மேஷம், ரிஷபம், மிதுனம்; ஏப்ரல் 22  முதல்  ஏப்ரல் 28ம் தேதி வரை - வார ராசிபலன்கள்

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

ராசியில் சூரியன், புதன், சுக்கிரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - தைரிய ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் குரு (அ.சா) என கிரக அமைப்பு உள்ளது.

இந்த மாதம் 28ம் தேதி - புதன்கிழமை அன்று புத பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாற்றம் பெறுகிறார்.

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் சஞ்சாரத்தால் உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

பூமி, வீடு தொடர்பான பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும்.எதிர்பாராத செலவு உண்டாகலாம். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்படும். தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும், பண விரயமும் நீங்கும்.

புதிய ஆர்டர்கள் கிடைப்பது துரிதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனதிற்கு இனிமையான செய்திகள் வந்து சேரும். வேலையை மனதிற்கு பிடித்து செய்வீர்கள்.

குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும்படியான சூழ்நிலை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் மறையும். பிள்ளைகள் நலனில் அக்கறை காண்பீர்கள்.

பெண்கள் எந்தக் காரியத்தில் ஈடுபடும்போதும் யோசித்துச் செயல்படுவது நல்லது. கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல் அகலும். அரசியல்வாதிகளுக்கு சுபச்செலவு கூடும்.

மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களைப் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும். எந்தக் காரியத்தையும் யோசித்து செய்வது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி;
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு
எண்கள்: 2, 3, 9
பரிகாரம்: முருகப் பெருமானை வணங்கி வாருங்கள். எல்லாவற்றிலும் நன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

ராசியில் ராகு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் குரு (அ.சா) - விரய ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், புதன் என கிரக அமைப்பு உள்ளது.

இந்த மாதம் 28ம் தேதி - புதன்கிழமை அன்று புத பகவான் ராசிக்கு மாற்றம் பெறுகிறார்.

இந்த வாரம் திடீர் கோபம் உண்டானாலும் சமாளித்து விடுவீர்கள்.

எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற டென்ஷன் இருக்கும். எதிர்பாராத வீண் செலவு ஏற்படலாம். வீண்பழிவர வாய்ப்பு உள்ளதால் எதிலும் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும்.

அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதுர்யத்துடன் நடந்து கொண்டு நன்மை அடைவார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக் கூடும்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். புதிய வீடு கட்டுவது, பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகளைத் தொடங்க முற்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை சேரும். அவர்களுக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள்.

பெண்களுக்கு லாபம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை, வெளிர்நீலம்
எண்கள்: 2, 6
பரிகாரம்: குரு பகவானை முல்லை மலரால் அர்ச்சனை செய்து வணங்கி வாருங்கள். செல்வம் சேரும். செல்வாக்கு உயரும். மன மகிழ்ச்சி உண்டாகும்.
**************

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

ராசியில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் குரு (அ.சா) - லாப ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரக அமைப்பு உள்ளது.

இந்த மாதம் 28ம் தேதி - புதன்கிழமை அன்று புத பகவான் விரய ஸ்தானத்திற்கு மாற்றம் பெறுகிறார்.

இந்த வாரம் ராசிநாதன் புதன் ராசிக்கு லாபஸ்தானத்தில் சூரியனுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். விரும்பியது கிடைக்கும்.
அதேநேரத்தில் அதற்கான கூடுதலான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். மனதில் இருந்த கவலை அகலும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுபச்செலவு ஏற்படும்.

கூட்டுத் தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் பார்ட்னர்களுடன் சுமுகமான முறையில் அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

பயணங்கள் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கவனமாகப் பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது.

பெண்கள் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு ஆன்மிகப் பயணம் செல்வதில் விருப்பம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை நீங்கும். பாடங்கள் படிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பாராட்டு கிடைக்கலாம்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
திசைகள்: மேற்கு, வடகிழக்கு
நிறங்கள்: பச்சை, மஞ்சள்
எண்கள்: 3, 5
பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும். குடும்பக் கவலை தீரும்.
*****************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்