- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
கடகம் (புனர் பூசம் 4ம் பாதம்,பூசம், ஆயில்யம்)
இந்த வாரம் வீண் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும்.
புதிய காரியங்களில் ஈடுபடும்போது யோசித்துச் செயல்படுவது நல்லது. மன அமைதி பாதிக்கும்படியான சூழ்நிலை ஏற்பட்டு நீங்கும்.
நண்பர்களிடம் கவனமாகப் பேசி பழகுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷன் ஏற்படுத்துவதாக இருக்கும். அனுசரித்து செல்வது நல்லது.
கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசி செயல்படுவது நன்மை தரும். பிள்ளைகள் எதிர்பார்த்தபடி நடந்து கொள்வார்கள்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அதில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அதே நேரத்தில் சரக்குகளை அனுப்பும்போது கவனம் தேவை.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. அலுவலக வேலைகளால் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்களிடம் அலுவலகம் தொடர்பான ரகசியங்களை கூறுவதை தவிர்ப்பது நல்லது.
பெண்கள், நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கவனமாகப் பேசுவது நல்லது. கலைத்துறையினருக்கு அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும்.
அரசியல்வாதிகள், எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள்.
மாணவர்களுக்கு பெரியோர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - வியாழன் - வெள்ளி
திசைகள்: மேற்கு, வடக்கு
நிறங்கள்: வெள்ளை, நீலம்
எண்கள்: 2, 6, 9
பரிகாரம்: அபிராமி அந்தாதி படித்து அம்பாளை வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மனக் குழப்பம் நீங்கும். தைரியம் பிறக்கும்.
***************************************
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
இந்த வாரம் தடைபட்ட காரியங்கள் எவ்வித இடையூறுமின்றி நடந்து முடியும்.
நண்பர்கள் பலவிதங்களிலும் ஆதரவாக இருப்பார்கள். சூரிய சஞ்சாரம் புதனுடன் சேர்ந்து இருப்பது மனத் தெளிவை உண்டாக்கும். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும்.
குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதைக் கேட்டு நடப்பார்கள். அவர்களுக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து மகிழ்வீர்கள்.
தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த இடையூறுகள் குறையும். கடிதப் போக்குவரத்து மூலம் அனுகூலம் உண்டாகும். தொழில் விருத்தி அடைவதுடன் ஆதாயமும் அதிகரிக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் திருப்தியாக உணர்வார் கள். பணவரத்தும் இருக்கும். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும்.
பெண்களுக்கு தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மனத்தெளிவு உண்டாகும். கலைத்துறையினர் அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
மாணவர்களுக்கு திறமை வெளிப்படும். சக மாணவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்
திசைகள்: கிழக்கு, தெற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3, 9
பரிகாரம்: சிவனை வழிபட்டால் பாவம் நீங்கி பிரகாசமான எதிர்காலம் அமையும். கோதுமையில் விளக்கு ஏற்றுவது சிறந்தது.
********************************************
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
இந்த வாரம் ராசியாதிபதி புதன் ராசிக்கு 9ல் சஞ்சாரம் செய்வதும் சூரியன் சேர்க்கை பெறுவதும் பணவரத்தை அதிகரிக்கும்.
விருப்பமானவர்களைச் சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடைவீர்கள். மனத்துணிவு உண்டாகும். எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.
குடும்பத்தில் கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன் பேசும்போது நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.
பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
வாடிக்கையாளர்களிடம் கவனமாகப் பேசுவது வியாபார விருத்திக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பது நல்லது.
சக ஊழியர்கள் பேச்சைக் கேட்டு நடப்பதைத் தவிர்ப்பது நன்மை தருவதாக இருக்கும்.
பெண்களுக்கு மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு உண்டாகும். கலைஞர்களுக்கு புகழ் பாராட்டு வந்து சேரும். நற்பெயர் எடுப்பதற்கு உண்டான சூழ்நிலைகள் உருவாகும்.
அரசியல்வாதிகளுக்கு நலல பலன்கள் கிடைத்தாலும் அதேநேரத்தில் விழிப்புடன் செயல்படுவது நன்மைதரும்.
மாணவர்களுக்கு கவனமாக பாடங்களைப் படிப்பது நன்மை தரும். அடுத்தவர்களுக்கு ஆதரவாக செயல்படும்போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு
நிறங்கள்: பச்சை, வெள்ளை
எண்கள்: 5, 6
பரிகாரம்: விநாயகப் பெருமானை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வழிபடுவது தடைபட்ட காரியங்களில் இருந்த தடைநீங்கும். செல்வம் சேரும்.
**********************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago