பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)
இந்த வாரம் பாக்கியஸ்தானத்தில் ராசிநாதன் சுக்கிரன் இருக்கிறார். நீங்கள் எதையும் எதிர்த்து நின்று சமாளிப்பீர்கள்.
குடும்பத்தில் தம்பதிகளிடையே இடையே இருந்து வந்த பிரச்சினைகள் சுமுகமாக மறையும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும்.
புதிய வீடு, மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை. ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து வாங்குவது நல்லது. நண்பர்கள், உறவினர்கள் அந்நியோன்யமாக இருப்பர்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சற்று முயற்சி எடுத்தால் பதவி உயர்வு உங்களை வந்து சேரும். எதிர்பார்த்திருந்த பணி இடமாற்றம் உங்களை வந்து சேரும்.
மேலதிகாரிகளின் அனுசரனை இருந்து வரும். வியாபாரிகள் சிறப்பான முன்னேற்றத்தைப் பெறலாம். லாபம் அதிகரிக்கும். உங்கள் வியாபாரத்தை விரிவாக்கம் செய்வீர்கள்.
எதிரிகளை அறிவுப்பூர்வமாக சமாளிப்பீர்கள். புதிதாக ஆரம்பித்த தொழிலில் ஏற்றம் உண்டு. இரும்பு தொடர்பான தொழிலில் அதிக வருவாய் வந்து சேரும்.
கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும்.
கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் சற்று தாமதமாக வந்தாலும் முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். பொருளாதாரம் எதிர்பார்த்தபடி இருக்காது. உடன் இருப்போரால் பிரச்சினைகள் வரலாம்.
அரசியல்வாதிகள் சீரான பலனை எதிர்பார்க்கலாம். பெண்களுக்கு முயற்சிகளின் பேரில் சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். குழந்தை பாக்கியம் கிட்டும்.
வீட்டிற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். மாணவமணிகள் சிரத்தை எடுத்து படிப்பர். உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் வந்தே தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி
திசைகள்: வடமேற்கு, கிழக்கு
நிறங்கள்: வெண்மை, ஊதா
எண்கள்: 4, ,5 8
பரிகாரம்: தினமும் நவக்கிரங்களை வலம் வரவும். குலதெய்வ வழிபாடு மிகவும் முக்கியம்.
-----------------------------------------------------------------------------------------------
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை)
இந்த வாரம் காரிய அனுகூலமும் நற்சுகமும் பொருளாதார மேம்பாடும் உண்டாகும். நன்மைகள் கிடைக்கும். மதிப்பு மரியாதை கூடி செல்வாக்கு அதிகரிக்கும்.
முயற்சிகளில் சிறுசிறு தடைகள் வரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும். ஏதேனும் ஒரு காரணத்தால் குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவார்கள்.
கணவன்-மனைவி இடையே அன்பும் பாசமும் பெருகும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். நல்ல வரனாகவும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும்.
உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். கோரிக்கைகள், ஒப்பந்தங்கள் நிறைவேறும். உடன் பணி செய்வோர், மேலதிகாரிகள் ஆகியோரிடம் மிகுந்த நல்ல பெயர் கிடைக்கும்.
சம்பள உயர்வு கிடைக்கும். தொழில் செய்வோருக்கு வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். லாபம் கூடும். புதிய தொழிலால் அனுகூலம் ஏற்படும். எதிரிகளால் இருந்து வந்த தொந்தரவு நீங்கும்.
கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களால் பொருளாதார லாபம் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த வெற்றி வாய்ப்பு கிடைக்கும். பாராட்டுகளும் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் சிறப்படைய மிகுந்த முயற்சி தேவை.
பெண்களுக்கு வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். கைவிட்டுப் போன சொத்துக்கள் மீண்டும் வந்து சேரும். மாணவர்களுக்கு அனுகூலமான போக்கே காணப்படுகிறது. நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு
நிறங்கள்: பச்சை, சிவப்பு
எண்கள்: 8, 9
பரிகாரம்: செவ்வாய்கிழமைதோறும் அருகிலிருக்கும் ஏதேனும் ஒரு அம்மனை வணங்க தடைகள் அகலும். வீட்டில் விளக்கேற்றி அம்மனைப் பிரார்த்தியுங்கள்.
---------------------------------------------------------------------------------------
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்)
இந்த வாரம் எடுத்த காரியம் கைகூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும்.
உங்கள் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு மேம்படும். உங்கள் சொல்லுக்குப் பிறர் மரியாதை கொடுப்பர். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பப் பிரச்சினை கட்டுக்குள் அடங்கி இருக்கும்.
உத்தியோகம் பார்ப்பவர்கள் நல்ல வளர்ச்சியைக் காணலாம். உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தவர்கள் தவறை உணர்ந்து உங்களிடம் வந்து சரணடைவார்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கும்.
தொழில் புரிவோருக்கு இருந்து வந்த மந்த நிலை மறையும். அலைச்சலும் வேலைப் பளுவும் ஓரளவு இருக்கத்தான் செய்யும். அதே வேளையில் நீங்கள் சென்ற இடமெல்லாம் அனுகூலம் ஏற்படும்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும். ஏற்கெனவே இருந்து வந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
நெடுநாளாக வராமல் இருந்த பணம் வரும். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. உங்கள் சொல்லுக்கு பிறர் கட்டுப்படும் நிலையும் உருவாகும்.
பெண்களுக்கு வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை இருக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். உடல் அசதி ,சோம்பல் நீங்கும். மருத்துவச் செலவு குறையும்.
மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை அடையலாம். கடந்த சில மாதங்களாக இருந்து வந்த மந்தநிலை அடியோடு மாறும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தெற்கு
நிறங்கள்: மஞ்சள், ஆரஞ்சு
எண்கள்: 5, 6, 7
பரிகாரம்: வியாழக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று 3 முறை வலம் வரவும். வீட்டில் ருத்ரம் பாராயணம் செய்யுங்கள். தடைகள் தவிடுபொடியாகும்.
--------------------------------------------------------------------------------------
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago