- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
உத்திரம்:
குரு பகவான் உங்களின் பத்தாவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.
முன்யோசனை இல்லாமல் எதில் ஈடுபட்டாலும் சிக்கலில் மாட்டாமல் நழுவிவிடும் சாமர்த்தியம் மிக்க உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே!
நீங்கள் கேளிக்கையில் ஈடுபாடு உடையவர்கள். இந்த குருப்பெயர்ச்சியில் பல யோகங்கள் உண்டாகும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள்.
புத்திசாதுர்யத்தால் எந்தத் தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். எந்தவொரு பிரச்சினையையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் விழிப்புடன் இருப்பது லாபம் அதிகரிக்கச் செய்யும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.
கணவன் மனைவிக்கிடையே இதமான உறவு காணப்படும். பிள்ளைகள் மூலம் நன்மைகள் உண்டாகும். அவர்களது செயல்களால் பெருமை கிடைக்கும்.
பெண்கள் எந்த வேலையையும் விரைவாகவும் திறமையாகவும் செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை உண்டாகும்.
கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். அரசியல்துறையினருக்கு நன்மைகள் ஏற்படும்.
பரிகாரம்: ஐயப்பன் வழிபாடு மனதில் அமைதியைக் கொடுக்கும். தடைகள் அகலும்.
மதிப்பெண்கள்: 74% நல்ல பலன்கள் ஏற்படும்.
******************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago