சார்வரி தமிழ் புத்தாண்டு பலன்கள் ; ரோகிணி நட்சத்திரப் பலன்கள்! 

By செய்திப்பிரிவு

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ரோகிணி:
கிரகமாற்றம்:

08-07-2020 அன்று பகல் 11.13 மணிக்கு குரு பகவான் உங்களின் பதினெட்டாம் நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.
01-09-2020 அன்று பகல் 2.16 மணிக்கு ராகு பகவான் உங்களின் இரண்டாம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்
01-09-2020 அன்று பகல் 2.16 மணிக்கு கேது பகவான் உங்களின் பதினைந்தாம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திற்கு மாறுகிறார்.
15-11-2020 அன்று இரவு 9.48 மணிக்கு குரு பகவான் உங்களின் பதினெட்டாம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திற்கு மாறுகிறார்.
27-12-2020 அன்று காலை 5.22 மணிக்கு சனி பகவான் உங்களின் பதினெட்டாம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திற்கு மாறுகிறார்.
05-04-2021 அன்று இரவு 1.09 மணிக்கு குரு பகவான் அதிசாரம் பெற்று இருபதாம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.
சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படும் உயர்ந்த குணமுடைய ரோகிணி நட்சத்திர அன்பர்களே.
இந்த புத்தாண்டில் எதையும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடுபடும் மனநிலை உண்டாகும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். காரிய அனுகூலங்களும் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். சூரியன் சுக்கிரன் சஞ்சாரத்தால் வீடு, வாகனங்கள் தொடர்பான செலவு ஏற்படும்.
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். லாபம் கூடும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணிகளால் டென்ஷன் அடைவார்கள். எதிர்பார்த்தபடி சக ஊழியர்களால் உதவிகள் கிடைக்கும்.
குடும்பத்தில் சில்லறை சண்டைகளும் பூசல்களும் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகும். உறவினர்களுடன் கருத்துவேற்றுமை வரலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பது நல்லது.
பெண்களுக்கு எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் அதுபற்றி ஒருமுறைக்கு பலமுறை யோசித்தபின் ஈடுபடுவது நல்லது. துணிச்சல் அதிகரிக்கும்.
கலைத்துறையினருக்கு அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். மேலிடம் உங்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளும்.
மாணவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சி மேற்கொள்வீர்கள்.


+: குடும்பத்தில் இருந்து வந்த குழப்பம் அகலும்
-: எதிர்பாராத வெளியூர் பயணம் ஏற்படலாம்

பரிகாரம்: பெருமாளுக்கு துளசி சமர்ப்பித்து அர்ச்சனை செய்து வணங்க,காரிய வெற்றி உண்டாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்