ரிஷப ராசிக்காரர்களுக்கு... ஜூலை மாத பலன்கள்

By செய்திப்பிரிவு

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ரிஷபம்:
இந்த மாதம் நல்ல பலன்களை அள்ளித்தரும் மாதம். நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சினைகளையும் மிகச் சாதுர்யமாகக் கையாளுவீர்கள்.
குடும்பத்தில் பிள்ளைகளுக்கு நிறைய செலவு செய்ய வேண்டிய நேரம். தந்தைக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தங்களுக்கு வரவேண்டிய பண பாக்கிகள் வந்து சேரும். நீண்ட நாட்களாக இருந்த கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்வீர்கள். சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் முடிவுக்கு வரும். வீடு மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் அதை நிறைவேற்றிக் கொள்வதற்கான தருணம் வந்து சேரும்.
தொழிலில் விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தைச் சீரமைப்பதற்கு நீங்கள் சுயமாக மேற்கொள்ளும் முயற்சிகள் நிச்சயம் வெற்றியடையும். வங்கிக் கடன்கள் கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புடைய வியாபாரங்கள் தக்க லாபத்தைக் கொடுக்கும். அலைச்சலும் இருக்கும்.
உத்தியோகஸ்தர்கள், வேலை இழந்தவர்கள் மீண்டும் பணியில் சேர பொன்னான காலமிது. மேலிடத்தில் உள்ள அதிகாரிகள் உங்களுக்கு அனுசரனையாக நடந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடத்தில் உள்ள பிரச்சினைகளை நிதானமான அணுகுமுறையுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். பின் வரும் கஷ்டம் முன்னரே தெரிந்து விலகுவீர்கள்
பெண்கள் கூடிய மட்டிலும் அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதைத் தவிருங்கள். பெரியோர் ஆலோசனைகளைக் கேட்டு எதையும் செய்வது நல்லது. தம்பதிகளிடம் ஒத்த கருத்து ஏற்படும். குடும்பத்தில் நடைபெற இருந்த நற்காரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெறும்.
கலைத்துறையினர் உற்சாகமாகச் செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும். சாதகமாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். ரசிகர்களும் உங்களுக்கு நிறைவான ஆதரவு தருவார்கள்.
அரசியல்துறையினர் சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். நினைத்தபடி பணவரவுகளைப் பெறலாம். லாபத்தையும் பெறுவார்கள்.
மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும். ஆசிரியர்களின் பாராட்டைப் பெறலாம். தந்தையின் ஆதரவு கிட்டும்.
கார்த்திகை 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் வழக்கு விவகாரங்களில் தாமதமான போக்கு காணப்படும். நிர்ப்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் சரியாக முடிக்க வேண்டுமே என்ற கவலை உண்டாகும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பேசுவது நல்லது. வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம். சிலர் கலைத்துறையினருக்கு எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும்.
ரோகிணி:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பழி ஏற்பட வாய்ப்பு உண்டு. எதிர்பாராத செலவு உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் வரலாம். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. ஆயுதங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. குடும்பத்தில் திடீர் பிரச்சினைகள் ஏற்படலாம். கவனம் தேவை. குடும்பச் செலவுகள் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கும்.
மிருக சிரீஷம் 1, 2, பாதம்:
இந்த மாதம் தேவையற்ற சில காரியங்களைச் செய்ய வேண்டி இருந்தாலும் அதன் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். தேவையான உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். விளையாட்டுப் போட்டிகளில் திறமை வெளிப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல் திறமை மூலம் கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிப்பார்கள். தேவையான பண உதவி கிடைப்பதிலும், புதிய ஆர்டர்கள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படும்.
பரிகாரம்:
ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்மரை வணங்குங்கள். நெய் தீபமேற்றி வழிபடுங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 4, 5, 6
அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்