துலாம், விருச்சிகம், தனுசு : வார ராசிபலன்; மே 28 முதல் ஜூன் 3-ம் தேதி வரை

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம்

(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)


இந்த வாரம் நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் காரியம் சாதகமான பலன் தரும்.


திட்டமிட்டுச் செய்யும் பயணங்கள் வெற்றி பெறும். செலவு செய்வது பற்றி யோசனை செய்து தேவையான செலவுகளை மட்டுமே செய்வீர்கள்.


குடும்பத்தில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்துகொள்வது அமைதியைத் தரும். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகளால் குடும்ப விஷயங்கள் சாதகமாக நடக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும்.


தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பங்குதாரர்களுடன் ஆலோசனை செய்து வியாபாரத்தை மேற்கொள்வது கூடுதல் லாபம் கிடைக்க வழி செய்யும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து முக்கிய முடிவுகள் எடுப்பது நன்மை தருவதாக இருக்கும்.
பெண்களுக்கு மற்றவர்கள் உதவியுடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும்.


கலைத்துறையினர் சிக்கனத்தைக் கடைபிடிப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு இருந்த பிரச்சினைகள் அகலும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற நண்பர்களின் உதவி கிடைக்கும். வீண் செலவைக் குறைப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி
திசைகள்: மேற்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 3, 6
பரிகாரம்: வைஷ்ணவி தேவி மற்றும் காளிகாம்பாள் அன்னையை வழிபட்டு வர நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து கூடும்.
**********************************************************

விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)


இந்த வாரம் புத்தி கூர்மையுடன் எதையும் செய்வீர்கள். எதிர்காலம் தொடர்பான திட்டங்கள் மனதில் தோன்றும். எதையும் முன்னேற்பாட்டுடன் செய்வீர்கள். விவேகத்துடன் செயல்படுவீர்கள்.


குடும்பத்தில் தாய்வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உயர்ந்த ஆடை ஆபரணங்கள் சேரும். நல்லது கெட்டது அறிந்து செயல்பட்டு நன்மை கிடைக்கப் பெறுவீர்கள்.


பணவசதி கூடும். குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்களிடம் அன்பு அதிகரிக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடந்து முடிய திறமையாக செயல்படுவீர்கள்.

புதிய ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏற்கெனவே செய்த திறமையான பணிகளுக்கு உரிய நற்பலனைப் பெறுவார்கள்.


பெண்களுக்கு எந்த ஒரு செயலைச் செய்யும் முன்பும் அதில் இருக்கும் நல்லது கெட்டதை ஆராய்ந்து பார்த்த பின் அதில் ஈடுபடுவது நல்லது.


கலைத்துறையினர் எதையும் யோசித்துச் செய்வது நல்லது. அரசியல்வாதிகளுக்கு பணவரத்து திருப்தி தரும்.


மாணவர்களுக்கு எதையும் அவசரமாக செய்யாமல் யோசித்துச் செயல்படுவது நல்லது. கல்வியைப் பற்றிய கவலை குறையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி
திசைகள்: வடக்கு, வடகிழக்கு
நிறங்கள்: சிவப்பு, வெள்ளை
எண்கள்: 6, 9
பரிகாரம்: குலதெய்வத்தை வழிபட எதிர்ப்புகள் அகலும். காரியத் தடை நீங்கும்.
*********************************************************************************


தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)


இந்த வாரம் செலவு கூடும். வாகனங்களால் செலவு உண்டாகும்.


மனதில் வீண் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கடியான சந்தர்ப்பத்தில் உதவிகள் கிடைப்பது கடினமாக இருக்கும்.


எந்தக் காரியங்களில் ஈடுபட்டாலும் மனத் தடுமாற்றம் இல்லாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் ஏதாவது ஒரு விஷயம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்படும்.
கணவன், மனைவி அனுசரித்துச் செல்வது நல்லது. நண்பர்கள் உறவினர்களுடன் மனஸ்தாபம் உண்டாகலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.


தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். வீண் அலைச்சல், எதிர்பாராத செலவு உண்டாகும்.


உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகள் கூறிய வேலையை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.
பெண்களுக்கு : மனத் தடுமாற்றம் இல்லாமல் எதையும் செய்வது நல்லது. கலைத்துறையினருக்கு : தேவையான உதவிகள் கிடைப்பது தாமதப்படும். அரசியல்வாதிகளுக்கு கடன் அடையும். மாணவர்களுக்கு கவனத் தடுமாற்றம் இல்லாமல் பாடங்களைப் படிப்பது நன்மை தரும். சக மாணவர்களிடம் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 3, 6
பரிகாரம்: நவக்கிரகத்தில் குருவை நெய் தீபம் ஏற்றி வணங்கி வருவது மன அமைதியைத் தருவதுடன் எல்லா நன்மைகளையும் தரும்.
*****************************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்