கடகம், சிம்மம், கன்னி; வார ராசிபலன்கள்; ஜூன் 10 முதல் 16ம் தேதி வரை

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கிரகநிலை:
ராசியில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சனி(வ) - அஷ்டம ஸ்தானத்தில் குரு (அ.சா) - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), ராகு - விரய ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரக அமைப்பு உள்ளது.
இம்மாதம் 10ம் தேதி வியாழக்கிழமை பின்னிரவு 3.26க்கு புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
இம்மாதம் 15ம் தேதி செவ்வாய்கிழமை சூர்ய பகவான் விரய ஸ்தானத்திற்கு மாறுகிறார்

இந்த வாரம் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.

பணம் வருவது அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்கான வாய்ப்புகள் வரும். மற்றவர்களின் நலனுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். கவுரவம், அந்தஸ்து உயரும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஆர்டர்கள் வருவது திருப்திகரமாக இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். புதிய பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகள் தீரும்.

கணவன் மனைவிக்கிடையே அன்பான நிலை காணப்படும். பிள்ளைகளின் அறிவுத் திறமை வெளிப்படும். பெண்களுக்கு அடுத்தவர் பிரச்சினையைத் தீர்த்து வைப்பீர்கள். கலைத்துறையினர் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது உங்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் பிரச்சினைகளைத் தவிர்க்க வழிவகை செய்யும்.
அரசியல்வாதிகள் கவனமுடன் செயல்பட்டால் மேலிடத்தின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு பாடங்களைப் படிப்பதில் திருப்தி உண்டாகும். கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடலாம்.

பரிகாரம்: துர்கை அம்மனை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் விலகும். காரியத் தடை நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன் - வியாழன்
***************************************

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி(வ) - களத்திர ஸ்தானத்தில் குரு (அ.சா) - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), ராகு - லாப ஸ்தானத்தில் சுக்கிரன் - விரய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக அமைப்பு உள்ளது.
இம்மாதம் 10ம் தேதி வியாழக்கிழமை பின்னிரவு 3.26க்கு புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
இம்மாதம் 15ம் தேதி செவ்வாய்கிழமை சூர்ய பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்

இந்த வாரம் உங்கள் வாழ்வில் ஒரு முக்கியமான காலகட்டமாகும்.

நிதானமாகப் பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். மற்றவர்களின் காரியங்களில் ஈடுபடும்போது கவனம் தேவை. உழைப்பு வீணாகலாம். எனவே திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

வாடிக்கையாளர்களை அனுசரித்து நிதானமாகப் பேசுவது நன்மை தரும். கடனுக்கு பொருள்களை அனுப்பும்போது எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளுடன் கவனமாகப் பேசுவது நல்லது.

குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம்.

பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாமல் அனுசரித்துச் செல்வது நல்லது. பெண்களுக்கு திட்டமிட்டுச் செய்யும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். கலைத்துறையினருக்கு மிகவும் நன்மை பயக்கும் காலமாக இது அமையும்.

அரசியல்வாதிகளுக்கு உற்சாகமான காலமாக அமையும். மாணவர்களுக்கு சகமாணவர்களுடன் பழகும்போது கவனம் தேவை. கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவபெருமானையும், நந்தீஸ்வரரையும் வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். குழப்பம் தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - புதன் - வியாழன்
*****************************************************

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு (அ.சா) - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), ராகு - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக அமைப்பு உள்ளது.
இம்மாதம் 10ம் தேதி வியாழக்கிழமை பின்னிரவு 3.26க்கு புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
இம்மாதம் 15ம் தேதி செவ்வாய்கிழமை சூர்ய பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்

இந்த வாரம் சங்கடங்கள் நீங்கும். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும்.

உஷ்ண சம்பந்தமான நோய் ஏற்படலாம். எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதமாகும். அதனால் திடீர் பண நெருக்கடி வரலாம். இடம் பொருள் அறியாமல் பேசுவதால் அடுத்தவர்களிடம் மனஸ்தாபம் உண்டாகலாம்.

தொழில் வியாபாரத்தில் திடீர் செலவுகள் உண்டாகும். பணவசூல் தாமதப்படலாம். வீண் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற பயணம் செல்ல நேரலாம். கூடுதல் பொறுப்புகள் அடுத்தவர் பணியை செய்வது போன்றவையும் வந்து சேரும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மனம்விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தருவதாக இருக்கும்.
பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை உண்டாகலாம். பெண்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகுவதில் கவனம் தேவை.

லைத்துறையினருக்கு சோதனைகள் நீங்கும் காலமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றத்தில் தடைகள் அகலும். மாணவர்களுக்கு எந்த ஒரு பாடத்தை படித்தாலும் கவனத்தைச் சிதறவிடாமல் படிப்பது அவசியம். விளையாடும் போது கவனம் தேவை.

பரிகாரம்: பைரவரை புதன்கிழமைதோறும் வணங்க திருமணத் தடை நீங்கும். செல்வம் சேரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - புதன் - வெள்ளி
*****************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்