- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்):
கிரகநிலை:
பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - ரண ருண ஸ்தானத்தில் சூரியன், புதன், சனி - சப்தம ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகங்களுடைய சஞ்சாரம் அமைந்திருக்கிறது.
26ம் தேதி பின்னிரவு 27ம் தேதி முன்னிரவு சனி பகவான் உங்களுடைய சப்தம ஸ்தானத்திற்கு மாற்றம் அடைகிறார்.
பலன்:
இந்த வாரம் ஏதாவது ஒருவகையில் மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சாதாரணமாக பேசப்போக அது சண்டையாக மாறலாம். வேளை தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும்.
பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
வியாபாரம் விரிவாக்கம் செய்யத் தேவையான பண உதவியும் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகமாகும். உத்தியோக மாற்றம் ஏற்படலாம்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வருகை இருக்கும். திருமணம் போன்ற சுப காரியம் நடக்கும். நிலம், வீடு மூலம் லாபம் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
சுவையான உணவு கிடைக்கும். மனோ பலம் கூடும். பெண்களுக்கு:நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும்.
கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் அகலும். அரசியல்வாதிகளுக்கு பணவரத்து கூடும்.
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி உண்டாகும். கடினமான வேலைகளையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - வியாழன்
திசைகள்: மேற்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, நீலம்
எண்கள்: 2, 6
பரிகாரம்: அம்மனை வழிபட்டு வாருங்கள். எல்லாப் பிரச்சினைகளிலும் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
*************************
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், புதன், சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் ராகு என கிரகங்களுடைய சஞ்சாரம் அமைந்திருக்கிறது.
26ம் தேதி பின்னிரவு 27ம் தேதி முன்னிரவு சனி பகவான் உங்களுடைய ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாற்றம் அடைகிறார்.
பலன்:
இந்த வாரம் ராசிநாதன் சூரியன் அனைத்து வகையிலும் நன்மை அளிக்கும் வகையில் சஞ்சரிக்கிறார்.
எல்லா வகையிலும் நல்ல பலன்கள் உண்டாகும். எதிர்பாராத சம்பவங்களால் இழுபறியாக நின்ற காரியங்கள் நல்ல முடிவுக்கு வரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். உடல் ஆரோக்கியம் மனதில் உற்சாகத்தைத் தரும்.
அவ்வப்போது ஏதாவது தடங்கல் ஏற்பட்டு நீங்கும்.வாகனம் மூலம் லாபம் வரும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பல விதத்திலும் புகழ் கூடும்.
மற்றவர்கள் பிரச்சினைகளில் வாதாடி வெற்றி பெறுவீர்கள். தொழில், வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். தேவையான பண உதவி கிடைப்பதிலும், புதிய ஆர்டர்கள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படும்.
தொழில் தொடர்பாக அமைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது திறமையால் அலுவலக பணியைச் சிறப்பாக செய்வார்கள்.
குடும்பத்தில் திடீர் பிரச்சினைகள் ஏற்படலாம். குடும்பச் செலவுகள் அதிகரிக்கும். பெண்கள் பேச்சின் இனிமை, சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்களில் சாதகமான பலன் பெறுவீர்கள்.
கலைத்துறையினருக்கு எதிர்பார்க்கும் காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். மாணவர்கள் பாடங்களை படிப்பதற்கு கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது. புத்தி கூர்மையுடன் செயல்படுவது எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும்..
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு
எண்கள்: 1, 3, 9
பரிகாரம்: குலதெய்வத்தினை வழிபட்டு வாருங்கள். எல்லாக் கஷ்டங்களும் நீங்கும். மன அமைதி உண்டாகும்.
********************
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
கிரகநிலை:
தைரிய வீர்ய ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - சுக ஸ்தானத்தில் சூரியன், புதன், சனி - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் ராகு என கிரகங்களுடைய சஞ்சாரம் அமைந்திருக்கிறது.
26ம் தேதி பின்னிரவு 27ம் தேதி முன்னிரவு சனி பகவான் உங்களுடைய பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாற்றம் அடைகிறார்.
பலன்:
இந்த வாரம் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.
மனதில் தன்னம்பிக்கை கூடும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். உங்களது எண்ணப்படியே எதையும் செய்து முடிக்கும் சூழ்நிலை ஏற்படும். மற்றவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் நாட்டம் செல்லும். கவுரவம் அந்தஸ்து உயரும்.
வீண் செலவுகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டும். ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும். பணவரத்து இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல் திறமை மூலம் கடினப் பணிகளையும் எளிதாக செய்து முடிப்பார்கள். குடும்பத்தில் நீண்டநாட்களாக இருக்கும் பிரச்சினை தீரும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.
சகோதரர்களிடம் கவனமாகப் பேசிப் பழகுவது நல்லது. பிள்ளைகளால் டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். பெண்கள் மற்றவர்கள் நலனை அக்கறையுடன் கவனிப்பீர்கள். கலைத்துறையினருக்கு செலவுகள் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகளுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற அதிகமாக படிக்க வேண்டி இருக்கும். கல்வி தொடர்பான பிரச்சினைகள் குறையும். தேவையான உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
திசைகள்: தெற்கு, தென்மேற்கு
நிறங்கள்: பச்சை, வெளிர் நீலம்
எண்கள்: 5, 6
பரிகாரம்: சரஸ்வதி தேவிக்கு நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்கி வாருங்கள். எல்லா நன்மைகளும் உண்டாகும். அறிவுத் திறன் கூடும்.
***********************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago