- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
திருவாதிரை:
சனி பகவான் உங்களின் பதினாறாவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.
புதன் - ராகு அம்சத்தில் பிறந்த நீங்கள் பிடிவாத குணத்தை மட்டும் தளர்த்திக் கொண்டால் காரிய வெற்றி உங்களைத் தேடி வரும்.
இந்த சனிப்பெயர்ச்சியில் மனக்கவலை நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். பணவரத்து கூடும். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கலாம். வெளியூர் பயணங்கள் மனதுக்கு சந்தோஷத்தை தருவதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டை பெற்றுத்தரும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாதுர்யமான பேச்சின் மூலம் முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்தபடி நிதிநிலை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் டென்ஷன் உண்டாகலாம். கணவன் மனைவிக்கிடையே கோபத்தை விட்டுவிட்டு இதமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும்.
கலைத்துறையினர் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். எதிரிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். திட்டமிட்டு எதையும் செய்யுங்கள்.
அரசியல்வாதிகளுக்கு தலைமைப் பதவிகளில் உள்ளவர்கள் சிறப்பான பலனைப் பெறலாம். நல்ல வருமானம் கிடைக்கும்.
பெண்களுக்கு எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் காரிய தாமதம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு உயர்கல்வி கற்கத் தேவையான பணவசதி கிடைக்கும். கூடுதலாக கவனம் செலுத்தி படிப்பது வெற்றிக்கு உதவும்.
பரிகாரம்: ராஜராஜேஸ்வரியை தீபம் ஏற்றி வணங்க செல்வம் சேரும். செல்வாக்கு உயரும். சிவபெருமானை வணங்கி வாருங்கள். காரியத்தில் வெற்றியும் லாபமும் தருவார்.
***************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
56 mins ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago