துலாம், விருச்சிகம், தனுசு; வார ராசிபலன்கள்; ஜூன் 24 முதல் 30ம் தேதி வரை

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சனி(வ) - பஞ்சம ஸ்தானத்தில் குரு (வ) - அஷ்டம ஸ்தானத்தில் புதன், ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் என கிரக அமைப்பு உள்ளது.

எடுத்த காரியத்தை செய்து முடிக்கும் வரை ஊண், உறக்கம் இன்றி கடுமையாக உழைக்கும் துலா ராசியினரே!

இந்த வாரம் எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும். கடன் விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள்.

மேல் அதிகாரிகளால் உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள். வாழ்க்கைத் துணை மூலம் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள்.

உறவினர்கள், நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். கலைத்துறையினருக்கு செலவுகள் ஏற்படும். அரசியலில் உள்ளவர்களுக்கு தேவையான பணஉதவி கிடைக்கலாம்.

பெண்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரிகளும் நண்பராவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்குப் பின்னால் உங்களைப் பற்றி புறம் பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள்.

பரிகாரம்: நவக்கிரகங்களுக்கு அர்ச்சனை செய்ய குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும்.
******************************

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

கிரகநிலை:

ராசியில் கேது - தைரிய ஸ்தானத்தில் சனி(வ) - சுகஸ்தானத்தில் குரு (வ) - களத்திர ஸ்தானத்தில் புதன், ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் என கிரக அமைப்பு உள்ளது.

அனைவருடன் நல்லமுறையில் பழகக் கூடிய விருச்சிக ராசியினரே!

இந்த வாரம் எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். எதிர்பாராத பணவரத்தும் இருக்கும்.

புதிய நண்பர்கள் சேர்க்கையும் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். தொழில் வியாபாரம் சிறிது மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் குறையாத நிலை இருக்கும். போட்டிகள் பற்றிய கவலையை விட்டுவிட்டு தொழில் வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் மாற்றங்கள் உண்டாகலாம். சக ஊழியர்களிடம் பேசும்போது கோபப்படாமல் இருப்பது நன்மை தரும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும், சகஜ நிலையும் காணப்படும்.

கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. கலைத்துறையினருக்கு வாகன வசதி உண்டாகும். அரசியலில் உள்ளவர்களுக்கு நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும்.

பெண்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். மாணவர்கள் சக மாணவர்களிடம் சகஜமாக பேசி பழகுவது நல்லது.

பரிகாரம்: முருகப் பெருமானுக்கு அரளிப்பூ மாலை சாற்றி வழிபட எல்லா நன்மையும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் கூடும்.
******************************

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி(வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், ராகு - சப்தம ஸ்தானத்தில் சூர்யன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக அமைப்பு உள்ளது.

நிதானமாகவும், செம்மையாகவும் காரியத்தை செய்து வெற்றிபெறும் தனுசு ராசியினரே!

இந்த வாரம் பணவரத்து அதிகமாகும். எதிர்ப்புகள் நீங்கி எதிலும் உற்சாகம் உண்டாகும். மனமகிழ்ச்சிக்காக பணம் செலவு செய்யத் தயங்க மாட்டீர்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் மேல் அதிகாரிகள் மூலம் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்கக்கூடும். குடும்பத்தில் வாழ்க்கைத் துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உஷ்ண சம்பந்தமான நோய்வரக்கூடும்.

பிள்ளைகள் மனம் மகிழும்படி நடந்து கொள்வார்கள். கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் நீங்கும். பணவரத்து மனமகிழ்ச்சியைத் தரும். அரசியலில் உள்ளவர்களுக்கு எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும்.

பெண்கள் தாராளமாக பணம் செலவு செய்து தேவையானவற்றை வாங்குவீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். மாணவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: சிவபுராணம் படித்து வர எல்லா பிரச்சினைகளும் தீரும். மனதில் அமைதி உண்டாகும்.
******************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்