கைதூக்கி விடுபவர்கள்; காலைவாரிவிடுபவர்கள்; வாழ்க்கைத்துணை, நண்பர்கள் யார், எதிரிகள் யார் யார்? சிக்கவைப்பவர்கள் யார்? - ரேவதி நட்சத்திர மகிமை! 

By செய்திப்பிரிவு

27 நட்சத்திரங்கள் - ஏ டூ இஸட் தகவல்கள் - 85;

‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


வணக்கம் வாசகர்களே.

ரேவதி நட்சத்திரம் பற்றிய தகவல்களைச் சொல்லி வருகிறேன்.

மேலும் சில தகவல்களைப் பார்ப்போம்.

ரேவதி நட்சத்திரத்திற்கு பொருந்தக் கூடிய வாழ்க்கைத் துணையாக வரக்கூடிய நட்சத்திரங்கள் எவை? நல்ல நட்புக்களாக இருப்பவர்கள் யார்? என்பதை பார்ப்போம்.
பொதுவாகவே ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்கும் பொழுது வெறுமனே நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்க்காமல், ஜாதக ரீதியான பொருத்தத்தைப் பார்க்க வேண்டும்.

காரணம் என்னவென்றால், வாழ்க்கைத் துணையாக வரக்கூடியவர்கள், ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் மன ஓட்டத்தைப் புரிந்துகொள்வது சற்று சிரமம்தான். எனவே திருமணப் பொருத்தத்தின்போது ஜாதக ரீதியான பொருத்தத்தையும் பார்க்கப்பட வேண்டும். குறிப்பாக இரண்டாம் இடம் எனும் குடும்ப ஸ்தானம், ஐந்தாமிடம் எனும் புத்திர ஸ்தானம், இந்த ஐந்தாமிடம் ஆழ்மன எண்ணத்தையும் காட்டும். மற்றும் ஏழாம் இடம், மிக மிக முக்கியமாக 12ம் இடம், அதன் பிறகு எட்டாமிடம் இப்படி இத்தனை பாவகங்களையும் பார்க்க வேண்டும். இதை ஒரு கூடுதல் தகவலாக உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தரப்படுபவை திருமணப் பொருத்தத்திற்கான நட்சத்திரங்கள்... மற்றும் பொதுவான தகவல் மட்டுமே!

திருமணம் செய்ய, வாழ்க்கைத் துணையாக சேர்க்க வேண்டிய நட்சத்திரங்கள் :-

கார்த்திகை - உத்திரம் :-

இந்த நட்சத்திர வாழ்க்கைத் துணை அமைவது சிறப்பான நன்மைகளைத் தருவதாக இருக்கும். வசதி வாய்ப்புகளுக்குக் குறையில்லாமல் இருக்கும். சுகபோக வாழ்வு கிடைக்கும். 85%

மிருகசீரிடம் - சித்திரை - அவிட்டம் :-

இந்த நட்சத்திர வாழ்க்கைத் துணை அமைவது அதிகப்படியான நன்மைகளையும், தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்படியாகவும் பெரிய அளவிலான கடன் சுமை இல்லாமலும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வ வளத்தோடும் வாழ்வார்கள்.85%

புனர்பூசம் - விசாகம் - பூரட்டாதி :-

இந்த நட்சத்திர வாழ்க்கைத் துணை அமைவது சிறப்பான பலன்களை தரக் கூடியதாக இருக்கும். சரியான நேரத்தில் சரியான உதவிகளை கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு, தொழில் ரீதியான தொடர்புகள் போன்றவை ஏற்படும். 80%

பூசம், அனுஷம், உத்திரட்டாதி :-

இந்த நட்சத்திர வாழ்க்கைத் துணை அமைவது ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளக்கூடிய குணமும், மனமொத்த தம்பதிகளாகவும், சரியான பக்கத் துணையாகவும், நிறைவான வாழ்வும் கிடைக்கும். 90%


சேர்க்கக் கூடாத நட்சத்திரங்கள் :-

அஸ்வினி - மகம் - மூலம் - ஆயில்யம் - கேட்டை - ரேவதி :-

இந்த நட்சத்திரங்களை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

பரணி, பூரம், பூராடம் :-

இந்த நட்சத்திர வாழ்க்கைத்துணையைத் தவிர்ப்பதும் நல்லது. தேவையில்லாத மனக் குழப்பம், சண்டை சச்சரவுகள், நிம்மதியற்ற போக்கு, நிலையற்ற தன்மை போன்றவை ஏற்படும்.

ரோகிணி, அஸ்தம், திருவோணம் :-

இந்த நட்சத்திர வாழ்க்கைத் துணை அமைவது பெரிய அளவிலான மன ஒற்றுமை இல்லாமல் கடமைக்கு வாழ்வதாகவே இருக்கும். எந்த விதமான நன்மைகளும், சுகபோகங்களும் கிடைக்காது. கிடைத்தாலும் முழுமையாக அனுபவிக்கக்விடாது.


திருவாதிரை, சுவாதி, சதயம் :-

இந்த நட்சத்திர வாழ்க்கைத் துணை அமைவது மன நிம்மதியைத் தொலைக்கும். தேவையில்லாத பிரச்சினைகள் தேடிவரும். குடும்பத்தில் பலவிதமான சிக்கலை உண்டுபண்ணும். பொருளாதாரப் பிரச்சினைகளை தரும். தவிர்ப்பது நல்லது.

நல்ல நண்பர்கள் யார்? எந்த நட்சத்திரக்காரர்கள் உதவிகரமாக இருப்பார்கள்?

பூசம், அனுஷம், உத்திரட்டாதி :-

இந்த நட்சத்திர நண்பர்கள் அமைவது உங்களுக்கு மிகப்பெரிய நன்மைகளைத் தருவது மட்டுமல்லாமல், உயிர் நண்பர்களாகவும் இருப்பார்கள். நீங்கள் கேட்காமலேயே உதவிகளைச் செய்து தருவார்கள். உங்களுடைய முன்னேற்றத்திற்குக் பக்கபலமாக இருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் நட்புக்கு இலக்கணமாக இருப்பார்கள்.

கார்த்திகை - உத்திரம் - உத்திராடம் :-

இந்த நட்சத்திர நண்பர்கள் அமைவது நல்ல நண்பர்களாக இருப்பார்கள். பக்கபலமாக இருப்பார்கள். பொருளாதாரப் பிரச்சினைகளை தீர்த்து வைப்பவராகவும் குடும்பத்தில் ஒருவராகவும், தேவையான உதவிகளை தேவையான சமயத்தில் செய்து தருபவர்களாகவும் இருப்பார்கள்.


மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் :-

இந்த நட்சத்திர நண்பர்கள் உண்மையான நண்பர்களாகவும், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர்களாகவும், உங்களுடைய கஷ்ட காலத்தில் கைதூக்கி விடுபவர்களாகவும் இருப்பார்கள். உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பார்கள்.


புனர்பூசம், விசாகம், பூரட்டாதி:-

இந்த நட்சத்திர நண்பர்கள் அமைவது நன்மைகளை அதிக அளவில் தரக் கூடியதாக இருக்கும். உங்களால் அவர்களுக்கு உதவிகள் கிடைக்கிறதோ இல்லையோ, அவர்களால் உங்களுக்கு அதிகப்படியாக நன்மைகள் நடக்கும்.

சேரக்கூடாத நண்பர்கள் (நட்சத்திரக்காரர்கள்) :-

அஸ்வினி, மகம், மூலம் :-
இவர்கள் மூலம் நன்மைகள் நடப்பதாக இருந்தாலும்... பெரிய அளவில் நல்லவிஷயங்கள் என்று இருக்காது. இன்னும் சொல்லப்போனால் இவர்கள் கணக்குப் பார்த்து வாழ்வார்கள். நீங்கள் அவருக்குச் செலவு செய்தால் அதை கணக்கில் வைத்துக்கொண்டு மறு முறை அவர்கள் செலவு செய்வார்கள். இப்படி பெரிய ஒட்டுதல் ஏதுமில்லாமல் கொடுக்கல்வாங்கல் கணக்கு போல பழகுவார்களே தவிர அதில் உண்மை இருக்காது.

பரணி, பூரம், பூராடம் :-
இந்த நட்சத்திர நண்பர்களால் தொல்லைகளும், சிரமங்களும், பிரச்சினைகளும் தேடித்தேடி வரும். தேவையற்ற சிக்கல்களில் சிக்காமல் இருக்கவேண்டுமானால் இந்த நட்சத்திரக்காரர்களைத் தவிர்ப்பது நல்லது.

ரோகிணி - அஸ்தம் - திருவோணம்:-
இந்த நட்சத்திர நண்பர்களால் உங்களுக்கு எந்தவிதப் பயனும் இருக்காது. நீங்கள்தான் அவர்களுக்காக அடிக்கடி ஏதேனும் உதவிகள் செய்துகொண்டே இருக்க வேண்டும். அவர்கள் உங்களை ஒரு பொருட்டாகக் கூட மதிக்க மாட்டார்கள். மதியாதார் தலைவாசல் மிதியாதே என்பது இந்த நட்சத்திரக்காரர்களிடம் ரேவதி நட்சத்திரக்காரர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விஷயம் என்பதை கவனமாக்கிக் கொள்ளுங்கள்.


திருவாதிரை - சுவாதி - சதயம் :-

இந்த நட்சத்திர நண்பர்கள் இருப்பது பிரச்சினைகளை நீங்களே தேடிக் கொள்வதற்குச் சமம். என்றாவது ஒரு தருணத்தில், கடுமையான சிக்கலில் உங்களைச் சிக்கவைத்து விடுவார்கள். அதிலும் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் தலையிட்டால் அந்த ஒட்டுமொத்த பிரச்சினையும் உங்கள் தலை மீதுதான் விழும். ரேவதி நட்சத்திரக்கார்கள், விலக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் மட்டுமல்ல, விலகி...யே இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்களும். இவர்களிடம் விலகி இருப்பதே உத்தமம்.


இந்தத் தகவல்கள் அனைத்தும் உங்களுக்கு நிச்சயமாக பயன்படும். இவை அனைத்தும் நட்சத்திர கணக்கீடுகளின் அடிப்படையில் சொல்லப்படுகிற விஷயங்கள். சுய ஜாதகம் பலமாக இருக்கும் பட்சத்தில் வாழ்க்கைத் துணையாக இருந்தாலும் சரி, நண்பர்களாக இருந்தாலும் சரி, சரியானவர்கள் மட்டுமே உங்களிடம் வந்து சேருவார்கள். எனவே, பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது என்று உறுதியாக நம்பலாம்.

பொதுவாகவே ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெரிய அளவிலான பேராசை இருக்காது. சித்தன் போக்கு சிவன் போக்கு என்ற வகையிலான மனப்போக்கு இருக்கும் என்பதால், பெரிய பாதிப்பு ஏதும் இருக்காது என்பதை முழுமையாக உணருங்கள்.

அடுத்த அத்தியாயத்தில், ரேவதி நட்சத்திரத்தின் நான்கு பாதங்களைச் சேர்ந்தவர்களுக்குமான தனித்தனியாக குணநலன்களையும் பலன்களையும் சொல்லுகிறேன்.

- வளரும்
**********************

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்