- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
கடகம்
(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
இந்த வாரம் செவ்வாயால் எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும்.
பயணம் மூலம் நன்மை கிடைக்கும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். பணவரத்து அதிகரிக்கும்.
ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன யோகம் உண்டாகும். சக பணியாளர்கள் கை கொடுப்பார்கள்.
குடும்பாதிபதி சூரியனின் பாதசார சஞ்சாரத்தால் குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். உறவு பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கப் பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.
பெண்களுக்கு புத்தி சாதுரியம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும்.
அரசியல்வாதிகள் கோபமாகப் பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களைப் படிப்பீர்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, வெளிர்பச்சை
எண்கள்: 2, 5
பரிகாரம்: அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடி அம்மனை வணங்கி வர, குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.
*************************************************************************************
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
இந்த வாரம் சுபச்செலவு ஏற்படும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம்.
இருக்கும் இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும். எதிலும் திருப்தி இல்லாத நிலை காணப்படும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியைச் சந்திக்க வேண்டி இருக்கும். லாபம் எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாகப் பணிகளை மேற்கொள்வது நல்லது.
மேலிடத்திலிருந்து கனிவான செய்திகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் கலகலப்பு அதிகரிக்கும். எதிலும் சந்தோஷம் நிம்மதி வரும். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும்.
பிள்ளைகள் சொல்வதை கேட்டு நிதானமாகப் பேசுவது நல்லது. பெண்களுக்கு எந்த முயற்சியிலும் சாதகமான பலன் கிடைப்பதில் இருந்து வந்த சுணக்க நிலை நீங்கும்.
கலைத்துறையினர் வீண் அலைச்சலைச் சந்திக்க வேண்டி இருக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிலும் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பார்க்கும் பதவியைப் பெறுவீர்கள்.
மாணவர்களுக்கு கல்வியைப் பற்றிய கவலை நீங்கும். தடையைத் தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள். எல்லா வகையிலும் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தெற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3, 6
பரிகாரம்: சிவாலயத்துக்குச் சென்று வணங்கி அர்ச்சனை செய்யுங்கள். வீட்டிலேயே சிவனாரை வணங்குங்கள். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். மனோபலம் கூடும்.
***********************************************************************************
கன்னி
(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
இந்த வாரம் வீண் வாக்குவாதங்கள் அகலும்.
எந்த காரியத்தையும் சிறிது முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். வாகன லாபம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். தொழில் ஸ்தானாதிபதியும் ராசிநாதனுமான புதன் சார பலத்தின் மூலம் நன்மை அளிக்கும் வகையில் இருக்கிறார்.
தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறி வேகம் பிடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான பலன் கிடைக்கப் பெறுவார்கள். புதிய பொறுப்புகள் சேரும். வேலை தேடியவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணி நீட்டிப்பு - பதவி உயர்வு கிடைப்பதற்கான சூழல் அதிகரிக்கும்.
குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
பெண்களுக்கு வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகளுக்கு மனதில் இருக்கும் குறைகள் அகலும். மேலிடம் உங்கள் மீது கரிசனப் பார்வை கொள்ளும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு
நிறங்கள்: பச்சை, மஞ்சள்
எண்கள்: 2, 3, 5
பரிகாரம்: துளசி அர்ப்பணித்து ஐயப்பனை அர்ச்சனை செய்து வணங்கி வர, உடல் ஆரோக்கியம் பெறும். குடும்ப பிரச்சினை தீரும்.
***************************************************************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago