- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
நவக்கிரகங்களில் கர்ம கிரகம் - தொழில் கிரகம், வாழ்வில் அனைத்து விதமான நல்லவிஷயங்களையும் அளிப்பவர் சனி பகவான். சூரியனின் மகன் மந்தன் என்பவரே சனி பகவான் அழைக்கப்படுகிறார்.
சனி கிரகம் மட்டுமே ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரே கிரகம். இவர் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து வித கர்மாக்களுக்கும் குரு.
நம் வாழ்வில் முக்கியமான விஷயங்கள் - ஆயுள், தொழில், கர்மா. இந்த மூன்றுக்கும் அதிபதி அதாவது காரகன் சனி பகவான். ஒருவருடைய ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானாதிபதி பலம் குன்றியிருந்தாலும் சனீஸ்வர பகவான் பலமாக இருந்தால் ஆயுள் தீர்க்கம் என்று சொல்லலாம்.
» கார்த்திகை அமாவாசையில் முன்னோர் வழிபாடு மறக்காதீர்கள்!
» நாளைய தினம் அமாசோம பிரதட்சணம்; நான்குபேருக்கேனும் உணவுப் பொட்டலம்!
சனி பகவானுக்குரிய ஆதிக்கம் பெற்ற விஷயங்கள்: உழைப்பு, சமூக நலம், தேசத் தொண்டு, புதையல், தலைமை தாங்கும் வாய்ப்பு, உலகியல் அறிவு, பல மொழிகளில் பாண்டித்யம், விஞ்ஞானத்தில் தேர்ச்சி, எண்ணெய்ய்க் கிணறு, பெரிய இயந்திரங்கள் போன்றவற்றிற்கு காரகத்துவம் கொடுப்பவர்.
கிரக வரிசையில் ஆறாவதாக வருபவர். கிழமைகளில் சனிக்கிழமைக்கு ஆதிக்கம் செலுத்துபவர். அளவின் அடிப்படையில் குருவிற்கு அடுத்த பெரிய கிரகம் சனி கிரகம்.
குருவிற்கு பார்வை பலமும் சனிக்கு ஸ்தான பலமும் சொல்லப்பட்டிருக்கிறது. நம் வாழ்வில் சுபநிகழ்ச்சிகளில் இருக்கும் தடை தாமதத்தை நமக்கு உணர்த்தும் கிரகம் சனியாகும். சனி இருக்கும் கிரகத்தை வைத்தே ஒருவரது வாழ்வில் இருக்கும் தடைகளைத் தெரிந்து கொள்ள இயலும். சனி எங்கு இருக்கிறாரோ அதற்கு உண்டான பரிகாரங்களைச் செய்வதன் மூலம் நாம் தடைகளை அகற்ற முடியும்.
சனியின் பலம்:
சனி எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் சிறிது காலத்திற்குப் பிறகு பலமும், விருத்தியும் அடைகிறது. சனிக்கு 3, 7, 10 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு இருக்கும் இடத்தில் இருந்து 3, 7, 10 ஆகிய இடங்களைப் பார்வையிடுகிறார். மூன்றாம் பார்வையும், பத்தாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.
நிகழும் மங்கலகரமான ஸ்வஸ்தி்ஸ்ரீ சார்வரி வருஷம் தக்ஷிணாயணம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 11ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 26.12.2020 அன்றைய தினம் பின்னிரவு 27.12.2020 தேதி முன்னிரவு தினசுத்தி அறிவது ஞாயிற்றுக்கிழமை முன்னிரவு - சுக்ல துவாதசியும் - கிருத்திகை நட்சத்திரமும் - அமிர்தயோகமும் - ஸாத்ய நாமயோகமும் - பாலவ கரணமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 57.04க்கு - அதிகாலை 5.22க்கு தனுசு லக்னத்தில் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு (வாக்கியப் பஞ்சாங்கப்படி) ஆட்சியாக மாறுகிறார்.
மகர ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து இரண்டரை வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். மகர ராசியில் இருந்து தனது மூன்றாம் பார்வையால் மீன ராசியையும் - ஏழாம் பார்வையால் கடக ராசியையும் - பத்தாம் பார்வையால் துலா ராசியையும் பார்க்கிறார்.
சனி பகவானுக்கு பார்வை பலத்தை விட ஸ்தான பலமே அதிகம். அதாவது பார்க்கும் இடத்தின் பலத்தினை விட இருக்கும் இடத்தின் பலமே அதிகம்.
பொதுவாக சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்கார்களுக்கு நன்மை? நன்மையும் தீமையும் கொண்ட ராசிகள் என்னென்ன? பரிகாரம் செய்து கொள்ளவேண்டிய ராசிகள்!
நன்மை பெறும் ராசிகள்: ரிஷபம் - சிம்மம் - கன்னி - விருச்சிகம்
நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள்: மேஷம் - மீனம்
பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள்: மிதுனம் - கடகம் - துலாம் - தனுசு - மகரம் - கும்பம்
******************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago