- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மிதுனம்
(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)
எளிதில் யாருடனும் நண்பராகும் திறமை பெற்ற மிதுன ராசியினரே!
இந்த மாதம் ராசிநாதன் புதன் தனஸ்தானத்தில் சூரியனுடன் இருக்கிறார். மற்ற கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு நன்மை செய்யும் வகையில் இருக்கிறது. நீண்ட நாட்களாக இருந்து வந்த வீண் மனக்கவலை நீங்கும். எந்த ஒரு காரியத்திலும் எதிர்பார்த்த வெற்றி தாமதமாக கிடைக்கும்.
ஒதுங்கி இருந்தால் கூட வலுக்கட்டாயமாக எதிலாவது சிக்கிக்கொள்ள சுற்றமும், நட்பும் தூண்டுவார்கள். கவனமாக அதைத் தவிர்ப்பது நல்லது. வீண் அலைச்சல் மற்றும் செலவு ஏற்படலாம். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை.
தொழில் ஸ்தானாதிபதி குரு, ராசியைப் பார்ப்பதால் தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறும். வருமானம் வந்து சேரும். புதிய முயற்சிகள் காலதாமதமாக முடியும். வாடிக்கையாளர்களிடம் வாக்குவாதத்தைத் தவிர்த்து அனுசரித்துப் பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணியை கவனிக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் அனுசரித்துச் செல்வது நல்லது.
குடும்பத்தில் அமைதி ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாகப் பேசுவதும் வாக்குவாதத்தைத் தவிர்ப்பதும் நல்லது. விருந்தினர்கள் வருகையும் அதனால் செலவும் உண்டாகலாம். வழக்குகளைத் தள்ளிப் போடுவதும் பேசி தீர்த்துக் கொள்வதும் நல்லது. ஆயுதம், தீ ஆகியவற்றில் கவனம் தேவை.
பெண்களுக்கு : அடுத்தவர்கள் பேச்சைக் கேட்டு எதிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மை தரும். வீண் அலைச்சலும் செலவும் உண்டாகலாம். கவனம் தேவை.
கலைத்துறையினருக்கு : எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். அதனால் வெளியூர் பயணங்களைத் தள்ளிப்போடுவது நல்லது. உடல்நலத்தில் கவனம் தேவை.
அரசியல்துறையினருக்கு : உங்கள் புத்திக்கூர்மை உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். போட்டிகளையும் பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள்.
மாணவர்களுக்கு : உயர் கல்வி பற்றிய எண்ணம் அதிகரிக்கும். கூடுதல் மதிப்பெண் பெற படிப்பில் வேகம் காட்டுவீர்கள்.
மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள்:
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நிறைய மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். எதிர்பார்க்கும் வங்கிக் கடனுதவிகளும் வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு புதிய முயற்சிகளில் ஈடுபட முடியாது. வரும் வாய்ப்புகளையும் பிறர் தட்டிச் செல்வார்கள். நிறைய போட்டிகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும்.
திருவாதிரை:
பணவரவுகளிலும் திட்டங்களிலும் நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கித்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய காலகட்டம். தேவையற்ற வாக்குவாதங்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவதோடு உற்றார் உறவினர்களும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். பணி புரிபவர்களுக்கு தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும்.
புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்:
பெயர், புகழைக் காப்பாற்றிக் கொள்ள அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். எடுக்கும் காரியங்களையும் சரிவர செய்து முடிக்க விடாமல் உடனிருப்பவர்களே தடையாக இருப்பார்கள். குடும்பத்திற்காக நிறைய செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் பெருமாளை வணங்கி வர கடன் பிரச்சினை தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 30, 31
அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago