மகரம், கும்பம், மீனம்; வார ராசிபலன்; ஆகஸ்ட் 20 முதல் 26ம் தேதி வரை

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மகரம்
(உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

இந்த வாரம் பொருள் சேர்க்கை இருக்கும்.

ராசியில் இருக்கும் குருவால் மங்கல காரியங்கள் அனைத்தும் நடக்கும்.

சுணங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். எதிர்ப்புகளைச் சமாளிக்கும்போது கவனம் தேவை. குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். நிம்மதி ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலைகள் நீங்கும்.

குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். உறவினர்கள் வருகையும் அவர்களால் உதவியும் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.

வியாபாரம் தொடர்பான முயற்சி வீண் முயற்சியாக இருந்தாலும் பின்னாளில் அதற்கான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலைச் சுமை இருக்கும். எப்படியும் செய்து முடித்து நல்ல பெயர் வாங்கி விடுவீர்கள்.

பெண்களுக்கு வீண் அலைச்சலும் எதிர்பாராத செலவும் உண்டாகும். கலைத்துறையினருக்கு முயற்சிகள் வெற்றி பெறும். மாணவர்களுக்கு வழக்கத்தை விட கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களைப் படிப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: தெற்கு, வடமேற்கு
நிறங்கள்: வெளிர் நீலம், மஞ்சள்
எண்கள்: 2, 6
பரிகாரம்: சனி பகவானை வழிபடுவதால் இன்பம் உண்டாகும்.
********************

கும்பம்
(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

இந்த வாரம் மனத்துணிவும், எதையும் செய்து முடிக்கும் ஆற்றலும் அதிகரிக்கும்.

நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். உடைமைகளைக் கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் தலைதூக்கும். அவற்றை லாவகமாக கையாண்டு சமாளிப்பீர்கள்.

கணவன் மனைவிக்கிடையே பழைய விஷயங்களைப் பேசாமல் இருப்பதன் மூலம் ஒற்றுமை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் ஏற்படும் பணத்தேவையை சரிக்கட்ட நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் காணத் தேவையான பணிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான வேலைகளில் அலைச்சல் இருக்கும்.

ஆனால் செய்த வேலைக்கு நல்ல பலனை எதிர்பார்க்கலாம். பெண்களுக்கு பணவரத்து திருப்திகரமாக இருக்கும். கலைத்துறையினருக்கு கடன் அடைவதற்கான சூழ்நிலை ஏற்படும்.
மாணவர்களுக்குத் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் கைகூடும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி
திசைகள்: மேற்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை. மஞ்சள்
எண்கள்: 3, 6
பரிகாரம்: சிவனை வழிபட எதிலும் வெற்றி உண்டாகும்.
**************************

மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

இந்த வாரம் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள்.

திடீர் கோபம் உண்டாகும். கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. அடுத்தவர்களால் இருந்த தொல்லைகள் குறையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கலாம். உறவினர்களிடம் நிதானமாகப் பேசுவது நல்லது.

கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளிடம் இனிமையாகப் பேசுவது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் அலைச்சல் இருந்தாலும் முடிவில் சாதகமான பலன் கிடைக்கும்.

வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலை தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும். அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
பெண்களுக்கு கோபத்தைக் குறைத்து நிதானமாகப் பேசுவதன் மூலம் நன்மை ஏற்படும். கலைத்துறையினர் கூடுதலாக எதிலும் உழைக்க வேண்டி இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனத்துடனும் ஆசிரியர்களின் உதவியுடனும் பாடங்களைப் படிப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்
திசைகள்: வடக்கு, தென்மேற்கு
நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்
எண்கள்: 3, 9
பரிகாரம்: சித்தர்களை வணங்கி வருவது மன அமைதியைத் தரும்.
**************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

21 hours ago

ஜோதிடம்

21 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்