பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பூரட்டாதி:
கிரகமாற்றம்:
08-07-2020 அன்று பகல் 11.13 மணிக்கு குரு பகவான் உங்களின் இருபத்தி நான்காம் நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.
01-09-2020 அன்று பகல் 2.16 மணிக்கு ராகு பகவான் உங்களின் எட்டாம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்
01-09-2020 அன்று பகல் 2.16 மணிக்கு கேது பகவான் உங்களின் இருபத்தி ஒன்றாம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திற்கு மாறுகிறார்.
15-11-2020 அன்று இரவு 9.48 மணிக்கு குரு பகவான் உங்களின் இருபத்தி நான்காம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திற்கு மாறுகிறார்.
27-12-2020 அன்று காலை 5.22 மணிக்கு சனி பகவான் உங்களின் இருபத்தி நான்காம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திற்கு மாறுகிறார்.
05-04-2021 அன்று இரவு 1.09 மணிக்கு குரு பகவான் அதிசாரம் பெற்று இருபத்தி ஆறாம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.
சமயத்திற்கு தகுந்தாற்போல் கருத்துக்களை மாற்றிக்கொள்ளும் பூரட்டாதி நட்சத்திர அன்பர்களே.
இந்த புத்தாண்டில் உங்களுக்கு துன்பம் வருவதுபோல் இருக்குமே தவிர, ஆனால் வராது. மனதில் ஏதேனும் கவலை, பயம் அவ்வப்போது ஏற்படும். உங்களது பேச்சே உங்களுக்கு எதிர்ப்பை உண்டாக்கலாம். யோசித்துப் பேசுவது நல்லது. ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும்.
தொழில் வியாபாரம் மூலம் வர வேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும். ஆர்டர்களுக்காக இருந்த அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பம் இல்லாத மாற்றம் வரலாம்.
குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.
பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை அந்த காரியம் முடியுமோ, முடியாதோ என்ற மனக் கவலை இருக்கும். வீண் அலைச்சல் குறையும்.
கலைத்துறையினருக்கு அடுத்தவரை பார்த்து எதையும் செய்யத் தோன்றலாம்.
அரசியல்வாதிகளுக்கு வீண் அலைச்சல் குறையும். சிக்கலான பிரச்சினைகளில் நல்ல முடிவு கிடைக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவது பற்றிய மனக்கவலை இருக்கும். சகமாணவர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
+: பணநெருக்கடி தீரும்
-: பிடிவாதத்தை தளர்த்த வேண்டும்
பரிகாரம்: தக்ஷிணாமுர்த்தியை வணங்க மனக்கவலை நீங்கும். காரிய வெற்றி உண்டாகும்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago