- 27 நட்சத்திரங்கள் ; ஏ டூ இஸட் தகவல்கள் - 45;
‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
வணக்கம் வாசகர்களே.
இந்தப் பதிவில் சுவாதி நட்சத்திரத்திற்கு யோகம் தரக்கூடிய நட்சத்திரங்கள் எவை எவை என்பதைப் பார்ப்போம்.
முன்னதாக, இன்னும் சில தகவல்களைப் பார்க்கலாம்.
» உடல் நலம், மன நலம் காத்தருளும் குணசீலம் பெருமாள்! - நோய் தீர்க்கும் திருத்தலங்கள்
» எலுமிச்சை சாதம் கொடுங்களேன்... நல்வழி தருவான் வழிவிடு முருகன்!
இனிய வாசக நண்பர்களே... 27 நட்சத்திரக்காரர்களுக்கும் ஒரேயொரு விஷயத்தைச் சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் சுவாதி நட்சத்திரக்காரர்களை எப்பாடுபட்டாவது நண்பர்களாக வைத்துக்கொள்ளுங்கள். உங்களின் இக்கட்டான நேரத்தில் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்படியும் உங்களுக்கு உதவுவார்கள்.
பொதுவாக சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள். ஆனால் நட்பு வட்டம் மிகமிகப் பெரியது. இவர்கள் எந்த இடத்திற்குச் சென்றாலும் அங்கு ஒரு நட்பை சம்பாதித்துவிடுவார்கள். அது டீக்கடை முதல் ஐந்து நட்சத்திர விடுதிவரை, பேருந்து முதல் விமானம் வரை எங்கும் இவர்களின் முகம் பரிச்சயமாக இருக்கும்.
இதனால் இவர்கள் தங்கள் நண்பர்களோடு எங்கு சென்றாலும் நட்பு வட்டம் கண்டு நண்பர்கள் வாயடைத்துப் போவார்கள். “எங்க போனாலும் உனக்கு தெரிஞ்சவன் இருக்கிறானே எப்படிடா?” என வியப்பாகவே கேட்பார்கள். அப்படி ஒரு நட்பு வட்டம் இருக்கும். ஆனால் இந்த நட்பு வட்டம் எல்லாம் பெயரளவுக்குத்தான்! பெருமை உண்டே தவிர வேறு எதற்கும் பயன் தராது.
சரி, நட்பு தான் இப்படி என்றால், நண்பர்கள்?
(நண்பர்கள் - நற் பண்புகள் கொண்டவர்கள். அப்படியானால் நட்பு? கடந்து செல்வது நட்பு) நண்பர்களாக இருப்பவர்கள் நிச்சயம் உதவுவார்கள். ஆனால் செய்த உதவிக்கு மேல் அதிகம் திரும்பப் பெற்றுக்கொள்வார்கள். இது விதிக்கப்பட்டது மாற்றவே முடியாது.
சேமிப்பு இல்லாமலேயே வாழ்பவர்கள் சுவாதிக்காரர்கள். இனிய சுவாதி நட்சத்திரக்காரர்களே... இனியாவது சேமிப்பைத் தொடங்குங்கள். இனியும் திறந்த புத்தகமாக இருக்காதீர்கள். ஆடம்பரச் செலவுகளை அறவே கைவிடுங்கள். அத்தியாவசியச் செலவுகளை மட்டுமே செய்யுங்கள்.
சரி, சுவாதிக்கு அதிக நன்மைகளை, யோகங்களை செய்யக்கூடிய நட்சத்திரங்கள் என்னென்ன, நட்சத்திரக்காரர்கள், யார் யார்?
புனர்பூசம் - விசாகம் - பூரட்டாதி ;
இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தக் காரியமும் முழுமையான வெற்றியைத் தரும். அது பண விஷயமாகவும் இருக்கலாம். வாழ்க்கையில் நடைபெறும் முக்கிய சம்பவங்களாகவும் இருக்கலாம். இந்த நட்சத்திர நண்பர்கள் எல்லாவகையிலும் உறுதுணையாக இருப்பார்கள்.
ஆயில்யம் - கேட்டை - ரேவதி ;
இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் சொத்துக்கள் வாங்கவும், விற்கவும் மிகுந்த நன்மைகளையும் லாபங்களை தரும். பயணங்கள் செய்ய, ஆடை ஆபரணங்கள் வாங்க, வங்கியில் கணக்கு துவங்க, என எதுவும் உங்களுக்கு நன்மையை வாரி வழங்கும். இந்த நட்சத்திர நண்பர்கள் பொருளாதார உதவிகள் மட்டுமல்லாமல் எல்லாவிதத்திலும் உண்மையாக இருப்பார்கள்.
பரணி - பூரம் - பூராடம் ;
இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் கண்ணை மூடிக்கொண்டு காரியங்களைச் செய்யலாம். வெற்றி நிச்சயம். முழுமையான வெற்றியைத் தரும். கடன் வாங்க, கடன் அடைக்க, வேலைக்கு விண்ணப்பிக்க, பணியில் சேர, பதவி உயர்வு தொடர்பாக ஆலோசனை செய்ய, நோய்கள் நீங்குவதற்காக மருந்து உண்ண, மாற்று மருத்துவத்தை முயற்சி செய்ய என அனைத்தும் சாதகமாக இருக்கும். நண்பர்களாக அமைய, ஆபத்துக் காலத்தில் சரியாக உதவி செய்வார்கள். வேலை முதல் தொழில் தொடர்பான உதவிகள் வரை அனைத்தையும் இந்த நட்சத்திரக்காரர்கள் செய்து கொடுப்பார்கள்.
ரோகிணி - அஸ்தம் - திருவோணம் ;
இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் எல்லாவிதமான பயணங்கள், வெளிநாடு செல்வது, சுப காரியங்கள் தொடங்கவும், செய்யவும் மிகமிக ஏற்ற நட்சத்திர நாட்கள். இந்த நட்சத்திரக்காரர்கள், நண்பர்களாக அமைந்தால் அதிக உதவிகளையும் நன்மைகளையும் பெற்றிடலாம்.
மிருகசீரிடம் - சித்திரை - அவிட்டம் ;
இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எதுவும் இரட்டிப்பு நன்மையையும் மிகப்பெரிய லாபத்தையும் கொடுக்கும். வெளிநாடு செல்லுதல், தொழில் முறை பயணங்கள் செய்வது, ஒப்பந்தங்கள் போடுதல் என எதுவும் திருப்தியான பயன்களையும் ஏராளமான பலன்களையும் தரும் என்பது உறுதி. இந்த நட்சத்திரக்காரர்கள் நண்பர்களாக அமைந்தால் தேடிவந்து உதவிகள் செய்வார்கள். ஆபத்துக் காலங்களில் உறுதுணையாக இருப்பார்கள்.
எந்தவிதமான நன்மைகளையும் தராத, பிரச்சினைகளை உண்டுபண்ணக்கூடிய, பயன்தராத நட்சத்திரங்கள் - நட்சத்திரக்காரர்கள் ;
பூசம் - அனுஷம் - உத்திரட்டாதி ;
இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தக் காரியமும் உங்களுக்கு எதிராக மாறும். சுவாதி நட்சத்திரக்கார்ர்களான உங்களுக்குப் பிரச்சினைகளையும் துயரத்தையும் தரும். எனவே, இந்த நட்சத்திர நாட்களில், முக்கியக் காரியங்களைத் தவிர்ப்பது நல்லது. அதேபோல், இந்த நட்சத்திரக்காரர்கள் நண்பர்களாக அமைந்தால் துன்பத்தைத் தவிர வேறெதுவும் உங்களுக்குக் கிடைக்காது என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.
அஸ்வினி - மகம் - மூலம் ;
இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்த விஷயமும் பிறர்க்கு மட்டுமே நன்மை தரும். அதாவது உங்களால் அடுத்தவருக்கு மட்டுமே நன்மைகள் கிடைக்கும். உங்களுக்கு எந்த விதத்திலும் நன்மை கிடைக்காது. குறிப்பாக தொழில் மற்றும் வியாபார விஷயங்கள் மேற்கொள்ளக்கூடாது. நண்பர்களாக அமைந்தால் உங்களை காட்டியே அவர்கள் லாபம் அடைவார்கள். உங்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது.
கார்த்திகை - உத்திரம் - உத்திராடம் ;
இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் நீங்கள் செய்யும் எதுவும் உங்களுக்கு எதிராக திரும்பி தீராத துயரத்தைத் தரும். நண்பர்களாக அமைந்தால், அவமானங்களையே சந்திக்க வேண்டிவரும். மிக மிக கவனமாக இருக்கக் கூடிய நட்சத்திர நாட்கள் இவை.
திருவாதிரை - சுவாதி - சதயம் ;
இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் சுவாதி நட்சத்திரக்காரர்கள் மேற்கொள்ளும் எதுவும் சற்று தாமதம் தந்து பின்னரே முழு நன்மையையும் தரும். இந்த நட்சத்திரநாட்களில், ஆண்கள் மட்டும் திருமணம் செய்யக்கூடாது. நகம், தலைமுடி வெட்டக்கூடாது. மொட்டை போடக்கூடாது, காது குத்து, உபநயனம் செய்யக்கூடாது. தாம்பத்யம் கூடவே கூடாது.
அடுத்த பதிவில் சுவாதி நட்சத்திரத்தின் நான்கு பாதங்களுக்குமான, தனித்தனி குணங்களையும் பலன்களையும் பார்ப்போம்.
- வளரும்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago