- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
அஸ்வினி
சனி பகவான் உங்களின் இருபத்தி ஒன்றாவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.
செவ்வாய் - கேது அம்சத்தில் பிறந்திருக்கும் நீங்கள் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு காரியங்களைச் செய்பவர்கள்.
இந்த சனிப் பெயர்ச்சியில் கொடுத்த வாக்கை காப்பாற்றி, நன்மதிப்பு பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். உடற்சோர்வு ஏற்படலாம். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண்டாகும். வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை.
தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். சாதுர்யமான பேச்சு வியாபார விருத்திக்கு கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணி தொடர் பாக அலைய நேரிடலாம்.
குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்சினைகள் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்ய முற்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும்.
கலைத்துறையைச் சார்ந்தவர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வாய்ப்புகள் வந்து குவியும். எந்தவொரு வாய்ப்பையும் நிராகரிக்க வேண்டாம். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்.
அரசியல்வாதிகளுக்கு எல்லாம் தாமதமானாலும் நல்லபடியாகவே நடக்கும். நீண்ட நாள் நண்பர்கள் உங்களுக்கு உதவிகள் செய்வார்கள்.
பெண்கள் எடுத்த காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சாதுர்யமான பேச்சு வெற்றிக்கு உதவும்.
மாணவர்களுக்கு பாடங்களை நன்கு படித்து மற்றவர்களின் மதிப்புக்கு ஆளாவீர்கள். திறமையான செயல்பாடுகள் வெற்றிக்கு உதவும்.
பரிகாரம்: தினமும் விநாயகர் அகவல் படித்து விநாயகரை வணங்கி வாருங்கள். எதிர்ப்புகள் விலகும். போட்டிகள் குறையும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும்.
*********************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago