கடக ராசிக்காரர்களுக்கு - ஆகஸ்ட் மாத பலன்கள்

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கடகம்
(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கவலைகளை வெளிக்காட்டாமல் எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படும் கடக ராசிக்காரர்களே!

இந்த மாதம் செவ்வாயின் சஞ்சாரத்தால் சுணங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். எதிர்பார்த்த காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாக்கு நாணயம் உண்டாகும். முக்கிய நபர்களின் நட்பு கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். அடுத்தவரைப் பற்றி எந்தப் பேச்சும் பேசாமல் இருப்பது நல்லது.

தொழில், வியாபாரம் தொடர்பாக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உழைத்த உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். பயணங்கள் செல்ல நேரிடலாம். தொழில், வியாபாரம் பற்றிய விஷயங்களில் நேரடி கவனம் தேவை. தேவையான பணம் தக்க நேரத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக எதையும் செய்வது நல்லது. வீண் அலைச்சல் வேலைப் பளு ஆகியவை இருக்கும். உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றி மறையும். ஆனாலும் குடும்பாதிபதியின் பாதசார சஞ்சாரத்தால் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளுக்காக பாடுபட வேண்டி இருக்கும். ஒரு நல்ல குறிக்கோளுக்காக புண்ணியப் பயணம் செய்ய வேண்டி இருக்கும். ஆடம்பரப் பொருட்கள், வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும்.

பெண்களுக்கு : கொடுத்த வாக்கை காப்பாற்றும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். அடுத்தவரைப் பற்றி எந்தப் பேச்சும் பேசாமல் இருப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு : மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

அரசியல்துறையினருக்கு : படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். செலவும் அதிகமாகும். தொண்டர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன் உழைப்பது அவசியம்.

மாணவர்களுக்கு : கல்வி தொடர்பான விஷயங்களில் நேரடியாக கவனம் செலுத்துவது நல்லது. பாடங்களில் சந்தேகங்களை உடனுக்குடன் போக்கிக் கொள்ள ஆசிரியர்களின் உறுதுணை இருக்கும்.

புனர்பூசம் 4ம் பாதம்:
உடல் நல பாதிப்புகளால் அடிக்கடி அவதிப்பட வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்து பழகுவது சிறந்தது. மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும்.

பூசம்:
எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். வீண் பழிச் சொற்கள் உண்டாகலாம். தேவையற்ற இட மாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். சொகுசு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படும். ஆனாலும் எதையும் எதிர்கொள்ளும் பலம் உண்டாகும்.

ஆயில்யம்:
உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் அதிக கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டி வரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிப்பதால் வாய்ப்புகள் கைநழுவும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.

பரிகாரம்: சிவன் கோயிலுக்கு சென்று சிவன், அம்பாளை நெய் தீபம் ஏற்றி வழிபடுவது மனக் குழப்பத்தை நீக்கும். வீட்டிலேயே சிவ வழிபாடு செய்யுங்கள். தெளிவான முடிவுகள் எடுக்க உதவும். மனோபலம் பெருகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்;
சந்திராஷ்டம தினங்கள்: 5, 6, 7
அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்