பூர நட்சத்திரக்காரர்களுக்கு நண்பர்கள், எதிரிகள் யார்யார்? எந்த நட்சத்திர கணவன், மனைவி அமைவது சிறப்பு?

By செய்திப்பிரிவு

27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் 32 -
- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


வணக்கம் வாசகர்களே.
பூரம் நட்சத்திரத்தின் குணங்களை, பூர நட்சத்திரக்காரர்களின் கேரக்டர்களைச் சொல்லி வந்தேன்.
இதோ... இன்னும் சொல்கிறேன் கேளுங்கள்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்த தெய்வங்களைப் பார்த்தோம். பூர நட்சத்திரக்காரர்களின் தொழில் குறித்தும் வேலைகள் குறித்தும் பார்த்தோம்.
பிறக்கும்போதே சுக்கிர திசையில் பிறப்பதால் தந்தைக்கு யோகத்தை ஏற்படுத்தும். அதனால்தான் பூரத்தில் பிறந்தவர்கள் சொந்த வீடு, நல்ல வசதி வாய்ப்புகளைப் பெற்றிருப்பார்கள் என்றெல்லாம் தெரிவித்தேன். .
அதுசரி... பூர நட்சத்திரக்காரர்கள், நொறுக்குத்தீனிப் பிரியர்கள் என்று சொன்னீர்களே... அதற்கு என்ன காரணம்? என்று கேட்கிறீர்கள்தானே!
சொல்கிறேன்.

பூரத்தின் மிருகம் எலி. இந்த எலியானது சதா உணவை கொறித்துக் கொண்டே இருக்கும். இந்த குணம் பூர நட்சத்திரக்காரர்களுக்கும் உண்டு.
இங்கே ஒரு கேள்வி வரலாம்.
மகம் நட்சத்திரத்திற்கும் மிருகம் எலிதானே. அவர்கள் மட்டும் ஏன் அளவோடு உண்கிறார்கள்? என்று கேட்கலாம்.
மகம் கேதுவின் நட்சத்திரம். கேது அளவோடுதான் எதையும் செய்யும். உணவிலும் அப்படித்தான். இதுதான் காரணம்.

பூரத்தின் பிற வடிவங்கள்-
பெண்ணின் சுரோணிதம் (கர்ப்பம் அடையத் தேவையான ஒரு வித நீர்) உடலின் இடது பாகம், அம்மன் தெய்வங்கள், பெண்களின் பாவாடை, ஆண்களின் வேட்டி, கர்ப்பிணிப் பெண், வளையல், வளைகாப்பு, ஒட்டியாணம், செவிலியர்கள், தாதிகள், வாணவேடிக்கை, பலூன்கள், பலாப்பழம், தொட்டில், கட்டில் கால், தொப்புள் கொடி, காம உணர்வுகள், தங்கும் விடுதிகள் என இவை அனைத்துமே பூரத்தின் அடையாளங்கள்; வடிவங்கள்!

தேவதை - பார்வதி மற்றும் அர்யமான்
இந்த அர்யமான் என்பவர் திருமணங்களை நடத்தித் தருபவர். இவரே திருமணத்தின் சாட்சியாகவும் இருப்பவர்.

அதிதேவதை - திருவில்லிபுத்தூர் ஆண்டாள்

மிருகம் - பெண் எலி

பட்சி - பெண் கழுகு

விருட்சம் - பலாமரம்

மலர் - வெண் தாமரை

தானியம் - மொச்சை

ஆலயம் - திருமணஞ்சேரி

சரி... பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு யோகங்களை தரக்கூடிய நட்சத்திரங்கள், நட்சத்திரக்காரர்கள் யார்யார் என்று பார்ப்போமா?
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்த முயற்சியும் முழு வெற்றியைத் தரும். இன்னும் சொல்லப்போனால் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும். இந்த நட்சத்திர நண்பர்கள் அமைவதும், வாழ்க்கைத்துணை அமைவதும் மிகப்பெரிய அதிர்ஷ்டம்!


சொத்துக்கள் வாங்க, ஆபரணங்கள் வாங்க, முதலீடுகள் செய்ய ஏற்ற நட்சத்திரங்கள்-
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம். இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் பத்திரப்பதிவுகள் செய்யவும். சொத்துக்கள் வாங்கவும் விற்கவும் உகந்த நாட்கள். இந்தநாட்களில் என்ன செய்தாலும் அவை பன்மடங்காகப் பெருகும். இந்த நட்சத்திர நண்பர்கள் கிடைப்பதும், வாழ்க்கைத் துணையாக அமைவதும் பேரதிர்ஷ்டம்.

கடன் பெற, கடன் அடைக்க, வேலைக்கு மனு செய்ய, வேலையில் சேர சாதகமான நட்சத்திரங்கள்-
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி -
இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் கடன் பெறலாம். கேட்டது கிடைக்கும். கடனை அடைக்கலாம். கடனில் இருந்து முழுமையாக விடுபடலாம்.
மேலும், நாள்பட்ட நோய் நீங்க மருத்துவம் தொடங்கவும் இந்த நட்சத்திர நாட்கள் மிக மிக உகந்தவை. மருந்து உண்ணத் தொடங்கினால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். மேலும் எதிரிகளை வெல்லலாம். எதிர்ப்புகளை அடக்க நடவடிக்கைகள் எடுக்கலாம். . தொழில் தொடர்பான வழக்குகள் தொடுக்கவும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். இந்த நட்சத்திரத்தில் நண்பர்கள் கிடைப்பதும், வாழ்க்கைத்துணை அமைவதும் நல்ல உறுதுணையாக இருக்கும். பக்கபலமாகத் திகழ்வார்கள்.

நன்மைகள் மட்டுமே நடக்கவும், வியாபாரம் மற்றும் தொழில் பயணங்கள், முக்கிய சந்திப்புகள் நிகழ்த்தவும் உகந்த நட்சத்திரங்கள் - பலன் தரும் நட்சத்திரக்காரர்கள் -
ஆயில்யம் - கேட்டை - ரேவதி.
இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கண்டவைகளை செய்யலாம். மேலும் பயணங்கள் செய்ய, சுற்றுலா செல்ல, வெளிநாடுகளில் வேலை கிடைக்க, லாபகரமான ஒப்பந்தங்கள் போடவும், நண்பர்கள், வாழ்க்கைத்துணை முதலானோர் இந்த நட்சத்திரங்களில் அமைவதும் சிறப்பான நன்மைகள் கிடைக்கக் காரணமாக அமையும்!


இன்னும் சொல்லப் போனால், இன்னும் இன்னுமாக, எல்லையே இல்லாத நன்மைகள் நடக்க உதவும் நட்சத்திக்காரர்கள் யார் தெரியுமா?
அஸ்வினி - மகம் - மூலம்.
இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எதுவும் இருமடங்கு நன்மைகள் கிடைக்கச் செய்யும். வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்ள, சுப விசேஷங்கள் நிகழ்த்தவும் மிக அருமையான நாட்கள். மேலும் வாழ்க்கைத்துணையாக அமைவதும் நண்பர்கள் கிடைப்பதும் மொத்த வாழ்க்கையையே சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் நிறைவாகவும் மிக உயர்வதாகவும் ஆக்கித்தரும்!


எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளக்கூடாத, எதைச் செய்தாலும் பூர நட்சத்திரக்காரர்களாகிய உங்களுக்கு எதிராக திரும்பக்கூடிய நட்சத்திரங்கள் - ரோகிணி- அஸ்தம் - திருவோணம். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் எதையும் செய்யாமலிருப்பது நல்லது. அப்படிச் செய்தால், கடுமையான பாதிப்புகளைச் சந்திக்கவேண்டி வரும். பயணங்களில் ஆபத்து, தொழில் மற்றும் வியாபார விஷயங்களில் எதிர்பாராத தோல்விகளும் உண்டாகும். நண்பர்களாக அமைந்தால் துரோகத்தை சந்திக்க வேண்டி வரும். வாழ்க்கைத்துணையாக இந்த நட்சத்திரக்காரர்கள் அமைந்தால், வாழ்க்கை மொத்தமும் நிம்மதியே இருக்காது. பல இன்னல்களைச் சந்திக்கவேண்டியிருக்கும்.

திருவாதிரை, சுவாதி, சதயம் - இந்த நட்சத்திர நாட்கள், நட்சத்திரக்காரர்கள், உங்களுக்கு எந்த நற்பலன்களும் கிடைக்காத நட்சத்திரங்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இந்த நட்சத்திரநாளில் நீங்கள் எது செய்தாலும் உங்கள் உழைப்பு உங்களுக்கு பயன்படாது. ஆனால் அதேசமயம் மற்றவர்களுக்கு ஆதாயமாக மாறிவிடும். தான தர்ம காரியங்கள் செய்ய, நண்பர்கள் அமைந்தால் சதா சர்வகாலமும் நீங்கள் உதவி்செய்து கொண்டே இருக்கக்கூடிய நட்சத்திரங்கள் இவையெல்லாம் என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள். இந்த நட்சத்திர நாட்களில், மேற்கொள்ளும் எதுவும் உங்களுக்கு பயன்தராது, பிறருக்கு மட்டுமே பயன்படும் என்பதை மறந்துவிடாதீர்கள். .

பூசம், அனுஷம், உத்திரட்டாதி - தினம்தினம் வேதனைகளை தரக்கூடிய, எதிர்ப்புகளையும் எதிரிகளையும் தரக்கூடிய, எந்த முயற்சியும் உங்களுக்கு எதிராக திரும்பி பாதிப்பை தரக்கூடிய நட்சத்திரங்கள் இவை. இந்த நட்சத்திர நாட்களில் எதுவும் செய்யாமலிருப்பதே உத்தமம். நண்பர்களாக அமைந்தால் நிச்சயம் ஒருநாள் சிக்கலில் சிக்க வைத்துவிடுவார், இந்த நட்சத்திரக்காரர்கள், வாழ்க்கைத்துணையாக வராமலிருப்பது மிக மிக நல்லது.

உங்கள் நட்சத்திரமான பூரம் மற்றும் பரணி - பூராடம் இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் ஆண்கள் திருமணம் செய்யக்கூடாது. பெண்களுக்கு தோஷம் இல்லை. மேலும் இந்தநாட்களில், முடி மற்றும் நகம் கூட வெட்டக்கூடாது, தாம்பத்தியம் கூடவேகூடாது. இந்த நட்சத்திரம் வரும் நாட்களில், பூர நட்சத்திரக்காரர்கள், எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது. மற்றபடி எல்லாவிதமான செயல்களும் செய்யலாம்.

அடுத்து... பூரம் நட்சத்திரத்தின் நான்கு பாதங்களுக்குமான தனித்தனி குணங்கள், கேரக்டர்கள், பலன்கள், தெய்வங்கள் முதலானவற்றைச் சொல்கிறேன்.
- வளரும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்