
» மேஷம், ரிஷபம், மிதுனம்; வார ராசிபலன்கள்; ஆகஸ்ட் 25ம் தேதி வரை
ராசிக்கு நான்கில் செவ்வாய் இருக்கிறார். பணத்தேவை பூர்த்தியாகும். எதையும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். எதிலும் இருந்த இழுபறியான நிலை மாறும். குடும்பத்தில் எதைப் பேசுவதாக இருந்தாலும் பேச்சில் நிதானம் தேவை.
வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் டென்ஷன் உண்டாகலாம். பிள்ளைகளை அனுசரித்துச் செல்வது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் டென்ஷனும் வீண் அலைச்சலும் இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதம் ஏற்படலாம். பணவரத்து எதிர்பார்த்ததை விட குறையக் கூடும்.
கடன் விஷயங்களை தள்ளிபோடுவது நல்லது. புதிய நபர்களுக்கு பொருட்களை சப்ளை செய்யும்போது கவனம் தேவை. பெண்களுக்கு காரியங்களை சாதகமாக செய்து முடிக்க முடியும். கலைத்துறையினருக்கு சொத்துகளை அடைவதில் இருந்த தடைகள் அகலும்.
மாணவர்களுக்கு பாடங்களைப் படிப்பதில் பின்னடைவு ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. திடீர் டென்ஷன் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
பரிகாரம்: மாரியம்மனை வழிபட தடை தாமதம் நீங்கும்.
***********************
விருச்சிகம்
(விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை)
கிரகநிலை:
ராசியில் கேது - தைரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் குரு (வ) - களத்திர ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய், புதன் - லாப ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகநிலை உள்ளது.
23ம் தேதி புதபகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இந்த வாரம் போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
சின்ன விஷயங்களால் கூட மன நிறைவு உண்டாகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சைக் கேட்பதைக் குறைப்பது நல்லது. எந்தச் செயலையும் திட்டமிட்டுச் செய்வது நன்மை தரும். சின்ன விஷயங்கள் கூட மன நிறைவு தரும்படி நடக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். கணவன் -மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துப் பேசுவது நல்லது.
எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது. பெண்கள் பேச்சுத் திறமையால் காரியங்களை எளிதாகச் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள்.
கலைத்துறையினருக்கு திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
பரிகாரம்: நவகிரகத்தில் செவ்வாயை வணங்குவது நன்மை தரும்.
***********************
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்)
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய ஸ்தானத்தில் குரு (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய், புதன் - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் - அயனசயன போக ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.
23ம் தேதி புதபகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இந்த வாரம் ராசிநாதன் குரு சஞ்சாரத்தால் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும்.
எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். சூரியன் புதனுடன் சேர்க்கை பெறுவதால் எதிலும் வெற்றியையும் சந்தோஷத்தையும் தரும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும்.
நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகளில் தீர்வு கிடைக்கும். வீடு மனை சார்ந்த விஷயங்கள் நன்மை தரும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள்.
குடும்பத்தில் இருந்து வந்த இறுக்க நிலை மாறும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். துணிச்சலாக முயற்சிகள் மேற்கொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். மேல் அதிகாரிகளால் நன்மை ஏற்படும். பெண்களுக்கு எதிர்ப்புகள் விலகும். கலைத்துறையினருக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
பரிகாரம்: சித்தர்களை வணங்குவதால் தைரியம் கூடும்.
**********************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago