மகரம், கும்பம், மீனம்: வார ராசிபலன்; ஜூலை 23 முதல் 29ம் தேதி வரை

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

எளிய வாழ்வு முறையை விரும்பும் மகர ராசி அன்பர்களே.

இந்த வாரம் நன்மைகள் கிடைக்கக் கூடிய காலகட்டமாகும். எடுத்த காரியம் கைகூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும்.

தாயாரின் உடல்நலத்தில் தகுந்த அக்கறை காட்ட வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பிற இடங்களுக்கு மாற்றலும் கிடைக்கும். உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையும் உயரும்.

தொழிலதிபர்களுக்கு கடந்த காலங்களில் மனதில் இருந்த சஞ்சலங்கள் மாறி நம்பிக்கை ஒளி பிறக்கும். புதிய சந்தை வாய்ப்புகளைப் பெற்று சிறந்த முன்னேற்றம் காண்பர்.

பெண்களுக்கு, நீண்ட நாட்களாக சந்தான பாக்கியம் இல்லாதவர்களுக்கு தெய்வ அனுகூலத்தில் குழந்தைகள் பிறக்கும். வாழ்க்கைத்துணை அன்புடன் இருப்பர்.
கலைத்துறையினர் எந்த முடிவையும் அவசரப்படாமல் நிதானமாக எடுக்க வேண்டும். சமுதாயப் பணி செய்து மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவீர்கள். அரசியல்வாதிகளுக்கு நீங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்ள தகுந்த நேரம் இது. நீங்கள் இழந்த பதவி, நற்பெயர் மீண்டும் கிடைக்கும்.

மாணவர்கள் தங்கள் படிப்பில் தகுந்த அக்கறை செலுத்தி தேர்ச்சி பெறுவார்கள். நண்பர்கள் படிப்பு ரீதியிலும் குடும்ப ரீதியிலும் தகுந்த ஒத்துழைப்பு தருவார்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
திசைகள்: தெற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெளிர் நீலம், பச்சை
எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: அனுமன் வழிபாடு செய்யவும். அனுமன் சாலீசா பாராயணம் செய்யவும். வீட்டில் உள்ள அனுமன் படத்துக்கு வெற்றிலை மாலை சூட்டி பிரார்த்திக்கவும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

திறமையும் நல்ல அணுகுமுறையும் கொண்ட கும்ப ராசி அன்பர்களே.

இந்த வாரம் வீடு மனை வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வ புண்ணிய சொத்துகளால் வருமானம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையைக் காண்பீர்கள். உங்களின் வேலைகளை தன்னம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள்.

தொழிலதிபர்கள் ஆதாயம் பெற்று முன்னேற்றம் அடைவார்கள். பணப்புழக்கம் தங்கு தடையின்றி இருக்கும். நிறுவனத்தின் புகழ் பரவும். பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தாலும் உயர்அதிகரிகளாலும் இடப்படும் கட்டளைகளை கவனமுடன் செயல்படுத்தி வேலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
கலைத்துறையினர் துறையில் உள்ள நுணுக்கங்களை அறிந்து வைத்துக்கொள்வீர்கள். அவற்றை தகுந்த சமயத்தில் உபயோகித்து வெற்றி பெறுவதற்கு ஏதுவான சூழ்நிலை உண்டாகும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு மதிப்பு உயரும். போட்டிகளை சமாளிப்பீர்கள். உங்களுக்கு எதிர்பார்க்காத பதவி கிடைக்கும்.

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் அறிவுரைகளை உதாசீனப்படுத்தாமல் அதன்படி நடக்கவும். தடைபட்டிருந்த கல்வியைத் தொடர்வதற்கு ஏற்ற காலமிது.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு, வடகிழக்கு
நிறங்கள்: நீலம், பச்சை
எண்கள்: 2, 6
பரிகாரம்: சிவ வழிபாடு செய்யவும். நவகிரகத்திற்கு நெய் விளக்கு ஏற்றி வழிபடவும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ஈடுபடும் செயல்களில் வெற்றி பெற இறுதிவரை போராடும் மீன ராசி அன்பர்களே.

இந்த வாரம் சொல்லால் மகத்துவமும் செயலால் புகழ் கீர்த்தியும் ஏற்படும். வீடு மனை வாகனம் ஆகியவற்றில் பணிகள் செய்வதற்கு முன் யோசித்து செய்யவும்.
உத்தியோகஸ்தர்களுக்கு, பெற்றோரின் மூலமாக வேலை கிடைக்கும். உங்களுடன் வேலை செய்பவர்களிடம் அனுசரனையாக இருக்கவும்.

வியாபாரிகளுக்கு செய்து வரும் தொழிலில் சிறப்பான பலன்களைக் காணலாம். கடந்த காலத்தை விட கூடுதல் லாபம் கிடைத்தாலும் தொழிலை விரிவுபடுத்துவற்கு உண்டான வேலைகளை இப்போது ஆரம்பிக்கலாம்.

பெண்கள் உடல்நலனில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். கணவரை விட்டுப் பிரிந்தவர்கள் கணவருடன் மீண்டும் சேர்வார்கள். கணவருக்கு உங்களால் அனுகூலம் உண்டாகும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு மதிப்பு உயரும். போட்டிகளை சமாளிப்பீர்கள். உங்களுக்கு எதிர்பார்க்காத பதவி கிடைக்கும். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு தங்களது முழுத்திறமைகளையும் காட்டினால் மட்டுமே வாய்ப்புகள் அதிகமாகக் கிடைக்கும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் வந்து சேரும்.

மாணவர்கள் சிறப்பான பலனைக் காணலாம். அதிக உழைப்பும் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் படிப்பில் சாதனைகள் புரியலாம்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3
பரிகாரம்: அருகிலிருக்கும் கோயிலில் நவக்கிரக சந்நிதியில் நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

9 mins ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்