- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மேஷம்
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
இந்த வாரம் எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும்.
அடுத்தவர்களது செய்கை உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். எனவே நிதானமாக இருப்பது நல்லது. சொந்த காரியங்களில் தாமதம் ஏற்படலாம். சின்ன விஷயங்களால் மன நிறைவை அடைவீர்கள். எதிர்பாலினரிடம் பழகும் போது கவனம் தேவை.
தொழில் ஸ்தானத்தில் குரு உலா வருகிறார். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். மருந்து, ரசாயனம் போன்ற தொழில்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான காரியங்களில் ஈடுபடும்போது அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது காரிய வெற்றியை உண்டாக்கும்.
எளிதில் மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பம் தொடர்பான கவலைகள் மறையும். குடும்பச் செலவை சமாளிக்க பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
மனதில் ஆன்மிக எண்ணங்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும்.
பெண்களுக்கு நிதானமாக செயல்படுவது நன்மையைத் தரும். கலைத்துறையினருக்கு நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு மனஸ்தாபம் நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி குறையும். எதையும் அவசரப்படாமல் நிதானமாக செய்வது நல்லது.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தெற்கு
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு
எண்கள்: 1, 3
பரிகாரம்: கந்த சஷ்டி கவசம் சொல்லி முருகனை வணங்க பிரச்சினைகள் குறையும். மனதில் அமைதி உண்டாகும்.
********************************
» கரு உருவாக்கும் நாயகி... சுகப்பிரசவம் தரும் தேவி - திருக்கருகாவூர் அற்புதம்
» ’ஆன்லைனில்’ குரு வார பிரதோஷ பூஜை தரிசனம்; திருவொற்றியூர் தியாகராஜ கோயில் ஏற்பாடு
ரிஷபம்
(கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)
இந்த வாரம் நீண்டநாட்களாக தடைபட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். ராசியாதிபதி சுக்கிரனுடன் குரு பகவான் திரிகோணப்படி சம்பந்தம் பெறுவதன் மூலம் அதிர்ஷ்டம் உண்டாகும்.
விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தாலும் கொள்கைக்காக பாடுபடுவீர்கள். அதிகம் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் சொல்வதை நம்பும் முன் அதைப்பற்றி ஆலோசனை செய்வது நல்லது.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஒரே குறிக்கோளுடன் இருப்பதை விட்டு வாடிக்கையாளர் தேவை அறிந்து செயல்படுவது முன்னேற்றத்திற்கு உதவும். பணவரத்து அதிகரிக்கும். அரசாங்கத்தின் மூலம் உதவிகளைப் பெறுவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் துணிச்சலாக வேலைகளைச் செய்து வெற்றி பெறுவார்கள். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளால் நன்மையும் உண்டாகும். எதிர்பார்த்த பதவி உயர்வில் பெறுவதில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.
குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். அதனால் நன்மையும் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
பெண்களுக்கு அடுத்தவர் கூறுவதை செய்யும் முன்பு அது பற்றி ஆலோசனை செய்வது நல்லது. கலைத்துறையினருக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம். மாணவர்களுக்கு ஆசிரியர், சக மாணவர் மத்தியில் நன்மதிப்பு உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: தென்மேற்கு, தெற்கு
நிறங்கள்: வெள்ளை
எண்கள்: 3, 6
பரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வர பணத் தட்டுப்பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும்.
**********************************
மிதுனம்
(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
இந்த வாரம் ராசியாதிபதி புதன் ராசியில் சூரியன் - ராகுவுடன் இணைந்து சஞ்சாரம் செய்கிறார். கடிதப் போக்குவரத்து சாதகமான பலன் தரும்.
அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. மனதில் தைரியம் உண்டாகும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தடைபட்டிருந்த விஷயங்களைத் தொடர்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுர்யமான பேச்சின் மூலம் தங்களது வியாபாரத்தை லாபகரமாக செய்வார்கள். தேவையான பண உதவியும் கிடைக்கும்.
பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக உழைப்பும் அதற்கேற்ற பலனும் உண்டாகும்.
எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நன்மை தரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணியிட மாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.
குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். அக்கம்பக்கத்தினரிடமும் உறவினர்கள், நண்பர்களிடம் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும்.
பெண்களுக்கு மனதில் தைரியம் உண்டாகும். கலைத்துறையினருக்கு மனதில் தெம்பு உண்டாகும். அரசியல்வாதிகள் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு எதிர்பார்ப்புகளை குறைத்து இருப்பதை வைத்து முன்னேற முயற்சிப்பது நல்லது.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: பச்சை, மஞ்சள்
எண்கள்: 2, 3, 5
பரிகாரம்: புதன்கிழமையில் நவகிரகத்தில் புதன் பகவானை நெய்தீபம் ஏற்றி வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.
***********************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
49 mins ago
ஜோதிடம்
59 mins ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago