துலாம்,  விருச்சிகம், தனுசு - வார ராசிபலன் ; ஏப்ரல் 30 முதல் மே 6-ம் தேதி வரை; 

By செய்திப்பிரிவு


பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)


பஞ்சபூதங்களில் காற்று தத்துவத்தை கொண்ட துலா ராசி அன்பர்களே!


இந்த வாரம் நல்ல யோகமான பலன்களைப் பெற போகிறீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும்.
சொத்துக்கள் சம்பந்தமான காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்.
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலையும்படி இருந்தாலும் சாதகமாக முடியும். பணவரத்து திருப்தி தரும்.


உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். பயணங்களின் போது உடைமைகளை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது.


குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு திருப்தி தரும். உறவினர்கள் - நண்பர்கள் மூலம் நன்மை நடக்கும்.


பெண்கள் மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். அரசியல்வாதிகள் கோஷ்டிச் சண்டையிலிருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. சகாக்களுடன் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். எனினும் கட்சி மேல்மட்டத்தில் மதிக்கப்படுவீர்கள்.


கலைத்துறையினர் புதுமையான சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பர். படைப்புகளை வெளியிட சில போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும்.


மாணவர்கள், பாடங்களைப் படிப்பதில் முழுமூச்சுடன் ஈடுபடுவீர்கள். உங்களது பொருட்களின் மீது கூடுதல் கவனம் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு
எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்சினை தீரும். மன நிம்மதி கிடைக்கும்.
******************************************************************************


விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)


பஞ்சபூதங்களில் நீர் தத்துவத்தை கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!


இந்த வாரம் நல்ல பலன்களைப் பெறுவதில் சிரமம் இருக்காது. வீணாக மனதை உறுத்திக் கொண்டிருந்த கவலை நீங்கும். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் காரியத் தடங்கல் ஏற்படலாம். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும்போது கவனம் தேவை.


பயணத்தினால் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வியாபாரப் போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் விரிவாக்கத்திற்குத் தேவையான பண உதவிகள் கிடைக்கும்.


உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கப் பெறுவார்கள். பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டி வரும்.
குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.


பெண்களுக்கு பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.


அரசியல்துறையினருக்கு தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய முனைவீர்கள். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம்.


கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும். வராமல் இழுபறியாக இருந்த பணம் வந்து சேரும். வேலைப்பளு காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும்.


மாணவர்களுக்கு புத்திசாதுர்யம் வெளிப்படும். கல்வியில் இருந்த தொய்வு நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வியாழன்
திசைகள்: வடக்கு, வடகிழக்கு
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு
எண்கள்: 2, 4, 9
பரிகாரம்: திருமுருகாற்றுப்படையை பாராயணம் செய்து வர கந்தன் அருளால் கண்டபிணி நீங்கும். குடும்பக் கஷ்டம் தீரும்.
******************************************************************************


தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)


பஞ்சபூதங்களில் நெருப்புத் தத்துவத்தைக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!


இந்த வாரம் வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பயணங்கள் செல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள்.
புத்திசாதுர்யம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும். பாராட்டு கிடைக்கும். உடல்சோர்வு உண்டாகும். எனினும் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.


தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணவரத்து இருக்கும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.


குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் மனம் மகிழும் படி தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.


பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் ஏதாவது கவலை இருந்து வரும். அரசியல்வாதிகள் எதிர்ப்புகளையும் மீறி முன்னேறுவர். சகாக்கள் மத்தியில் ஆதரவு பெருகும். வீண், வறட்டு கௌரவத்துக்காக சேமிப்புகளை கரைத்துக்கொள்ள வேண்டாம்.


கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். கோபத்தைக் குறைத்து தன்மையாகப் பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும்.


மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களைப் படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்
திசைகள்: கிழக்கு, வடகிழக்கு
நிறங்கள்: மஞ்சள், வெள்ளை
எண்கள்: 1, 3, 5
பரிகாரம்: குருவிற்கு சாமந்தி மலரை சமர்ப்பித்து வியாழக்கிழமையில் வணங்கி வர, எல்லா நன்மைகளும் உண்டாகும்.
******************************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

21 hours ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்