மேஷம், ரிஷபம், மிதுனம் ; வார ராசிபலன்கள்; ஜூன் 10 முதல் 16ம் தேதி வரை

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), ராகு - தைரிய ஸ்தானத்தில் சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி(வ) - லாப ஸ்தானத்தில் குரு (அ.சா) என கிரக அமைப்பு உள்ளது.
இம்மாதம் 10ம் தேதி வியாழக்கிழமை பின்னிரவு 3.26க்கு புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
இம்மாதம் 15ம் தேதி செவ்வாய்கிழமை சூர்ய பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் பல நன்மைகள் உண்டாகும். உங்கள் பேச்சுத் திறமை அதிகரித்து அதனால் பல காரியங்கள் சிறப்பாக நடந்துமுடியும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் அவர்களால் உதவி ஆகியவையும் கிடைக்கலாம்.

நீங்கள் செய்யும் காரியங்களுக்கு உதவுவதற்காக யாராவது ஒருவர் துணை நிற்பார். பகைகள் விலகும். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் தொல்லை தராது. போட்டிகள் விலகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவார்கள். உழைப்புக்கு பலன் கிடைக்கும். உங்கள் மீதான மதிப்பு உயரும். குடும்ப ஸ்தானம் மிக வலுவாக இருப்பதால் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள், எதிர்ப்புகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் உங்களுக்கு பெருமை உண்டாகும்.

பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். அரசியல் துறையினருக்கு எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறவும், மேல்படிப்பு படிக்கவும் எடுக்கும் காரியங்கள் நன்மைகளைத் தரும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமையில் நவக்கிரகத்திற்கு தீபம் ஏற்றி வணங்கி வர சொத்துப் பிரச்சினை தீரும். குடும்பக் குழப்பம் தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வியாழன் - வெள்ளி
**********************************************
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

கிரகநிலை:
ராசியில் சூர்யன், புதன்(வ), ராகு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் - தைரிய ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி(வ) - தொழில் ஸ்தானத்தில் குரு (அ.சா) என கிரக அமைப்பு உள்ளது.
இம்மாதம் 10ம் தேதி வியாழக்கிழமை பின்னிரவு 3.26க்கு புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
இம்மாதம் 15ம் தேதி செவ்வாய்க்கிழமை சூர்ய பகவான் தனவாக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார்

இந்த வாரம் புதிய வசதிகள் கிடைக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

புதிய ஆடை அணிகலன்கள் - ஆடம்பரப் பொருட்கள் சேரும். வீடு, மனை வாங்க திட்டமிடுவீர்கள். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள். எடுக்கும் காரியம் சிறிது முயற்சிக்குப் பின் நடைபெறும். தொழில் வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருந்தது இனி சீராகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாகப் பணியாற்ற வேண்டி இருக்கும். அதேநேரத்தில் பணிகளை செய்து முடிக்க தேவையான வசதி வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற வார்த்தைகளைத் தவிர்ப்பது நன்மை தரும்.

குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு ஆடை ஆபரணம் வாங்குவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும்.

அரசியல் துறையினருக்கு சாதகமான காலகட்டமாக இருந்தாலும் புத்திக்கூர்மையுடன் செயல்களை ஆராய்ந்து செய்வது நன்மை பயக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த சிக்கல்கள் தீரும். ஆசிரியர்களின் ஆலோசனை கூடுதல் மதிப்பெண் பெற உதவும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் பெருமாளுக்கு வெண் தாமரையால் அர்ச்சனை செய்து மொச்சை சுண்டல் நைவேத்தியம் செய்து வழிபட வாழ்வில் வளம் பெறும். குடும்ப ஒற்றுமை உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வெள்ளி
******************************************************

மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:
ராசியில் சுக்கிரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி(வ) - பாக்கிய ஸ்தானத்தில் குரு (அ.சா) - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), ராகு என கிரக அமைப்பு உள்ளது.
இம்மாதம் 10ம் தேதி வியாழக்கிழமை பின்னிரவு 3.26க்கு புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
இம்மாதம் 15ம் தேதி செவ்வாய்கிழமை சூர்ய பகவான் ராசிக்கு மாறுகிறார்.

இந்த வாரம் எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும்.

ஆனாலும் நெருப்பு கிரகமான சூரியன் ராசிக்கு வருவதால் எதிலும் வேகம் இருக்கும். எடுத்த காரியத்தைச் செய்யும்போது எது சரி, எது தவறு என்று தடுமாற்றம் ஏற்பட்டாலும் திறமையால் அதனைச் செய்து முடிப்பீர்கள்.

பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும். நிதி உதவி கிடைக்கும். வாடிக்கையாளர் மத்தியில் மதிப்பு கூடும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சம்பள உயர்வும் வரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி நெருக்கம் அதிகரிக்கும்.

பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். பெண்களுக்கு மிக கவனமாகப் பேசுவதும், கோபத்தைக் குறைப்பதும் நன்மை தரும்.
கலைத்துறையினருக்கு நிலுவையில் உள்ள காரியங்கள் சிறப்பாக முடிய வழி பிறக்கும். அரசியல்வாதிகள் மக்கள் தொடர்பான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.

பரிகாரம்: பெருமாளையும் தாயாரையும் வணங்கி வர வறுமை நீங்கும். கல்வியறிவு பெருகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - புதன் - வெள்ளி
**************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

22 mins ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்