மகரம், கும்பம், மீனம் ; வார ராசிபலன்கள்; மார்ச் 25 முதல் 31ம் தேதி வரை

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மகரம்
(உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

கிரகநிலை:
ராசியில் குரு, சனி - தனவாக்கு ஸ்தானத்தில் புதன் - தைரிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது.

25ம் தேதி புத பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் பணவரத்து சீராக இருக்கும்.

வேலைப் பளு காரணமாக நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். அக்கம்பக்கத்தினரிடம் சில்லறைச் சண்டைகள் ஏற்பட்டு சரியாகும். கவுரவம் பாதிக்கும்படியான சூழ்நிலை வரலாம்.

குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சினைகள், அதனால் வாக்குவாதம் போன்றவை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வெளியில் தங்க நேரலாம்.

தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்கள் மேல்அதிகாரிகளுடன் அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.

இயந்திரங்கள், ஆயுதங்கள், நெருப்பு ஆகியவற்றை கையாளும் தொழிலாளர்கள் கவனமாக இருப்பது நல்லது. பெண்களுக்கு வீண் அலைச்சல், வேலைப் பளு ஆகியவை அதிகரிக்கும். அரசியல்வாதிகள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நன்மை தரும்.

கலைத்துறையினருக்கு தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்களுக்கு அடுத்தவரைப் பற்றிய விமர்சனங்கள், கிண்டல், கேலிப் பேச்சு போன்றவற்றைத் தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம்: முருகப் பெருமானுக்கு அரளி மாலை சாற்றி அர்ச்சனை செய்து வேண்டி வாருங்கள். குடும்பக் கஷ்டங்கள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் மேன்மை உண்டாகும்.
**************************

கும்பம்
(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:
ராசியில் புதன் - தன ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - தொழில் ஸ்தானத்தில் கேது - விரய ஸ்தானத்தில் குரு, சனி என கிரகநிலை அமைந்திருக்கிறது.

25ம் தேதி புத பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் ராசியில் இருக்கும் பஞ்சமாதிபதி புதன் தனஸ்தானத்திற்கு மாறுவது நன்மைகளைக் கொடுக்கும்.

காரியங்களில் இருந்த தடைகள் நீங்கி நன்றாக நடந்து முடியும். கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல் தீரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகிச் சென்று விடுவார்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் உங்களுக்கு எதிராக பிரச்சினையை உண்டாக்கியவர்கள் தானாகவே அடங்கி விடுவார்கள். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும்.

பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மதிப்பு கூடும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். போட்டிகள் குறையும். எதிர்பார்த்த ஆர்டர் வரும். பணவரத்து திருப்தி தரும். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களின் உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன்கள் கிடைக்கும். மேல் அதிகாரிகள் ஒத்துழைப்பும் இருக்கும்.

பெண்களுக்கு எந்தவொரு சின்ன வேலைக்காகவும் மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு பொருளாதார ஏற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு சந்தேகங்களைக் கேட்டு தெரிந்து கொண்டு படிப்பது நல்லது. வகுப்பில் கவனத்தைச் சிதற விடாமல் பாடங்களைப் படிப்பது வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: சரஸ்வதி தேவியை வணங்கி தீபம் ஏற்றி வணங்கி வாருங்கள். எல்லா கஷ்டங்களும் நீங்கும். பொருளாதாரம் மேம்படும் தைரியம் உண்டாகும்.
******************************************************

மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கிரகநிலை:
ராசியில் ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் குரு, சனி - விரய ஸ்தானத்தில் புதன் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

25ம் தேதி புத பகவான் ராசிக்கு மாறுகிறார்.

இந்த வாரம் ராசிக்கு புதன் மாறுகிறார். ராசியில் சுக்கிரன் உச்சமாக சஞ்சரிக்கிறார்.

தேவையற்ற மன சஞ்சலம் நீங்கும். மற்றவர்களிடம் அனுசரித்துச் செல்வதன் மூலம் வீண் பிரச்சினை வராமல் தடுக்கலாம். சிறிய விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். கட்டுப்படுத்துவது நன்மை தரும்.

திடீர் பணத் தேவை உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன்களைத் தரும்.

பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்வதும் அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பதும் நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசுவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் பற்றி யாருடனும் விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதப்படலாம்.

பெண்களுக்கு கோபத்தை கட்டுப்படுத்துவதும் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும் நன்மை தரும். அரசியல்வாதிகள் வீண் செலவைத் தடுக்க திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது.

கலைத்துறையினருக்கு புதிய முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு சக மாணவர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். மிகவும் பொறுமையுடனும், கவனமாகவும் பாடங்களைப் படிப்பது அவசியம்.

பரிகாரம்: பெருமாளை வணங்கி வாருங்கள். எல்லாப் பிரச்சினைகளும் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
*************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்