கடகம், சிம்மம், கன்னி; வார ராசிபலன் - (ஜூன் 11 முதல் 17ம் தேதி வரை)

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கடகம்:
கடல் பிரயாணங்களை அதிகம் விரும்பும் கடக ராசியினரே.
இந்த வாரம் தடைகள் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பண வரத்து எதிர்பார்த்தது போல் இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கலாம்.
பாதியில் நின்ற காரியங்களை தொடர்ந்து செய்து முடிப்பீர்கள். திடீர் குழப்பம் ஏற்படலாம். தீ, எந்திரம் ஆகியவற்றை கையாளும்போது கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

கணவன் மனைவிக்கிடையே மன மகிழ்ச்சி ஏற்பட அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளின் கல்வி யில் கவனம் செலுத்துவது நன்மையை தரும். வழக்கு விவகாரங் களில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது.
தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் இருக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். பணவரத்து இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சிறிது காலம் தள்ளிப் போடுவது சிறந்தது.
பெண்களுக்கு எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை குறையும். அதிக மதிப்பெண் எடுக்க ஆர்வமாக படிப்பீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, வெளிர்பச்சை
எண்கள்: 2, 5
பரிகாரம்: அம்மனுக்கு மல்லிகைப் பூ சூடி நமஸ்காரம் செய்யுங்கள். வேண்டியது கிடைக்கும்.
*************************************************************************************


சிம்மம்:
உடன் பிறந்தவர்களுக்காக உதவத் துடிக்கும் சிம்ம ராசியினரே.
இந்த காலகட்டத்தில் நன்மை உண்டாகும். தனலாபம் ஏற்படும். அடுத்தவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு ஏற்படும். கோபத்தால் சில்லறைச் சண்டைகள் ஏற்படலாம்.
பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அனு சரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே தேவையற்ற மன வருத்தம் உண்டாகலாம். கவனம் தேவை.


மருத்துவம் தொடர்பான செலவும் ஏற் படலாம். ஆயுதம், நெருப்பு ஆகிய வற்றை கையாளும்போது கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் காண்பிப்பார்கள். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும்.
உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளிடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது.
பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தைச் செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை விலகும். விளையாட்டு போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். விடுமுறையில் மகிழ்ச்சியான பொழுது போக்கில் ஈடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி
திசைகள்: கிழக்கு, தென் கிழக்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 2, 8
பரிகாரம்: சிவனாரின் அபிஷேகத்திற்கு தயிர் வாங்கிக் கொடுங்கள். பிரச்சினைகள் தீரும்.
***********************************************


கன்னி:
உழைத்து உயர வேண்டும் என்ற எண்ணமுடைய கன்னி ராசியினரே.
இந்த காலகட்டத்தில் நெருக்கடியான பிரச்சினைகள் நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
சொன்ன சொல்லைக் காப்பாற்ற பாடுபடுவீர்கள். மற்றவர்கள் மேல் இரக்கம் ஏற்படும். நீண்டநாட்களாக இருந்த பிரச்சினைகள் தீரும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.

சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து பேசுவது நல்லது. எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்படையும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான பிரச்சினைகள் தீரும்.
நல்ல உத்தியோகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகமான எதிர்ப்புகள் விலகும். பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்க கூடுதல் நேரம் உழைக்க வேண்டி இருக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.
வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது பற்றிய கவலை நீங்கும். படிப்பில் ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு
நிறங்கள்: பச்சை, மஞ்சள்
எண்கள்: 3, 5
பரிகாரம்: ஸ்ரீ சாஸ்தா வழிபாடு செய்து வர காரியங்களில் இருந்த வந்த தடைகள் தீரும்.
*******************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்