அஸ்த நட்சத்திரக்காரர்களுக்கு ஆகாதவர்கள் யார்யார்? அவர்களுக்கு இணக்கமானவர்கள் யார்? 

By செய்திப்பிரிவு

27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் -38 ;


‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


வணக்கம் வாசகர்களே.
அஸ்தம் நட்சத்திரத்தின் தன்மைகளையும் அஸ்த நட்சத்திரக்காரர்களின் கேரக்டர்களையும் பார்த்து வருகிறோம்.
இன்னும் இன்னுமாக, அஸ்த நட்சத்திரக்காரர்களின் தனித்துவங்களைப் பார்ப்போம்.

அஸ்தம் நட்சத்திரத்தின் வடிவம் உள்ளங்கை என்று சொன்னேன், நினைவிருக்கிறதுதானே.
கை வடிவத்தை மட்டுமே கொண்ட கோயில் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த ஆலயத்திற்கு கண்டிப்பாகச் சென்று தரிசித்து வரவேண்டும்.
அஸ்த நட்சத்திரத் தொடர்பு கொண்ட ஆலயம் பற்றிய தகவல்களையும் தெரிந்துகொள்வோம்.
ஶ்ரீஎம்மூர் பகவதி ஆலயம், அன்னை ஹேமாம்பிகா. இந்த ஆலயம் சக்தி பீடங்களில் ஒன்று. சிவபெருமான் கோபத்தில் ருத்ரதாண்டவம் ஆடி அன்னை தாட்சாயினியை 51 கூறுகளாக சிதறடித்தார் என்கிறது புராணம். அதில் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு இடத்தில் விழுந்தன. கை மட்டுமே விழுந்த இடம்தான் எம்மூர் பகவதி ஆலயம்.

இங்கு அன்னைக்கு முழு உருவம் கிடையாது. அன்னையின் உள்ளங்கை மட்டுமே கருவறையில் உள்ளது. இந்தக் கோயிலின் அமைவிடம் கேரள மாநிலம் பாலக்காடு அருகில் உள்ளது. அஸ்தம் நட்சத்திர நாளில் அன்னையைத் தரிசிப்பது சிறப்பான பலன்களை தந்தருளும்.

சரி... இப்போது அஸ்த நட்சத்திர குணங்களைப் பார்ப்போம்.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இயல்பாகவே உதவும் மனப்பான்மை கொண்டவர்கள். ஆனாலும், தொடர்ந்து மற்றவர்களுக்கு உதவ உதவ, வாழ்க்கையில் உயர உயர வளர்வார்கள். தர்மம் செய்யும் தொகையைவிட பல நூறு மடங்கு செல்வம் சேரும். இறைக்க இறைக்க சுரக்கும் கேணி போல, அஸ்த நட்சத்திரக்காரர்களின் வாழ்க்கையில் செல்வம் சுரந்து கொண்டே இருக்கும். பொதுவாகவே, அஸ்தம் என்றில்லாமல், எவராக இருந்தாலும் அவர்கள் செய்த தான தருமங்கள் இரட்டிப்புப் பலன்களைத் தந்தருளும் என்பது உறுதி.

அஸ்த நட்சத்திரக்காரர்களுக்கு சிறிய ஆலோசனை...
சொந்தத் தொழில் தொடங்கும் ஆர்வம் இருந்தால் ஜோதிடரிடம் நன்கு ஆலோசனை பெற்று அதன் பின்னர் தொடங்குங்கள். அவசரப்பட்டு தொழில் தொடங்க வேண்டாம். ஏனென்றால், அஸ்த நட்சத்திரக்காரர்களுக்கு வேலைக்கு சென்று சாதிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். அதில்தான் உச்சத்தைத் தொடமுடியும். தொழில் செய்வதில் சில சங்கடங்களை சந்திக்க வேண்டியது வரும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.


அஸ்தம் நட்சத்திரத்திற்கு வாழ்க்கைத்துணையாக பொருந்தக்கூடிய நட்சத்திரங்கள்-

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் - அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் துணையாக இந்த நட்சத்திரக்காரர்கள் இருப்பார்கள். 98 மதிப்பெண்.


கார்த்திகை (ரிஷபம்), உத்திரம் (கன்னி), உத்திராடம்(மகரம்) - இதுவும் அதிர்ஷ்டகரமான நட்சத்திர துணை. இந்த நட்சத்திரத்தைக் கொண்ட யாரேனும் கணவராகவோ மனைவியாக அஸ்த நட்சத்திரக்கார்களுக்கு அமைந்தால் ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் என குதூகலம் நிறைந்த வாழ்க்கைதான்! 98 மதிப்பெண்.


விசாகம்- பூரட்டாதி - இந்த நட்சத்திரக்காரர்கள் வாழ்க்கைத்துணையாக அமைந்தால் செல்வவளம் பெருகும். 95 மதிப்பெண்.

ஆயில்யம் - கேட்டை - ரேவதி - இந்த நட்சத்திரத்தில் வாழ்க்கைத் துணை அமைந்தால், உழைப்பால் உயருதல், கடன் இல்லா வாழ்வு அமையும். 90 மதிப்பெண்.

பரணி - பூரம் - பூராடம் - இந்த நட்சத்திரக்காரர்கள் வாழ்க்கைத்துணையாக அமைந்தால், ஒருவருக்கொருவர் பரஸ்பரம் புரிதல், நல்ல பக்கபலமாக இருப்பது என இனிய வாழ்க்கை அமையும். 85 மதிப்பெண்.


சேர்க்கக்கூடாத நட்சத்திரங்கள்-
திருவாதிரை, சுவாதி, சதயம், புனர்பூசம், அஸ்வினி, மகம், மூலம் முதலான நட்சத்திர நாளையும் நட்சத்திரக்காரர்களையும் அஸ்த நட்சத்திரக்காரர்கள் தவிர்க்க வேண்டும்.

இந்த பட்டியலில் இல்லாத மற்ற நட்சத்திரங்கள் குறித்து ஜோதிடர் ஆலோசனையை பெற்று அறிந்துகொள்ளுங்கள்.


அடுத்து... அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு யோகங்களையும் நற்பலன்களையும் தரக்கூடிய நட்சத்திரங்களை பார்ப்போம்.

மிருகசீரிடம் - சித்திரை - அவிட்டம்
இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் நீங்கள் எந்த காரியத்தை மேற்கொண்டாலும் முழு வெற்றியைத் தரும். இதுதான் என்றில்லாமல் எந்த முயற்சிகளும், பணம் சம்பந்தபட்ட விஷயங்களும், தொழில் வியாபார விஷயங்களும், சுப காரியங்களும் செய்ய ஏற்றதாகவும் வெற்றி தரக்கூடியதாகவும் அமையும். நண்பர்கள் இந்த நட்சத்திரங்களில் இருந்தால் அஸ்த நட்சத்திரக்காரர்களுக்கு அதிக நன்மைகளும் உதவிகளும் கிடைக்கும்.

விசாகம் - பூரட்டாதி
இந்த நட்சத்திர நாட்களில் சொத்துக்கள் வாங்க- விற்க லாபகரமாக இருக்கும். ஆடை ஆபரணங்கள் வாங்கவும் சிறந்ததாகும். வீடு கட்டவும் ஏற்றது. ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களும் நன்மையைத் தரும். நண்பர்களாக இருந்தால் அதிகப்படியான உதவிகள் கிடைக்கும்.


ஆயில்யம் - கேட்டை - ரேவதி
இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் வேலைக்கு மனு செய்யலாம். நல்ல வேலை அமையும். கடன் வாங்க அல்லது அடைக்கவும், பணியில் சேரவும், தொழில் ஒப்பந்தங்கள் போடவும், வியாபாரப் பயணங்கள் மேற்கொள்ளவும், நோய் நீங்க மருந்து உட்கொள்ளவும், குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட நற்காரியங்கள் தொடங்கவும் சிறப்பான நாளாக அமையும். நண்பர்களால் தக்க சமயத்தில் உதவிகளும் கிடைக்கப்பெறுவீர்கள்.

பரணி - பூரம் - பூராடம்
இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் பயணங்கள் மேற்கொள்ள, அயல்நாடுகளில் வேலைக்குச் செல்ல, லாபகரமான வியாபாரங்கள் செய்ய, புதிய தொழில் தொடங்க, வங்கிக் கடன் பெற ஏற்ற நாட்களாகும்.நண்பர்களால் தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.


கார்த்திகை - உத்திரம் - உத்திராடம்
இந்த நட்சத்திர நாட்களில் தைரியமாக எந்தச் செயலை வேண்டுமானாலும் தொடங்கலாம். அதிகப்படியான நன்மைகள் நடக்கும். தொழில், வியாபாரப் பயணங்கள் மேற்கொள்ள, இன்பச் சுற்றுலா செல்ல, ஆன்மிகப் பயணங்கள் செய்ய ஏற்ற நாட்கள். அளவான நன்மை கிடைத்தால் போதும் என்று நினைத்தாலும் அளவற்ற நன்மைகள் அள்ளிக் கொடுக்கும் நாட்கள் இவை! இந்த நட்சத்திரக்காரர்கள் நண்பர்களாக அமைந்தால் அவர்களிடம் இருந்து கேட்காமலேயே உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள்.


ஆகாத நட்சத்திரங்களின் பட்டியல் -

திருவாதிரை - சுவாதி - சதயம்
இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எதுவும் உங்களுக்கு எதிராக மாறி துன்பத்தையே தரும். தொலைதூரப் பயணங்கள் மேற்கொண்டால் எதிர்பாராத சம்பவங்கள் நடக்கும். இந்த நட்சத்திர நாட்களில், புதிய முயற்சிகள் எதுவும் தொடங்கக்கூடாது. இந்த நட்சத்திர நண்பர்கள் அமைந்தால் அவர்களால் துயரங்களைச் சந்திக்க வேண்டியது வரும்.


பூசம் - அனுஷம் - உத்திரட்டாதி
இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எதுவும் உங்களுக்குப் பயன் தராது. ஆனால் உங்களால் மற்றவர்களுக்கு பயன்கள் கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான விஷயங்களை இந்தநாட்களில் செய்யலாம். இந்த நட்சத்திரக்காரர்கள் நண்பர்களாக அமைந்தால் உதவியும் இருக்காது, உபத்திரவமும் இருக்காது.


அஸ்வினி - மகம் - மூலம்
இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தவொரு காரியமும் தீராத மன வருத்தத்தையே தரும். இந்த நட்சத்திர நாளில், கடன் வாங்கவே கூடாது. வாங்கினால் கடும் அவஸ்தைகளையும் அவமானங்களையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம். அஸ்த நட்சத்திரக்காரர்கள், இந்த நட்சத்திரக்காரர்களை நண்பர்களாக அமையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி அமைந்தால் அவமானத்தைச் சந்திக்க வேண்டியது வரும்.


ரோகிணி - அஸ்தம் - திருவோணம்
இந்த நட்சத்திர நாட்களில் முடி மற்றும் நகம் வெட்டக்கூடாது. எண்ணெய்க் குளியல் கூடாது. தாம்பத்தியம் கூடாது. இந்த நட்சத்திர நாளில், திருமணம் செய்யக்கூடாது (ஆண்களுக்கு மட்டும்), உபநயனம் செய்யக்கூடாது. இவை தவிர மற்ற எல்லா சுப காரியங்களும் செய்யலாம்.

அடுத்த பதிவில் அஸ்தம் நட்சத்திரத்தின் ஒவ்வொரு பாதங்களுக்குமான தனித்தனியான குணங்களையும் பலன்களையும் சொல்கிறேன்.


- வளரும்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்