மேஷம், ரிஷபம், மிதுனம் ; வார ராசிபலன் (மே 7 முதல் 13ம் தேதி வரை)

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம்
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் லாபஸ்தானத்தில் சுய சாரம் பெற்று சஞ்சாரம் செய்வது நன்மையைத் தரும்.


தைரியமாக எந்தக் காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். ராசிக்கு 3ல் ராகுவுடன் சுக்கிரன் சேர்ந்து சஞ்சாரம் செய்வதால் வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது கவனம் தேவை.


தொழில், வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படலாம். புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு அலைய வேண்டி இருக்கும்.


உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றைச் சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும்.
கணவன் மனைவிக்கிடையே சுமுக உறவு அவசியம். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள்.


பெண்களுக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.


மாணவர்கள் கூடுதல் கவனம் செலுத்திப் பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும்போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தெற்கு
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு
எண்கள்: 1, 3
பரிகாரம்: தேவி கருமாரியம்மனை வணங்கி வர, எல்லா பிரச்சினைகளிலும் நல்ல தீர்வு கிடைக்கும். கஷ்டங்கள் நீங்கும்.
**********************************


ரிஷபம்
(கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

இந்த வாரம் ராசியாதிபதி சுக்கிரன் தனஸ்தானத்தில் ராகுவுடன் அமர்ந்திருக்கிறார். எந்த காரியத்தையும் திட்டமிட்டு சரியாக செய்து முடிப்பீர்கள்.
பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளை சமாளிக்க வேண்டி இருக்கும். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை.


தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன்விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலைச் சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலகப் பணிகள் மூலம் டென்ஷன் உண்டாகும். கவனமாகப் பேசுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாகப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது.


ராசிக்கு இரண்டில் ராகு இருப்பதால் கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்படலாம். அக்கம்பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம்.


பெண்களுக்கு அடுத்தவர்களின் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. தெய்வபக்தி அதிகரிக்கும்.


மாணவர்களுக்கு கல்வியை பற்றி டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து புரிந்து கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: தென்மேற்கு, தெற்கு
நிறங்கள்: வெள்ளை
எண்கள்: 3, 6
பரிகாரம்: அஷ்டலட்சுமிகளையும் வணங்கி வர மனோதைரியம் கூடும். பணக்கஷ்டம் குறையும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.
************************************

மிதுனம்
(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
இந்த வாரம் ராசிநாதன் புதன் லாபஸ்தானத்தில் சூரியனுடன் இணைந்திருக்கிறார்.


ராசியில் சுக்கிரன் ராகு சஞ்சரிக்கிறார்கள். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும். எதிலும் வேகம் ஏற்படும். பேச்சில் நிதானம் அவசியம்.


தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர் தொடர்பான காரியங்களில் தாமதம் இருக்கும்.


உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைப்பளு இருக்கும். சக ஊழியர்கள், மேல் அதிகாரிகள் ஆகியோரை அனுசரித்துச் செல்வது நல்லது.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போவது நன்மைதரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை.


பெண்களுக்கு வீண் பேச்சைக் குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம்.


மாணவர்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் கவனம் தேவை. பாடங்களைப் படிப்பதில் தீவிரம் காட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: பச்சை, மஞ்சள்
எண்கள்: 2, 3, 5
பரிகாரம்: குலதெய்வத்தை வணங்கிவர முன்ஜென்ம பாவம் நீங்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.
***********************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்