துலாம், விருச்சிகம், தனுசு; வார ராசிபலன்கள்; ஜூலை 1 முதல் 7ம் தேதி வரை

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சனி(வ) - பஞ்சம ஸ்தானத்தில் குரு (வ) - அஷ்டம ஸ்தானத்தில் புதன், ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் என கிரக அமைப்பு உள்ளது.
2ம் தேதி வெள்ளிக்கிழமை - புத பகவான் - பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரத்தால் தடைகள் அகலும். பணவரத்து அதிகரித்தாலும் கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

எந்தவொரு வேலையைச் செய்யும்போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. வீடு, வாகனம் மூலம் செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். பஞ்சம குரு சஞ்சாரத்தால் புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் புத்தி சாதுர்யத்தால் முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்ப்பந்தமாக இடமாற்றம் அல்லது பணிமாற்றம் இருக்கலாம். உழைப்பு அதிகரிக்கும்.

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.பெண்களுக்கு எந்த ஒரு வேலையை செய்யும்போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது.

கலைத்துறையினருக்கு செலவு அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு அதிர்ஷ்டம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.

பரிகாரம்: நரசிம்மரை வணங்கி வர குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். காரிய அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - செவ்வாய் - வெள்ளி
****************

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

கிரகநிலை:
ராசியில் கேது - தைரிய ஸ்தானத்தில் சனி(வ) - சுகஸ்தானத்தில் குரு (வ) - களத்திர ஸ்தானத்தில் புதன், ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் என கிரக அமைப்பு உள்ளது.
2ம் தேதி வெள்ளிக்கிழமை - புத பகவான் - அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் எந்தக் காரியத்தைச் செய்தாலும் தடை தாமதம் ஏற்படலாம். ராசியாதிபதி செவ்வாயும் பாக்கிய ஸ்தானத்தில் இருக்கிறார். ராசிக்கு 2ஆம் இடம் மிக வலுவாக அமைவதால் பணவரத்து அதிகரிக்கும். உடல் சோர்வு நீங்கும்.

வீண் பிரச்சினைகள் அகலும். நண்பர்கள் உறவினர்களுடன் மனவருத்தம் உண்டாகலாம். பயணங்கள் செல்ல நேரிடும். கூட்டுத் தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடும். குடும்பத்தில் அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.

பெண்களுக்கு உறவினர்களிடம் பேசும்போது கவனமாகப் பேசுவது நல்லது. கலைத்துறையினருக்கு பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். அரசியல்துறையினருக்கு எந்த விஷயத்திலும் அதிக கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. பெரியோர் சொல்படி நடப்பது வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: முருகப் பெருமானை வணங்கி வர பிரச்சினைகள் தீரும். பொருள் சேர்க்கை ஏற்படும். மனஅமைதி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - செவ்வாய் - வியாழன்
****************

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி(வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், ராகு - சப்தம ஸ்தானத்தில் சூர்யன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக அமைப்பு உள்ளது.
2ம் தேதி வெள்ளிக்கிழமை - புத பகவான் - சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். ராசிக்கு 3ல் ராசிநாதன் குரு சஞ்சாரம் இருப்பதால் பணவரத்து அதிகரிக்கும். கடன் பிரச்சினை தீரும். தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.

நினைத்த காரியத்தைச் செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். கவுரவம் அதிகரிக்கும். மறைமுக நோய் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணப் பிரச்சினை தீரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு குறையும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். திருமண காரியங்கள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும்.

பெண்களுக்கு: எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியம் நடந்து முடியும். கலைத்துறையினருக்கு பணவரத்து திருப்தி தரும். அரசியல்துறையினருக்கு முயற்சிகள் பலன் கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் குறையும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

பரிகாரம்: குரு பகவானை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். பணப் பிரச்சினை தீரும். குடும்ப நன்மை ஏற்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - வியாழன்
*****************\

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்