- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
தனுசு:
இந்த மாதம் நீங்கள் பிடிவாத குணத்தை மட்டும் தளர்த்திக் கொண்டால் காரிய வெற்றி உங்களைத் தேடி வரும். மனக்கவலை நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். பணவரத்து கூடும்.
குடும்பத்தைச் சாராத ஒருவரால் சிரமம் ஏற்பட்டு பின் மறையும். பதற்றத்தைத் தவிர்த்து நிதானத்தைக் கடைபிடியுங்கள். சிற்சில விரயங்கள் ஏற்பட்டாலும் அவை யாவுமே சுபச்செலவுகள்தான் என்பதை உணருங்கள். எனினும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். சுபகாரியங்கள் வெகு லகுவாக கூடி வரும். விலகி நின்ற உறவுகளும் உரிய நேரத்தில் கை கொடுக்கும். புதிய வீட்டிற்குக் குடிபுகுவது சிறிது தள்ளிப் போகலாம்
தொழிலில் உங்கள் தன்னம்பிக்கை, திறமை, திறன் அதிகரிக்கும். நுண்கலை, கட்டடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும். உடலைப் பற்றிய தவறான எண்ணங்கள் தோன்றி மறையும். குடும்பத்தில் நல்ல சந்தோஷ தருணங்கள் ஏற்படும். சுபகாரியங்கள் வெகு இலகுவாக கூடி வரும். விலகி நின்ற உறவுக்காரர்கள் சேருவார்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுக்கு உரிய அறிவிப்பு வந்து சேரும். சிலருக்கு வெளியூருக்கு மாற்றலும் வரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை, திறமை திறன் அதிகரிக்கும். நிலம், வீடு, வாகனங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கு வழிகள் வந்து சேரும். ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புகளும் வந்து சேரும்.
பெண்களுக்கு தடைபட்டிருந்த திருமண ஏற்பாடுகள் இனிதே நிறைவேறும். பிள்ளைகள் வழியில் சின்னச் சின்ன செலவுகள் நேரிடலாம். கணவன் மனைவி இடையே ஒற்றுமை தேவை. சொத்து விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட்டு மறையும்.
கலைத்துறையினருக்கு சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி. நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு. நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம்.
அரசியல் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். எந்த முயற்சியையும் தயக்கமின்றிச் செய்யலாம். நட்பு வட்டம் பெருகும். எதிரிகள் விலகிச்செல்வார்கள்.
மாணவர்கள் படிப்பில் கவனச் சிதறல் வேண்டாம். கேளிக்கை போன்றவற்றில் கவனத்தைச் சிதறவிட வேண்டாம். பெரியோர் பேச்சைக் கேட்டு நடப்பது நல்லது.
மூலம்:
இந்த மாதம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தாலும் கொள்கைக்காக பாடுபடுவீர்கள். அதிகம் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் சொல்வதை நம்பும் முன் அதைப்பற்றி ஆலோசனை செய்வது நல்லது. குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. பெண்களுக்கு எதிலும் மெத்தனப் போக்கு காணப்படும். வீண் அலைச்சல் ஏற்படலாம். கோபத்தைக் குறைப்பது நன்மை தரும். பிள்ளைகளிடம் அன்புடன் பேசுவது குடும்பச் சூழலை இதமாக்கும்.
பூராடம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஒரே குறிக்கோளுடன் இருப்பதை விட்டு வாடிக்கையாளர் தேவை அறிந்து செயல்படுவது முன்னேற்றத்திற்கு உதவும். பணவரத்து அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் துணிச்சலாக வேலைகளைச் செய்து வெற்றி பெறுவார்கள். பெண்களுக்கு வீண் மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். உடைமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. வாகனங்களை கவனமாக வைத்துக் கொள்ளுங்கள்.
உத்திராடம் 1ம் பாதம்:
இந்த மாதம் கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். அதனால் நன்மையும் ஏற்படும். பெண்களுக்கு புதிய நபர்கள் அறிமுகமும் அவர்களால் உதவியும் கிடைக்கும். பயணம் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப் பளு காரணமாக அலைய வேண்டி இருக்கும்.
பரிகாரம்:
தினமும் முன்னோர்கள் வழிபாடும், சிவ வழிபாடு செய்வதும் கூடுதல் நன்மைகளைத் தரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி
சந்திராஷ்டம தினங்கள்: 21, 22
அதிர்ஷ்ட தினங்கள்: 14, 15
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago