- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மகரம்
(உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)
எந்தக் காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்து வெற்றி பெறும் மகர ராசி அன்பர்களே!
இந்த வாரம் எல்லா வசதிகளும் உண்டாகும். நோய் நீங்கி ஆரோக்கியம் பெறுவீர்கள். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
நண்பர்கள், உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். எதிர்பாராத காரியத் தடைகள் வரும். வாகனங்களில் செல்லும்போது மிகவும் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் சுமாரான போக்கு காணப்படும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் நம்பிக்கையு டன் செயலாற்றுவதன் மூலம் நன்மை அடைவார்கள். அலுவலகப் பணிகளில் தாமதம் ஏற்படலாம். குடும்பத்தினருக்குத் தேவையான பொருள்களை வாங்குவீர்கள்.
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். பெண்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி அடைவீர்கள்.
கலைத்துறையினருக்கு நீண்டநாட்களாக இருந்த மன அழுத்தம் நீங்கும்படியான சூழல் உருவாகும். அரசியல்வாதிகளுக்கு மனம் மகிழும்படியான சூழ்நிலை உருவாகும். மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி நம்பிக்கையுடன் பாடங்களைப் படிப்பது வெற்றிக்கு உதவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
திசைகள்: தெற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெளிர் நீலம், பச்சை
எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனி பகவானை வணங்கி காகத்திற்கு எள்சாதம் வைப்பது உடல் ஆரோக்கியத்தைத் தரும். கஷ்டங்கள் குறையும்.
*********************
கும்பம்
(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)
எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் கும்ப ராசி அன்பர்களே!
இந்த வாரம் கடும் முயற்சிக்குப் பிறகு நீங்கள் எடுக்கும் காரியம் வெற்றி பெறும். வீண் வழக்குகள் வரலாம். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம், கவனம் தேவை.
சுக்கிரன் சஞ்சாரத்தால் அலைச்சலைச் சந்திக்க நேரிடும். பயணம் செல்ல வேண்டி இருக்கும். எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது கவனம் தேவை. விருப்பத்திற்கு மாறான சம்பவங்கள் நடக்கலாம். தொழில் வியாபாரத்தில் குறிப்பாக கூட்டுத் தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் மறையும். கணவன் மனைவிக்கிடையே நீடித்து வந்த மனவருத்தம் நீங்கி சந்தோஷமான சூழ்நிலை ஏற்படும்.
பெண்களுக்கு மனக்கவலை ஏற்படலாம். கலைத்துறையினருக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு பல குறுக்கீடுகள் வந்தாலும் அதை சாமர்த்தியாமாக சமாளித்து வெற்றி காண்பீர்கள்.
மாணவர்களுக்கு மிகவும் கவனத்துடன் சந்தேகங்களைத் தெளிவாக தெரிந்து கொண்டு பாடங்களைப் படிப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும்போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு, வடகிழக்கு
நிறங்கள்: நீலம், பச்சை
எண்கள்: 2, 6
பரிகாரம்: விநாயகப் பெருமானை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்குவதால் காரிய அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.
*********************
மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
எந்தக் காரியத்தை எப்படிச் செய்ய வேண்டும் என்று தெளிவாக சிந்தித்து சரியான முடிவு எடுக்கத் தெரிந்த மீன ராசி அன்பர்களே!
இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். அறிவுத் திறமை வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். அடுத்தவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாகநேரலாம். கவனம் தேவை. அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும்.
தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கலாம். குடும்பத்தில் வாக்குவாதத்தையும் கோபத்தையும் தவிர்ப்பது நல்லது.
வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. விருந்தினர்கள் வந்து செல்வார்கள்.
பெண்கள் எந்தவொரு காரியத்தையும் செய்து முடிக்க கூடுதல்நேரம் உழைக்க வேண்டி இருக்கும். கலைத்துறையினருக்கு மகிழ்ச்சியான காலகட்டம் இது.
அரசியல்வாதிகளுக்கு லாபமான காலமாக அமையும். பண வரவு திருப்தி தரும். மாணவர்கள் மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நன்மைதரும். விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதுடன் கல்வியிலும் கூடுதல் கவனம் நன்மை தரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3
பரிகாரம்: மாரியம்மனை ஞாயிற்றுக் கிழமையில் அர்ச்சனை செய்து வணங்கி வாருங்கள். எல்லா துன்பமும் நீங்கும். மனநிம்மதி கிடைக்கும்.
************************
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago