பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு பலன்கள்  2021 -2022; கேட்டை நட்சத்திர அன்பர்களே! பேரும்புகழும் கிடைக்கும்; எதிலும் வெற்றி; உத்தியோகத்தில் உயர்வு; பிரச்சினைகள் குறையும்!  

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கேட்டை:

கிரகநிலை:

ராகு பகவான் பதினான்காவது நட்சத்திரத்தின் 3ம் பாதம் - கேது பகவான் உங்கள் நட்சத்திரத்தின் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் - சனி பகவான் ஐந்தாவது நட்சத்திரத்தின் 1ம் பாதத்திலும் - குரு பகவான் ஆறாவது நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.

கிரக மாற்றம்:

பிலவ ஆண்டு ஐப்பசி மாதம் 27ம் தேதி - 13.11.2021 - சனிக்கிழமை அன்று குரு பகவான் ஆறாவது நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பிலவ ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று ராகு பகவான் பதிமூன்றாவது நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.
இந்த ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று கேது பகவான் இருபத்தி ஆறாம் நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

சோம்பலுக்கு இடம் கொடுக்காமல் எறும்பு போன்று சுறுசுறுப்பாக இருக்கும் கேட்டை நட்சத்திர அன்பர்களே!

இந்த வருடத்தில் உல்லாசப் பயணங்கள் செல்ல நேரலாம். நற்பெயரும் புகழும் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களைச் சந்திக்க நேரலாம். எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும் சமாளித்துவிடும் திறமை இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வந்து சேரும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளைத் திறமையாக செய்து முடிப்பீர்கள்.

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். மனவருத்தத்துடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்து சேருவார்கள்.

பெண்கள் பயணங்கள் செல்ல நேரிடும். எந்தப் பிரச்சினை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
கலைத்துறையினருக்கு விடா முயற்சியுடன் காரியங்களைச் செய்து சாதகமான பலன்கள் பெறுவீர்கள். பணவரத்து திருப்திதரும்.

அரசியல்வாதிகளுக்கு புத்தி தெளிவு ஏற்படும். பிரச்சினைகள் குறையும். தேவையான உதவி கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.

+: குடும்பத்தில் இருந்து வந்த குழப்பம் அகலும்
-: வெளி வட்டாரத் தொடர்புகளில் கவனம் தேவை
மதிப்பெண்: 72%
வணங்க வேண்டிய தெய்வம்: ஸ்ரீதுர்கையை வழிபட்டு வாருங்கள்.
********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்