- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
மற்றவர்களை அறிந்து அவர்களுக்கேற்ப நடந்து கொண்டு காரியம் சாதிக்கும் திறமை உடைய விருச்சிக ராசியினரே!
இந்த மாதம் உங்களின் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியவெற்றி உண்டாகும். எந்த ஒரு வேலையிலும் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். உங்களுடன் பக்கபலமாக ஒருவர் இருந்து தேவையான உதவிகளைச் செய்வார். நண்பர்கள் மூலம் புதிய வசதிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். புதிய ஆர்டர்கள் வருவதில் இருந்த தடைகள் விலகும். தேவையான பணவசதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். புதிய பொறுப்புகளும் அதனால் வருமானமும் இருக்கும். எதிர்ப்புகள் அகலும்.
குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். பூமி மூலம் லாபம் கிடைக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். வாழ்க்கைத் துணைக்கு தேவையான வசதிகள் செய்து தருவீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ராசியாதிபதி செவ்வாய் சஞ்சாரம் எல்லா வகையிலும் நன்மையையும் மகிழ்ச்சியையும் தரும்.
பெண்களுக்கு : திறமையான பேச்சின் மூலம் காரியவெற்றி உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.
கலைத்துறையினருக்கு : கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். பயணங்கள் செல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதுர்யம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும்.
அரசியல்துறையினருக்கு : பாராட்டு கிடைக்கும். மனக்கவலை ஏற்படும். உடல் சோர்வு உண்டாகும். ஆன்மிக நாட்டமும், மன தைரியமும் உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். கட்சியில் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.
மாணவர்களுக்கு : கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனமகிழ்ச்சி உண்டாகும். சிறப்பாக செயல்படுவீர்கள்.
விசாகம் 4ம் பாதம்:
நீங்கள் நல்ல உழைப்பாற்றல் கொண்டவர்கள் என்பதால் எந்தவித பிரச்சினைகளையும் சமாளித்து திறமைகளை வெளிப்படுத்தி உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். உடன் பணி புரிபவர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் உங்களுக்கான வேலைப்பளு குறையும். பிறர் விஷயங்களில் தேவையின்றி தலையீடு செய்வதைக் தவிர்ப்பது நல்லது.
அனுஷம்:
தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்நீச்சல் போட்டால் ஏற்றத்தைப் பெற முடியும். வரவேண்டிய நல்ல வாய்ப்புகள் சில நேரங்களில் தட்டிச் சென்றாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தடையின்றிக் கிடைக்கும். கூட்டாளிகளிடமும் உழைப்பாளிகளிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது.
கேட்டை:
தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சிறு சிறு அலைச்சல்களை சந்தித்தாலும் லாபங்கள் குறையாது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களை சற்று தள்ளி வைப்பது நல்லது. அதிக உழைப்பு உடல் சோர்வை உண்டாக்கும் என்பதால் கவனம் தேவை.
பரிகாரம்: செவ்வாய் கிழமை விரதம் இருந்து நவகிரகத்தில் செவ்வாய் பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபட எல்லா நன்மையும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் கூடும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 15, 16
அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
27 mins ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
21 hours ago
ஜோதிடம்
21 hours ago
ஜோதிடம்
22 hours ago
ஜோதிடம்
22 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago