27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் - 48;
‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
வணக்கம் வாசகர்களே.
விசாகம் நட்சத்திர குணங்களைப் பார்த்து வருகிறோம்.
இன்னும் பல தகவல்களைப் பார்ப்போம்.
அயராத உழைப்பு, தோல்வியிலும் துவளாத நெஞ்சுரம், சறுக்கினாலும் அடுத்த நொடியே சுதாரித்து எழும் வேகம், ஓய்வுக்கே ஓய்வு கொடுக்கும் தொடர் உழைப்பு, நட்புக்காக எதையும் தரக்கூடிய குணம், வாழ்க்கைத்துணைக்கு சகல சௌகரியங்களையும் செய்து தரும் பாங்கு, குழந்தைகளின் மீது அளவற்ற பாசம், எப்பாடுபட்டாவது சொந்த வீடு வாங்கிவிடும் லட்சியம், பூர்வீகச் சொத்துக்களை லாபம் தரக்கூடியதாக மாற்றும் திறமை.... இவையெல்லாம் விசாக நட்சத்திரக்காரர்களின் கேரக்டர்கள்.
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்... தொழிலில் நேர்மை, பணியில் அர்ப்பணிப்பு, கூட்டாக தொழில் செய்தல், அரசாங்கத்தையும் எதிர்க்கும் நெஞ்சுரம், துரோகிகளை வேரறுக்கும் குணம், எதிரிகளையும் எதிர்ப்புகளையும் அனாயசமாகக் கையாளும் திறமை உடையவர்கள்.
ஒரு பிரச்சினையின் துவக்கம் விசாகம், போராட்டங்கள் விசாகம். நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பது போல விசாகத்தில் தொடங்கும் பிரச்சினை சுமுகமாகவே முடியும். சண்டை சச்சரவுகள், காவல்துறை நடவடிக்கை, இதனால் ஏற்படும் அவமானமும் விசாக நட்சத்திரக்க்கே உண்டான அம்சங்கள்.
ஓம் எனும் பிரணவ மந்திரம் விசாகம். அதனால்தான் ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு அபாயம் ஒருபோதும் இல்லை. இதை விசாக நட்சத்திரக்காரர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
அடுத்து... விசாக நட்சத்திரக்காரர்களின் இறைவன், மற்றும் செய்யவேண்டியது என்ன என்று பார்க்கலாம்.
தேவதை - அக்னி
அதிதேவதை - முருகப்பெருமான்
மிருகம் - பெண் புலி
பறவை -செங்குருவி
விருட்சம் - விளா மரம்
விசாகத்திற்க்கு பொருந்தும் வாழ்க்கைத் துணை நட்சத்திரக்காரர்கள் -
பூசம் - அனுஷம் - உத்திரட்டாதி ; இந்த நட்சத்திரக்காரர்களில் இருந்து ஒருவரை வாழ்க்கைத்துணையாக கிடைக்க பெரும்பேறு பெற்றிருக்க வேண்டும். மனதில் ஓடும் எண்ணத்தை புரிந்து கொள்கின்ற துணை அமைவது அதிர்ஷ்டம்தானே! விசாக நட்சத்திரக்கார்களுக்கு பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரக்காரர்கள் அந்த வகைதான். 90%
மிருகசீரிடம் - சித்திரை - அவிட்டம் ;
இந்த நட்சத்திரக்காரர்கள் வாழ்க்கைத்துணையாக அமைவது விசாக நட்சத்திரக்காரர்களுக்கு முன்ஜென்ம புண்ணியம் என்றுதான் சொல்லவேண்டும். அவ்வளவு சிறப்பான நன்மைகள் உண்டாகும்.90%
அஸ்வினி - மூலம் ;
இந்த நட்சத்திரக்காரர்களில் வாழ்க்கைத்துணை அமைவது சிறப்பான வாழ்க்கையைத் தரும். செல்வ வளத்தோடு, ஆடம்பர வாழ்வு அமையும். 85%
இணையக்கூடாத நட்சத்திரங்கள்
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, கார்த்திகை, உத்திரம், உத்திராடம் மற்றும் மகம் இந்த நட்சத்திரக்காரர்கள் வாழ்க்கைத் துணையாக அமைந்தால் வாழ்க்கை அமைதியாக இருக்காது. நிம்மதி இருக்காது.
இதில் விடுபட்ட நட்சத்திரங்களை ஜோதிடரின் ஆலோசனை பெற்று இணைக்கலாம்.
அடுத்து, விசாக நட்சத்திரத்துக்கு நன்மையையும் அதிர்ஷ்டத்தையும் தரும் நட்சத்திரங்கள் -
பூசம் - அனுஷம் - உத்திரட்டாதி ;
இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தக் காரியமும் 100% வெற்றியைத் தரும். பணவரவு முதல் ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவது வரை, புதிய முயற்சிகளில் ஈடுபடுவது, தொழில் மற்றும் வியாபாரங்கள் தொடங்குவது முதலானவை சிறப்பாக இருக்கும். இந்த நட்சத்திர நாட்களில் செயல்படுவதில், தோல்வி என்பதே இருக்காது. இந்த நட்சத்திர நண்பர்கள் எந்தச் சூழ்நிலையிலும் விசாக நட்சத்திரக்காரர்களை கைவிட மாட்டார்கள்.
அஸ்வினி - மகம் - மூலம் ;
இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் விசாக நட்சத்திரக்காரர்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். சொத்துகள் வாங்கவும் விற்கவும் லாபகரமாக இருக்கும். மேலும் பத்திரப்பதிவு செய்ய, புதிய வாகனம் வாங்க, மன மகிழ்ச்சி தரக்கூடிய காரியங்கள் செய்ய, தாயாரிடம் ஆலோசனை கேட்க, இளைய சகோதரரிடம் ஆதாயம் அடைய என எல்லாவற்றுக்கும் ஏற்ற நாட்களாக அமையும். அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரக்காரர்கள், விசாக நட்சத்திரக்காரர்களுக்கு நண்பர்களாக அமைந்தால் உங்கள் சுகதுக்கங்களில் நேர்மையாக பங்கெடுப்பவராக இருப்பார்கள்.
கார்த்திகை - உத்திரம் - உத்திராடம் ;
இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் தொழில் மற்றும் வியாபாரம் தொடங்கவும், தொழில் வளர்ச்சிக்கு கடன் பெறவும் ஏற்ற நாட்கள். தீராத கடன் தீர இந்த நட்சத்திர நாட்களில் சிறிதளவாவது கடனை அடைக்க விரைவில் கடன் மொத்தமும் தீரும். மருத்துவ சிகிச்சை தொடங்கவும், மருந்துண்ணவும் சிறந்தது. எதிர்ப்புகளை வீழ்த்த வியூகம் வகுக்கவும் ஏற்றது. நண்பர்களாக அமைந்தால் உங்களின் கஷ்ட காலங்களில் உங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருப்பார்கள்.
மிருகசீரிடம் - சித்திரை - அவிட்டம் ;
இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தக் காரியமும் முழு வெற்றியையும், எதிர்பார்த்ததைவிட அதிக லாபமும் கிடைக்கும். ஒப்பந்தங்கள் போடவும், பயணங்கள் மேற்கொள்ளவும், மூத்த சகோதரரிடம் காரியங்கள் சாதிக்கவும், மறுமண முயற்சிகளில் ஈடுபடவும் ஏற்றவை. நண்பர்களாக அமைந்தால் “குகனோடு ஐவரானோம்” என்பதற்கு இணையாக இருந்து பக்கபலமாக இருப்பார்கள்.
திருவாதிரை - சுவாதி - சதயம் ;
இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தக் காரியமும் சிந்தாமல் சிதறாமல் வெற்றிகளைத் தந்தே தீரும். எதிர்பார்த்த லாபத்தைவிட பலமடங்கு லாபம் உண்டாகும். பயணங்கள் செய்யவும், சுப காரியங்கள் செய்யவும், ஆன்மிகம் தொடர்பான விஷயங்கள் செய்யவும், குலதெய்வத்தின் அருளைப் பெறவும், மகான்களை தரிசிக்கவும், அத்தியாவசிய, ஆடம்பர பொருட்கள் வாங்கவும் ஏற்ற நாட்களாகும். இந்த நட்சத்திரக்காரர்கள், விசாக நட்சத்திரக்காரர்களுக்கு நண்பர்களாக அமைந்தால் கேட்கமலேயே தேடிவந்து உதவி செய்வார்கள்.
தீமைகளைத் தரக்கூடிய, அளவற்ற பிரச்சினைகளை சந்திக்க வைக்கும் நட்சத்திரங்கள்;
ஆயில்யம் - கேட்டை - ரேவதி ;
விசாக நட்சத்திரக்காரர்கள், இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் எந்த புது முயற்சிகளிலும் ஈடுபடக்கூடாது. பயணம் கூடவே கூடாது. சுபகாரியங்கள் கூடாது. கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடவேகூடாது. மீறினால் அளவற்ற துயரங்கள் ஏற்படும். சட்ட நடவடிக்கைகள் பாயும். நண்பர்களாக அமைந்தால் அவர்களால் அவமானங்களையும் அவஸ்தைகளையும் சந்திக்க வேண்டியது வரும்.
பரணி - பூரம் - பூராடம் ;
இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்த காரியமும் உங்களுக்கு எந்தப் பயனையும் தராது. தர்ம காரியமாகத்தான் முடியும். நண்பர்களாக அமைந்தால் உங்களிடம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுரண்டிவிடுவார்கள்.
ரோகிணி - அஸ்தம் - திருவோணம் ;
இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எதுவும் விசாக நட்சத்திரக்காரர்களுக்கு எதிராக திரும்பும். நெருப்பிலிட்ட புழுவாய் துடிக்க வேண்டியது வரும். நண்பர்களாக அமைந்தால் துன்பத்தைத் தவிர வேறு எதுவும் கிடைக்காது.
பொதுவாக விசாக நட்சத்திரக்காரர்கள் முருகன் வழிபாடு செய்வது மிக மிக அவசியம். திருமுருகாற்றுப்படை வாசிப்பதும் நற்பலன்கள் தரும். கோழிகளுக்கு தீவனம் தருவதும், சிற்றெறும்புக்கு அரிசி மற்றும் உணவு தருவதும் சிறப்பான பலன்களை தரும்.
அடுத்த பதிவில் விசாகத்தின் நான்கு பாதங்களுக்கும் தனித்தனியாக குணநலன்களை பார்ப்போம்!
- வளரும்
*************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago