உங்கள் நட்சத்திர கோயில்கள், உங்கள் நட்சத்திர மலர்கள்; பயன்படுத்தினால் பலன்கள் நிச்சயம்! 27 நட்சத்திரங்கள் - ஏ டூ இஸட் தகவல்கள் - 99

By செய்திப்பிரிவு

- ’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

சென்ற பதிவில் நட்சத்திர வடிவங்கள் பற்றி பார்த்தோம்.

உங்கள் நட்சத்திரத்திற்கான வடிவங்களைப் பயன்படுத்துவதும் உங்கள் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரத்தின் உருவங்களைப் பயன்படுத்துவதும் மிகப்பெரிய நன்மைகளை உண்டாக்கும். நாடிய செல்வம் தேடி வரும். எப்போதும் மனநிம்மதி கிடைக்கும். வெற்றி மேல் வெற்றி குவியும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்போது உங்கள் நட்சத்திரத்திற்கான ஆலயங்களையும், உங்கள் நட்சத்திரத்திற்கான மலர்களையும் பார்ப்போம்.

இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் ஆலயங்களுக்கு வருடத்திற்கு ஒருமுறையாவது நீங்கள் சென்று தரிசித்து வருவது மிக மிக முக்கியம். மிக மிக நல்லது. நற்பலன்களை அள்ளித் தரும்.

இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் நட்சத்திரத்திற்கான மலர்களை தெய்வ வழிபாட்டில் அவசியம் பயன்படுத்துங்கள். நீங்கள் எந்த ஆலயத்திற்குச் சென்றாலும் இந்த மலர்களைப் பயன்படுத்துவதும், உங்கள் வீட்டு பூஜை அறை, அலுவலகம், தொழிலகம், வியாபார ஸ்தலங்கள் முதலான இடங்களில் பயன்படுத்துவதும் நல்ல பலன்களைத் தரும் என்று உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அஸ்வினி - கலைவாணி ஸ்ரீசரஸ்வதி ஆலயம், கூத்தனூர். மற்றும் பிறவி மருந்தீஸ்வரர் கோயில், திருத்துறைப்பூண்டி.

பரணி நட்சத்திரம் - ஸ்ரீ அக்னீஸ்வரர் ஆலயம், திருப்புகலூர்,

கார்த்திகை நட்சத்திரம் - ஸ்ரீ காத்ர சுந்தரேஸ்வரர், மயிலாடுதுறை.

ரோகிணி நட்சத்திரம் - ஸ்ரீ பாண்டவ தூத பெருமாள் ஆலயம், காஞ்சிபுரம். மற்றும் ஸ்ரீபக்தவத்சல ஆலயம், திருக்கண்ணமங்கை, குடவாசல்.

மிருகசீரிடம் - ஸ்ரீ முருகன் ஆலயம் - எண்கண், திருவாரூர். மற்றும் ஸ்ரீஆதிநாராயண பெருமாள் கோயில்,முகூந்தனூர். திருவாரூரில் இருந்து 13 கி.மீ. தொலைவு.

திருவாதிரை - ஸ்ரீஅபய வரதீஸ்வரர் ஆலயம், அதிராம்பட்டினம். மற்றும் ஸ்ரீசோழீஸ்வரர் சேங்காலிபுரம் திருவாரூர்.

புனர்பூசம் - ஸ்ரீஅதிதீஸ்வரர் ஆலயம், வாணியம்பாடி, ஸ்ரீ சட்டைநாதசுவாமி ஆலயம், சீர்காழி.

பூசம் - ஸ்ரீ அட்சய புரீஸ்வரர் ஆலயம், பட்டுக்கோட்டை அருகில் விளங்குளம். மற்றும் சாரபரமேஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை. மேலும் கும்பேஸ்வரர் ஆலயம் கும்பகோணம்.

ஆயில்யம் - ஸ்ரீ கற்கடேஸ்வரர் ஆலயம், திருத்தேவன்குடி, கும்பகோணம் அருகில். ஸ்ரீசாட்சி நாதேஸ்வரர் திருப்புறம்பியம் கும்பகோணம்.

மகம் -ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கோயில் விராலிப்பட்டி விலக்கு, திண்டுக்கல். மற்றும் ஸ்ரீஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயம், திருவெண்காடு, சீர்காழி.

பூரம் - ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் ஆலயம், திருவரங்குளம், புதுக்கோட்டை. மற்றும் ஸ்ரீ தக்ஷின புரீஸ்வரர் கோவில், தலச்சங்காடு, நாகப்பட்டினம்.

உத்திரம் - ஸ்ரீ மாங்கல்யேஸ்வரர், லால்குடி, திருச்சி. மற்றும் ஸ்ரீகரரவீரநாதர் கோயில், திருவாரூர். திருவாரூரில் இருந்து 10 கி.மீ. தொலைவு.

அஸ்தம் - ஸ்ரீ கிருபாகூபாரேஸ்வரர் ஆலயம், கோமல், குத்தாலம், மயிலாடுதுறை.

சித்திரை - ஸ்ரீ சித்திரரத வல்லப பெருமாள் ஆலயம், குருவித்துறை, மதுரை. மற்றும் ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயில், திருவையாறு.

சுவாதி - ஸ்ரீ தாத்திரீஸ்வரர் ஆலயம், தண்டுரை, பூந்தமல்லி. ஸ்ரீமகாலிங்க சுவாமி ஆலயம், திருவிடைமருதூர்.

விசாகம் - ஸ்ரீ முத்துக்குமார சுவாமி கோவில், திருமலை, செங்கோட்டை, மற்றும் ஸ்ரீ கஜேந்திர வரதப் பெருமாள் ஆலயம், கபிஸ்தலம்.

அனுஷம் - ஸ்ரீமகாலட்சுமி புரீஸ்வரர் ஆலயம், திருநின்றியூர், மயிலாடுதுறை. மற்றும் திருநரையூர் நம்பி கோயில், (நாச்சியார்கோவில்) கும்பகோணம்.

கேட்டை - ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயம், தஞ்சாவூர். மற்றும் ஸ்ரீவீரட்டானேஸ்வரர் ஆலயம், வழுவூர், நாகப்பட்டினம்.

மூலம் - ஸ்ரீ சிங்கீஸ்வரர் கோயில் மப்பேடு, பூந்தமல்லி, மற்றும் ஸ்ரீமயூரநாதர் மயிலாடுதுறை.

பூராடம் - ஸ்ரீ ஆகாசபுரீஸ்வரர் கோயில், திருவையாறு. திருவையாறில் இருந்து 4 கி.மீ. தொலைவு.
மற்றும் ஸ்ரீ பரமநாத சுவாமி கோவில், கடுவெளி, திருவாரூர். (கடுவெளி சித்தர் ஜீவ சமாதி ஆலயம்)

உத்திராடம் - ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோயில், ஒக்கூர். சிவகங்கை. மற்றும் எழுத்தறி நாதேஸ்வரர் திருஇன்னம்பூர், கும்பகோணம்.

திருவோணம் - ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயம், திருப்பாற்கடல் வேலூர், மற்றும் ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் கோயில் திருமுல்லைவாயல், சென்னை.

அவிட்டம் - ஸ்ரீ பிரம்ம ஞான புரீஸ்வரர் ஆலயம், கும்பகோணம். தாராசுரம் அருகில் கொற்கை திருத்தலம். மற்றும் ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் கோயில் திருப்பூந்துருத்தி, திருவையாறு.

சதயம் - ஸ்ரீஅக்னீபுரீஸ்வரர் ஆலயம், திருப்புகலூர், நன்னிலம் அருகில். திருவாரூர்.

பூரட்டாதி - ஸ்ரீ திருவானேஸ்வரர் ஆலயம், திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு. மற்றும் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம், திருக்குவளை.

உத்திரட்டாதி - ஸ்ரீசகஸ்ரலட்சுமீஸ்வரர் ஆலயம், தீயத்தூர், ஆவுடையார் கோவில், மற்றும் ஸ்ரீமதங்கீஸ்வரர் கோயில், திருநாங்கூர், நாகப்பட்டினம்.

ரேவதி - ஸ்ரீ கயிலாசநாதர் கோவில், காருகுடி, தாத்தையங்கார்பேட்டை, திருச்சி. மற்றும் ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் கோயில், இலுப்பைப்பட்டு, மயிலாடுதுறை.

உங்கள் நட்சத்திரத்திற்கான ஆலயங்களை பட்டியலிட்டுருக்கிறேன், நீங்கள் அனைவரும் தவறாது இந்த ஆலயங்களுக்குச் சென்று இறைவனை தரிசித்து உங்கள் வாழ்வை வளமாக்கிக் கொள்ள வேண்டுகிறேன்...! நட்சத்திரங்களுக்கான மலர்களை பார்த்துவிடுவோம்...!

அஸ்வினி - சாமந்தி

பரணி - முல்லை

கார்த்திகை - செவ்வரளி

ரோகிணி - பாரிஜாதம், பவளமல்லி,

மிருகசீரிடம் - ஜாதி மல்லி

திருவாதிரை - வில்வப் பூ, வில்வம்

புனர்பூசம் - மரிக்கொழுந்து

பூசம் - பன்னீர் மலர்

ஆயில்யம் - செவ்வரளி

மகம் - மல்லிகை

பூரம் - தாமரை

உத்திரம் - கதம்பம்

அஸ்தம் - வெண்தாமரை

சித்திரை - மந்தாரை

சுவாதி - மஞ்சள் அரளி

விசாகம் - இருவாட்சி

அனுஷம் - செம்முல்லை (செந்நிற மலர்கள்)

கேட்டை - பன்னீர் ரோஜா

மூலம் - வெண்சங்கு மலர்

பூராடம் - விருட்சி (இட்லிப்பூ)

உத்திராடம் - சம்பங்கி

திருவோணம் - ரோஜா

அவிட்டம் - செண்பகம்

சதயம் - நீலோற்பவம்

பூரட்டாதி - வெள்ளரளி

உத்திரட்டாதி - நந்தியாவட்டம்

ரேவதி - செம்பருத்தி

அன்பார்ந்த வாசகர்களே.

இந்த மலர்களை ஒவ்வொரு ஆலயத்திற்குச் செல்லும் போதும் பயன்படுத்துங்கள்.

அதாவது இறைவனுக்கு இந்த மலர்களைச் சூட்டி வணங்குங்கள். உங்களுடைய பூஜையறையில் தவறாமல் பயன்படுத்துங்கள். அலுவலகத்திலும், தொழில் செய்யும் இடத்திலும் வியாபார தலங்களிலும் இந்த மலர்களை வைத்துக் கொள்வது நல்ல பலன்களைத் தரும்.

மன அமைதியை உண்டாக்கும். நல்ல சிந்தனையைத் தரும். இவற்றைத் தவறாமல் பயன்படுத்துங்கள். மிகக்குறுகிய காலத்திலேயே நல்ல மாற்றத்தை நிச்சயமாக நீங்கள் உணர முடியும். உணருவீர்கள்!

அடுத்த பதிவில் சந்திப்போம்.

- வளரும்
************************

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்