குருப்பெயர்ச்சி பலன்கள்; கன்னி ராசி அன்பர்களே! கடன் அடைப்பீர்கள்; வீடு வாங்குவீர்கள்; புத்திர பாக்கியம்; ஆரோக்கியம் கூடும்; வேலையில் பதவி உயர்வு! 

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

அனைவரிடமும் நட்பாகவும் கலகலப்பாகவும் பழகும் கன்னி ராசி வாசகர்களே!

இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை தரப்போகிறது என்பதைப் பார்ப்போம்.

இதுவரை உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் இருந்த குருபகவான் பலவித உடல் நலக் கோளாறுகளையும், எதிர்பாராத செலவுகளையும் தந்திருப்பார். தாயாரின் உடல்நலத்தில் கடுமையான பாதிப்புகளையும் தந்திருப்பார். சொத்துகள் தொடர்பான விஷயங்களில் பிரச்சினைகளைத் தந்து மன நிம்மதியைக் கெடுத்திருப்பார். இளைய சகோதரர் உங்களுக்கு எதிரியாக மாற்ற வைத்திருப்பார் குரு பகவான். வீட்டுப் பராமரிப்புச் செலவுகள், எதிர்பாராத திடீர் செலவுகள் என பல வகையிலும் உங்கள் பொருளாதாரத்தைக் கடுமையாக பாதிக்க வைத்திருப்பார்.

இனி இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். காரணம் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்திற்கு குரு பகவான் செல்கிறார். ஐந்தில் அமர்ந்த குரு பலவித நன்மைகளை கேட்காமலேயே தருவார். முக்கியமாக ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தைக் தந்து இனி மருத்துவச் செலவுகள் இல்லை என்கிற நிலையை உண்டாக்குவார். தாயாரின் உடல் நலத்தில் வியக்கத்தக்க முன்னேற்றத்தைக் காணலாம். குழந்தைகளின் கல்வி அறிவும், ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். சகோதரர் தன் தவறை உணர்ந்து உங்களிடம் மன்னிப்புக் கேட்டு, மீண்டும் சகோதர ஒற்றுமையை பலப்படுத்துவார். வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் அறவே இல்லாமல் போகும்.

செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் கடன் வாங்கி இருப்பீர்கள். அந்தக் கடன்கள் அனைத்தையும் அடைக்க உதவி செய்வார். கணவன்-மனைவிக்குள் தேவையில்லாத மனக் கசப்புகள் இருந்திருக்கும். இனி மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். திருமண முயற்சிகளில் தாமதமாகிக் கொண்டிருந்தவர்களுக்கு இப்போது திருமண முயற்சிகள் சுமுகமாக முடிவடையும். திருமணமான தம்பதியர்களுக்கு புத்திர பாக்கியம் உருவாகும். இந்த வருட கடைசியில் புத்திரபாக்கியம் உறுதியாகும். அடுத்த வருடம் குழந்தையோடு இருப்பீர்கள்.

ஆரோக்கிய பாதிப்புகள் பெரிதாக ஏதும் இருக்காது. என்றாலும் தந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். சரியான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். ஒரு சிலருக்கு செரிமானக் கோளாறுகள் வரும். எனவே உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

அலுவலகத்தில் கடுமையான பணிச்சுமை காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்திருப்பீர்கள். இனி பணிச்சுமை குறையும். பதவி உயர்வு கிடைக்கும். பதவி உயர்வோடு கூடிய இடமாற்றமும் கிடைக்கும். பிரபலமான நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் கிடைக்கும். உத்தியோக ரீதியான பயணங்கள் அதிகமாகும். அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

தொழில் வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும். இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் அகலும். பராமரிப்புச் செலவுகளும், தேவையற்ற செலவுகளும், இயந்திரப் பழுதும் ஏற்பட்டிருக்கும். இனி இம்மாதிரியான செலவுகள் ஏதும் இருக்காது. உற்பத்தி அதிகரிக்கும். விற்பனை அதிகரிக்கும். ஊழியர்கள் உண்மையாக உழைப்பார்கள். மிகச் சிறந்த தொழில்நுட்பம் தெரிந்த பொறியாளர் உங்களோடு இணைவார். உங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்ய பலரும் முன்வருவார்கள். இப்படி தொழிலில் பல முன்னேற்றங்கள் கிடைக்கும்.

வியாபார விஷயங்கள் திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் இனி எந்தவிதமான தங்கு தடையும் இல்லாமல் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் தேடி வரும். சிறிய வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை மிகப்பெரிய அளவிலான லாபத்தைக் காண்பீர்கள். ஆடை ஆபரண விற்பனை, ஆடம்பரப் பொருள் விற்பனை போன்ற வியாபாரக் கடைகளில் நல்ல வியாபாரமும் லாபமும் கிடைக்கும். புதிய கிளைகள் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். நகரின் மையப்பகுதியில் விரும்பியபடி வியாபாரக் கடை நடத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கும்,ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கும் இதுவரை ஏற்பட்ட நஷ்டங்களிலிருந்து மீண்டு வரும்படியாக மிகப்பெரிய அளவிலான இரட்டிப்பு லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.

அரசியலில் இருப்பவர்களுக்கு பதவி இறக்கம் ஏற்பட்டு இருக்கும். தேவையற்ற அவதூறுகள் உங்கள் மீது பரப்பப்பட்டிருக்கும். இப்போது அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்து உங்களுடைய மதிப்பு மரியாதை உயரும். பதவி உயர்வு கிடைப்பது மட்டுமல்லாமல், மிகப் பெரிய பதவிகளுக்கு நியமிக்கப்படுவீர்கள். அரசியல் ரீதியான போட்டிகளில் எளிதான வெற்றியைக் காண்பீர்கள்.

பெண்களுக்கு ஆரோக்கியப் பிரச்சனைகள் முற்றிலுமாகத் தீரும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். கடன் பிரச்சினைகள் முற்றிலுமாக தீரும். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். சுயமாக தொழில் தொடங்குவது அல்லது கல்விக்கு ஏற்ப தகுந்த வேலை கிடைப்பது போன்றவை கிடைக்கும். தந்தை வழி சொத்துகள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். வெளிநாடுகளில் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கும். கல்விக்குத் தேவையான உதவிகளை பலரும் உங்களுக்கு செய்து தருவார்கள்.

கலைஞர்கள், எதிர்பாராத ஒப்பந்தங்கள் கிடைத்து மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போவீர்கள். மிகப் பெரிய நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்யப் போகிறீர்கள். அதிலும் மிகப்பெரிய சம்பளத்திற்கு உங்களை ஒப்பந்தம் செய்வார்கள். போட்டிகள் நிறைந்த கலைத்துறையில் எளிதான வெற்றியைக் காண இருக்கிறீர்கள்.

பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பான நன்மைகள் நடக்கும். உங்களுடைய திறமை இப்போது முழுமையாக வெளிப்படும். எழுத்துத் துறையில் இருப்பவர்களுக்கு கௌரவப் பட்டம் மற்றும் விருதுகள் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் - கும்பகோணம் நாச்சியார்கோவில் கல் கருடரை வழிபாடு செய்யுங்கள்.

கன்னி ராசிக்காரர்கள், ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாள் ஆலயத்தில் இருக்கும் சக்கரத்தாழ்வார் மற்றும் கருடாழ்வார் முதலானோருக்கு நெய் விளக்கேற்றி வழிபடுவதும், வெண்பொங்கல் நிவேதனம் செய்து தானம் தருவதும் சிறப்பான பலன்களைக் கொடுக்கும்.

****************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்