- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
கிரகநிலை:
பஞ்சம ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சனி(வ) - அஷ்டம ஸ்தானத்தில் குரு (அ.சா) - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), சுக்கிரன், ராகு - விரய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக அமைப்பு உள்ளது.
» மேஷம், ரிஷபம், மிதுனம் : வார ராசிபலன்கள் - மே 27 முதல் ஜூன் 2ம் தேதி வரை
» பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, வார நட்சத்திர பலன்கள் - மே 30ம் தேதி வரை
29ம் தேதி - சனிக்கிழமை - இரவு 10.54க்கு சுக்கிரன் விரய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இந்த வாரம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். இஷ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். எந்த ஒரு செயலையும் யோசித்துச் செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும்.
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம்.
குடும்பம் பற்றிய விஷயங்கள் கவலைகள் ஏற்படுத்தினாலும் குருவின் குடும்ப ஸ்தான பார்வையால் அவை நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும் அடையும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. மனதில் பக்தி உண்டாகும்.
சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போது கவனம் தேவை. பெண்களுக்கு எந்தச் செயலையும் யோசித்து செய்வது நல்லது. கலைத்துறையினருக்கு லாபம் ஏற்படும்.
அரசியல்வாதிகளுக்கு நன்மைகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு பாடங்களைப் படிப்பதும் தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது.
பரிகாரம்: அருகில் இருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வணங்கி வர குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாள் பிரச்சனை தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி
*************************
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி(வ) - களத்திர ஸ்தானத்தில் குரு (அ.சா) - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), சுக்கிரன், ராகு - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக அமைப்பு உள்ளது.
29ம் தேதி - சனிக்கிழமை - இரவு 10.54க்கு சுக்கிரன் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இந்த வாரம் எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். குருவின் சஞ்சாரத்தால் எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும்.
திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். நட்பு வகையில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. தொழில் ஸ்தானம் மிகவும் வலுவாக இருக்கிறது.
தொழில் ஸ்தானத்தில் இருக்கும் கூட்டணி உங்களுக்கு நல்ல மாற்றத்தைக் கொடுக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.
கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு மனவருத்தம் நீங்கும். உத்தியோகஸ்தர்கள் பேரும் புகழும் கிடைக்கும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும்.
குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
பெண்களுக்கு நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். கலைத்துறையினருக்கு நட்பு வட்டத்தில் நிதானமாகப் பழகுவது நல்லது. அரசியல்வாதிகளுக்கு தலைமை மூலம் நன்மைகள் கிடைக்கும்.
மாணவர்களுக்கு பாடங்களில் இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாக படிப்பீர்கள். சக மாணவர்களிடம் பழகும்போது கவனம் தேவை.
பரிகாரம்: அருகில் இருக்கும் சிவன் ஆலயத்திற்குச் சென்று வணங்க எல்லா தொல்லைகளும் நீங்கும். எதிர்பார்த்த காரியம் நன்றாக நடக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: சூரியன், வியாழன், வெள்ளி
**********************
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு (அ.சா) - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), சுக்கிரன், ராகு - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக அமைப்பு உள்ளது.
29ம் தேதி - சனிக்கிழமை - இரவு 10.54க்கு சுக்கிரன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இந்த வாரம் திரிகோணம் மிகவும் பலமாக அமைந்திருக்கிறது. பாக்கியஸ்தானத்தில் இருக்கும் கிரக கூட்டணியால் புத்தி சாதுர்யமும் அறிவுத் திறனும் அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும்.
எதிர்பார்த்த பண வரவு தாமதப்படும். திடீர் சோர்வு உண்டாகும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களைப் பற்றி கூறுவதைத் தவிர்ப்பது நல்லது.
தொழில் ஸ்தானத்தை செவ்வாய் அலங்கரிக்கிறார். குரு பகவானுடைய பார்வையும் அனுகூலம் கொடுக்கிறது. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.
பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும். போட்டிகளைத் தவிர்க்க துணிச்சலான முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகள் கூறுவதைக் கேட்டு தடுமாற்றம் அடையலாம்.
நிதானமாக யோசித்துச் செய்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும். குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தைத் தூண்டலாம். வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாகப் பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும்.
உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும். பெண்களுக்கு அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நன்மை தரும். கலைத்துறையினருக்கு அதிர்ஷ்டம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு யோகம் ஏற்படும்.
மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது.
பரிகாரம்: புதன்கிழமையில் அருகில் இருக்கும் காவல்தெய்வத்தை வணங்க மனதில் இருந்த குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும். கடன் பிரச்சினை தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி
*********************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago