- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), சுக்கிரன், ராகு - தைரிய ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி(வ) - லாப ஸ்தானத்தில் குரு (அ.சா) என கிரக அமைப்பு உள்ளது.
29ம் தேதி - சனிக்கிழமை - இரவு 10.54க்கு சுக்கிரன் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
» பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, வார நட்சத்திர பலன்கள் - மே 30ம் தேதி வரை
» திருவோணம், அவிட்டம், சதயம், வார நட்சத்திர பலன்கள் - மே 30ம் தேதி வரை
இந்த வாரம் தனவாக்கு குடும்ப ஸ்தானம் பலமாக இருப்பதால் வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.
எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன்கள் தரும். பணவரத்து அதிகரிக்கும்.
நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் சாதகமாக நடந்து முடியும். தொழில் ஸ்தானத்தில் சனி ஆட்சியாக இருக்க ராசிநாதன் செவ்வாய் பார்க்கிறார். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சினைகள் நீங்கி அமைதி ஏற்படும்.
கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்பு மாறும். விருந்தினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவுகள் குறையும்.
பெண்களுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். கலைத்துறையினருக்கு பொருளாதாரம் மேம்படும். அரசியல்வாதிகளுக்கு ஏற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான கவலைகள் நீங்கும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும்.
பரிகாரம்: முருகப் பெருமானை வணங்கி வாருங்கள். குடும்பத்தில் இருக்கும் பிரச்சினை தீரும். காரியவெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி
*****************
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)
கிரகநிலை:
ராசியில் சூர்யன், புதன்(வ), சுக்கிரன், ராகு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி(வ) - தொழில் ஸ்தானத்தில் குரு (அ.சா) என கிரக அமைப்பு உள்ளது.
29ம் தேதி - சனிக்கிழமை - இரவு 10.54க்கு சுக்கிரன் தனவாக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இந்த வாரம் பக்குவமான அணுகுமுறையினால் எதிலும் சாதகமான பலனைப் பெறுவீர்கள். செயல்திறமை அதிகரிக்கும். ராசியில் சஞ்சாரம் செய்யும் சூரியனால் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையைச் செய்து முடிப்பீர்கள்.
அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும். தொழில் ஸ்தானத்தை குரு பகவான் அலங்கரிக்கிறார்.
தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தேவையான சரக்குகளை வாங்குவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிச்சுமை குறைந்து காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றைச் செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பைப் பெறுவீர்கள்.
குரு பகவான் பார்வையால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.
கணவன்மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். கலைத்துறையினருக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு செயல் திறமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர் ஆதரவு கிடைக்கும்.
பரிகாரம்: வெள்ளி அன்று ஆதிபராசக்தியை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனநிம்மதி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
******************
மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
கிரகநிலை:
ராசியில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி(வ) - பாக்கிய ஸ்தானத்தில் குரு (அ.சா) - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), சுக்கிரன், ராகு என கிரக அமைப்பு உள்ளது.
29ம் தேதி - சனிக்கிழமை - இரவு 10.54க்கு சுக்கிரன் ராசிக்கு மாறுகிறார்.
இந்த வாரம் ராசியில் செவ்வாய் இருக்கிறார். அஷ்டம ஸ்தானத்தில் சனி பகவானுடைய வக்ர நிலை இருக்கிறது. எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம்.
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். தேவையான பண உதவி சற்று தாமதமாக கிடைக்கலாம். தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். அவர்களை அனுசரித்துச் செல்வது நன்மையைத் தரும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். தீ, ஆயுதங்களைக் கையாளும்போது கவனம் தேவை. உதவிகள் செய்யும்போது ஆலோசித்துச் செய்வது நல்லது.
பெண்களுக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் சிறப்புகள் ஏற்படும்.
மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை பாடங்களைப் படிப்பது நல்லது.
பரிகாரம்: ஸ்ரீஅனுமரை வணங்கி வர துன்பங்கள் விலகி இன்பங்கள் தேடி வரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்
********************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago