சனிப்பெயர்ச்சி பலன்கள் ; அஸ்தம் நட்சத்திர அன்பர்களே! முயற்சி பலன் தரும்; வீண் செலவு ஏற்படும்; தம்பதி இடையே பிரச்சினை; வாக்குவாதம் வேண்டாம்! 

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

அஸ்தம்:

சனி பகவான் உங்களின் ஒன்பதாவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.

புதன் - சந்திரன் அம்சத்தில் பிறந்த நீங்கள் மனம் சார்ந்தே முடிவுகளை எடுப்பவர்கள்.

இந்த சனிப் பெயர்ச்சியில் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. ஏதேனும் மனக்கஷ்டங்கள் உண்டாகும். வீண்செலவு ஏற்படும். உடல்சோர்வு வரலாம். மனோதைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன்களைத் தரும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமடையப் பாடுபடுவீர்கள். எதிர்பார்த்த ஆர்டர்கள் வரலாம். சரக்குகளை அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழ்நிலை வரலாம். கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும்.

கலைத்துறையினர் புதிய நட்புகளால் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சக கலைஞர்களும், ரசிகர்களும் உங்களுக்கு நிறைவான ஆதரவு தருவார்கள்.
அரசியல்வாதிகள் கடினமாக உழைத்து, உங்கள் முழுத் திறமையையும் வெளிக்கொணர்வீர்கள். வருமானமும் சீராகவே இருக்கும்.

பெண்களுக்கு மனோதைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களின் நினைவால் மனமகிழ்ச்சி குறையும்.

மாணவர்களுக்கு பாடங்களைப் படிப்பதில் அக்கறை தேவை. திட்டமிட்டபடி செயல்பட முடியாதபடி தடங்கல்கள் ஏற்படலாம்.

பரிகாரம்: அம்மனுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபடுவதன் மூலம் எதிலும் சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்திலுள்ள பிரச்சினைகள் அகலும். விநாயகர் வழிபாடு செய்யுங்கள். விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்துங்கள். சங்கடஹர சதுர்த்தியில் கணபதியை தரிசித்துப் பிரார்த்தனை செய்யுங்கள். கவலைகள் அனைத்தும் தீரும்.

**************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

16 mins ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்