மகரம், கும்பம், மீனம்; வார ராசிபலன்கள்; ஆகஸ்ட் 5 முதல் 11ம் தேதி வரை

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

கிரகநிலை:
ராசியில் சனி (வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (வ) - பஞ்சம ஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன், செவ்வாய் - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.
05.08.2021 - அன்று புத பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த காலகட்டத்தில் எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். சுக்கிரன் சஞ்சாரம் அனுகூலமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வியாபாரப் போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் விரிவாக்கத்திற்குத் தேவையான பண உதவிகள் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கப் பெறுவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு திருப்தி தரும்.

உறவினர்கள் - நண்பர்கள் மூலம் நன்மை நடக்கும். பெண்களுக்கு பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அரசியல்வாதிகள் எதிர்ப்புகளையும் மீறி முன்னேறுவர். சகாக்கள் மத்தியில் ஆதரவு பெருகும்.

கலைத்துறையினரின் படைப்புத் திறன் வளரும். பொது நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குமளவுக்குப் பிரபலமாவார்கள். மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும்.

பரிகாரம்: விநாயகரை தீபம் ஏற்றி வணங்கி வர கஷ்டங்கள் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வெள்ளி
**************

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:
ராசியில் குரு (வ) - சுக ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன், செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் கேது - அயனசயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலை உள்ளது.

05.08.2021 - அன்று புத பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த காலகட்டத்தில் வீணாக மனதை உறுத்திக் கொண்டிருந்த கவலை நீங்கும்.

எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் காரியத் தடங்கல் ஏற்படும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும்போது கவனம் தேவை. பயணத்தினால் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும்.

புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலையும்படி இருந்தாலும் சாதகமாக முடியும். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள்.

குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். பெண்கள் மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களால் ஆதாயம் ஏற்படும்.

கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும். வராமல் இழுபறியாக இருந்த பணம் வந்து சேரும். மாணவர்களுக்கு முயற்சிகள் பலிதமாகும்.

பரிகாரம்: பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபடுவது காரியத் தடைகளைப் போக்கும். நன்மைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - வியாழன்
**************

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் ராகு - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன், செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயனசயன போக ஸ்தானத்தில் குரு (வ) என கிரகநிலை உள்ளது.

05.08.2021 - அன்று புத பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த காலகட்டத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதை மறையும். ராசிநாதனின் சஞ்சாரம் எல்லாவற்றிலும் இருந்து வந்த மனக்கவலையை நீக்கும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கை தேவை.

தாயாரின் உடல்நிலையில் கவனம் அவசியம். எந்த ஒரு வேலையைச் செய்வதாக இருந்தாலும் தகுந்த முன்னேற்பாடுகள் தேவை. தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணவரத்து இருக்கும். பாக்கிகள் வசூலாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாகக் கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும்.

கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். பெண்களுக்கு திடீர் செலவு உண்டாகலாம்.

காரியங்களில் தடை தாமதம் ஏற்படலாம். கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். மாணவர்களுக்கு கல்வியில் இதுவரை இருந்து வந்த தடைகள் அகலும்.

பரிகாரம்: முருகப் பெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட செல்வம் சேரும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வியாழன் - வெள்ளி
***********

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

42 mins ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்