சிம்ம ராசி அன்பர்களே! மே மாத பலன்கள்; தொழிலில் ஏற்றம்; வேலையில் பதவி உயர்வு; எதிலும் கவனம்

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

தன்னம்பிக்கையுடன் காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் சிம்ம ராசி அன்பர்களே!

இந்த மாதம் ராசிநாதன் சூரியன் பாக்கியஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிக்கிறார். எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். சுக்கிரன் தனலாபத்தைத் தருவார். அடுத்தவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்பாலினத்தாரால் செலவு ஏற்படும். கோபத்தால் சில்லறைச் சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும்.

தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரனே ஆட்சியாக சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும். உப தொழில் ஆரம்பிக்கும் எண்ணம் உதயமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்தி சாதுர்யத்தால் வேலைகளைத் திறமையாகச் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கலாம். மேலிடத்துடன் இருந்து வந்த உரசல்கள் நீங்கும்.

குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளின் செயல்களால் பெருமை அடைவீர்கள். உறவினர்களிடம் இருந்து வந்த கசப்பு உணர்வு அகலும்.

பெண்களுக்கு உதவி கேட்டு உங்களை நாடி வருபவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்வீர்கள். திடீர் செலவு உண்டாகலாம்.

அரசியல்வாதிகள் சகாக்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். கட்சித் தலைமையின் ஆதரவு கிட்டும். கட்சி மேல்மட்டத்தால் அலைக்கழிக்கப்படுவர்.
கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். நல்ல வரவேற்பு கிடைக்கும். உங்களது கலைத்திறன் வளரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

மாணவர்களுக்கு சகமாணவர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. கல்வியில் அதிக கவனம் தேவை.
நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். கண் சம்பந்தமான உபாதைகள் அகலும்.

மகம்:
இந்த மாதம் தந்தை, தந்தை வழி உறவினர்கள், பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வரலாம். நண்பர்களிடத்தில் மனக்கிலேசம் ஏற்படலாம். சுபச்செலவுகள் நிகழும். எதிர்காலத்திற்குத் தேவையான முறையான சேமிப்புகளுக்குண்டான ஏற்பாடுகளைச் செய்வீர்கள்.


பூரம்:
இந்த மாதம் உறவினர் வகையில் அதிக நெருக்கம் வேண்டாம். சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை விட்டுப் பிரிய நேரிடலாம். தூரத்தில் இருக்கும் உறவினரால் நன்மை ஏற்படும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும்.


உத்திரம்:
இந்த மாதம் உங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள சரியான சமயமிது. கலைத்துறையினருக்கு ஓரளவு முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.

பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்து சிவனை வணங்க பிரச்சினைகள் குறையும். காரிய வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 8, 9
அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 28, 29
*********************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்